23) சூனியமும் கண்திருஷ்டியும்
சூனியமும் கண்திருஷ்டியும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
சூனியம் ஷைத்தானின் வேலையாகும்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَال سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّشْرَةِ فَقَالَ مِنْ عَمَلِ الشَّيْطَانِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சூனியம் பற்றி கேட்கப்பட்ட போது, ‘அது ஷைத்தானின் வேலையாகும்’ என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 3868
இணைவக்காதீர்கள், சூனியம் செய்யாதீர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا المُوبِقَاتِ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள். இறைவனுக்கு இணைவைப்பதும் இன்னும் சூனியம் செய்வதும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5764 முஸ்லிம் 89 அபூதாவூத் 2874
சூனியக்காரர்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்
عَنْ جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ادْفِنُوا دماءَكم وأشعارَكم وأظفارَكم لا تَلْعَبُ بها السَّحَرَةُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “உங்களின் இரத்தம், முடிகள், நகங்கள், ஆகியவற்றைப் புதைத்து விடுங்கள். சூனியக்காரர்கள் அவற்றை எடுத்து விட வேண்டாம்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பிர்தௌஸி, 336 தஹபி 4/460
சூனியத்தின் மூலம் ஷைத்தான் ஒருவரின் மனோநிலையை திசை திருப்புவதை போன்று நீங்களும் உங்கள் தவறான சொற்பொழிவு பேச்சின் மூலம் அப்பாவி மக்களின் உணர்வை திசை திருப்பாதீர்கள்
عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلاَنِ مِنَ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொழிவும் கருத்துச் செறிவும் மிக்கதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள். “நிச்சயமாகப் சொற்பொழிவுகளில் (பேச்சில்) சிஹ்ர் சூனியம் உள்ளது” என்பதாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஸைய்த் இப்னு அஸ்லம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5146 அபூதாவூத் 5011 திர்மிதி 2028
சூனியம் செய்யாதீர்கள், சூனியம் செய்யச் சொல்லாதீர்கள், அதற்கு உடந்தையாகவும் முன் நிற்காதீர்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنَّا مَنْ تَسَحَّرَ أَوْ تُسِحِّرَ لَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “யாரெல்லாம் சூனியம் செய்கிறாரோ அல்லது சூனியம் செய்யச் சொல்கிறாரோ அவர் எம்மை சார்ந்தவரல்ல.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபரானி 2423
சோதிடர்களிடம் செல்லாதீர்கள், அவர்கள் சொல்வதை கேட்காதீர்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ المَلاَئِكَةَ تَنْزِلُ فِي العَنَانِ وَهُوَ السَّحَابُ فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّمَاءِ فَتَسْتَرِقُ الشَّيَاطِينُ السَّمْعَ فَتَسْمَعُهُ فَتُوحِيهِ إِلَى الكُهَّانِ فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புஹாரி 3063 முஸ்லிம் 3210
கண்திருஷ்டியை பயந்து கொள்ளுங்கள்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ الله عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْثَرُ مَنْ يَمُوتُ مِنْ أُمَّتِي بَعْدَ قَضَاءِ اللهِ وَقَدَرِهِ بِالعَيْنِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய சமூகத்திலிருந்து அதிகமான மக்கள் கண்திருஷ்டியால் மரணிக்கிறார்கள்
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் பஸ்ஸார் 3/403
ஒன்றை பார்க்கும் போது நல்ல எண்ணத்தோடு பாருங்கள், தீய எண்ணத்தோடு பார்க்காதீர்கள்
عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ اغْتَسَلَ سَهْلُ بْنُ حُنَيْفٍ بِالْخَرَّارِ فَنَزَعَ جُبَّةً كَانَتْ عَلَيْهِ وَعَامِرُ بْنُ رَبِيعَةَ يَنْظُرُ قَالَ وَكَانَ رَجُلًا أَبْيَضَ حَسَنَ الْجِلْدِ فَقَالَ لَهُ عَامِرٌ مَا رَأَيْتُ كَالْيَوْمِ وَلَا جَلْدَ عَذْرَاءَ فَوُعِكَ سَهْلٌ مَكَانَهُ وَاشْتَدَّ وَعْكُهُ فَأُتِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُخْبِرَ أَنَّ سَهْلًا قَدْ وُعِكَ وَأَنَّهُ غَيْرُ رَائِحٍ مَعَكَ فَأَتَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ سَهْلٌ الَّذِي كَانَ مِنْ شَأْنِ عَامِرٍ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ؟ أَلَا بَرَّكْتَ إِنَّ الْعَيْنَ حَقٌّ تَوَضَّأْ لَهُ فَتَوَضَّأَ لَهُ عَامِرٌ فَرَاحَ سَهْلٌ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِهِ بَأْسٌ
ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குளிப்பதற்காகச் சென்று ஆடையைக் கழட்டினார்கள். அப்போது ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வென்மையானவராகவும், அழகானவராகவும் இருந்தார். அவரை பார்த்த ஆமிர் இப்னு ரபீஆ ‘இதைப் போன்ற அழகான உடம்பை நான் பார்த்ததில்லை.’ என்று கூறியதும் மயக்கமேற்பட்டு ஸஹ்ல் இப்னு ஹுனைப் அவர்கள் விழுந்து விட்டார். மயக்கம் மென்மேலும் அதிகமாகியது ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதற்குக் காரணம் என்ன என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறப்பட்ட போது. அதற்கு அவர்கள் ‘உங்கள் சகோதரரைக் கொலை செய்யப் பார்க்கிறீர்களா? மேலும் ஆச்சரியமான ஒன்றை உங்களுடைய சகோதரரிடத்தில் கண்டால் ‘அல்லாஹ் உனக்கு பரகத்துச் செய்வானாக என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? என்ற கேள்வியை கேட்டுவிட்டு பின்னர் கூறினார்கள் கண்திருஷ்டி உண்மையாகும். வுழுச் செய்துவிட்டு அந்த நீரைக் அவர்களுக்கு கொடுங்கள்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வுழுச் செய்து கொடுத்தார். ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நோய் நீங்கியவராக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சென்றார்கள.
அறிவிப்பவர் :- ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு ஹிப்பான், நஸாயி, அஹ்மது 15550
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்