நபி முஹம்மத் ﷺ அவர்களின் பெற்றோர்களின் திருமணம் தூய்மையானது
முஹம்மத் ﷺ அவர்களின் பெற்றோர்களின் திருமணம் தூய்மையானது
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا افْتَرَقَ النَّاسُ فِرْقَتَيْنِ إِلَّا جَعَلَنِي اللَّهُ فِي خَيْرِهَا فَأُخْرِجْتُ مِنْ بَيْنِ أَبَوِيَّ فَلَمْ يُصِبْنِي شَيْءٌ مِنْ عُهْرِ الْجَاهِلِيَّةِ. وَخَرَجْتُ مِنْ نِكَاحٍ وَلَمْ أَخْرُجْ مِنْ سِفَاحٍ مِنْ لَدُنْ آدَمَ حَتَّى انْتَهَيْتُ إِلَى أَبِي وَأُمِّي، فَأَنَا خَيْرُكُمْ نَفْسًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால், அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என் பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் திருமணத்தின் மூலம் வெளியானேன். விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட வில்லை. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களில் சிறந்தவன்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 360 பைஹகி” தலாயிலுன் நுப்வா 582
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَدَنِي مِنْ نِكَاحِ أَهْلِ الْجَاهِلِيَّةِ شَيْءٌ، مَا وَلَدَنِي إِلَّا نِكَاحٌ كَنِكَاحِ الْإِسْلَامِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறியாமை காலத்து திருமண வழிமுறையில் நான் பிறக்கவில்லை. இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த திருமணத்தின் வாயிலாகவே நான் பிறந்தேன்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 13845 தப்ரானி” கபீர் 10812 இப்னு அஸாகிர் 1207
عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ خَرَجْتُ مِنْ نِكَاحٍ وَلَمْ أَخْرُجْ مِنْ سِفَاحٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் திருமணத்தின் மூலம் வெளியானேன். விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை.
அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ஸீர் இப்னு கஸீர் 2/403 இப்னு அதி 244
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجْتُ مِنْ لَدُنْ آدَمَ مِنْ نِكَاحٍ غَيْرِ سِفَاحٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (தூய) திருமணத்தின் மூலம் ஆதாமுடைய வழியாக நான் வெளிப்பட்டேன் விபச்சாரத்தின் மூலம் அல்ல.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரீஹ் தமஸ்க் 3/400
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجْتُ مِنْ نِكَاحٍ غَيْرِ سِفَاحٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் திருமணத்தின் மூலம் வெளிப்பட்டேன் விபச்சாரத்தின் மூலம் அல்ல.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரீஹ் தமஸ்க் 3/401
عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَخْرَجَنِي مِنَ النِّكَاحِ وَلَمْ يُخْرِجْنِي مِنَ السِّفَاحِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் திருமணத்தின் மூலமே என்னை வெளிப்படுத்தினான். விபச்சாரத்தின் மூலம் அல்லாஹ் என்னை வெளிப்படுத்த வில்லை.
அறிவிப்பவர் :- தந்தை கூறியதாக ஜஹ்பர் பாகிர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அவர்கள். ஆதாரம் பிதாயா வன் நிஹாயா 2/ 314
عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي خَرَجْتُ مِنْ نِكَاحٍ وَلَمْ أَخْرُجْ مِنْ سِفَاحٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நிச்சயமாக நான் திருமணத்தின் மூலமே (என் பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் நிக்காஹ் உறவின் மூலமே) வெளிப்படுத்தப்பட்டேன். விபச்சார உறவின் மூலம் அல்ல.
அறிவிப்பவர் :- தந்தை கூறியதாக ஜஹ்பர் பாகிர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் கன்ஷுல் உம்மால் 32014 தப்ஸீர் இப்னு கஸீர் 2/403
அப்துல் முத்தலிபின் அன்பு மனைவி பாத்திமா அம்மையார் அவர்களின் மணிவயிற்றில் பிறந்தார்கள் தான் அழகு மகன் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அவர்களுக்கு தபீஹ் அதாவது பலியிடப்பட்டவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர்கள் மிக அழகிய தோற்றமும் ஒழுக்கமும் மேலும் தந்தையைப் போல மிகுந்த இரக்க குணமும் வாரி வழங்கும் வள்ளலாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர்களுக்கு இருபத்தி நான்கு வயதான போது மதீனா நகரிலிருந்து வந்து மக்காவில் உஹைபின் வீட்டில் தங்கியிருந்த ஜுஹ்ரா கோத்திரத்தின் தலைவர் வஹ்ப் என்பவரின் அழகுத்திருமகள் ஆமினா ரலியல்லாஹு அன்ஹா என்ற மங்கையை இஸ்லாமிய முறைப்படி அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெண் போசிச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர் தந்தை அப்துல் முத்தலிப் அவர்கள்.
நூல் ஆதாரம் :- இப்னு கஸீர்” பிதாயா வன் நிஹாயா 2/231
இதனால் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அறியாமை காலத்து திருமண வழிமுறையில் நான் பிறக்கவில்லை. இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த திருமணத்தின் வாயிலாகவே நான் பிறந்தேன் என்ற நற்செய்தியை நமக்கு குறிப்பிட்டு கூறியுள்ளார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்