23) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் விளக்கு தீப்பந்தம் ஏற்றலாமா?

300

23) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் விளக்கு தீப்பந்தம் ஏற்றலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي صَالِحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் அதை (மஸ்ஜித்) பள்ளிவாசலாக எடுத்துக் கொள்பவர்களையும் சபித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3236, திர்மிதி 320, நஸாயி 2043, அஹ்மது 2030, 2603, 2984, 3118

 

♦️மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஸாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பத்தகுந்தவர் பலவீனமானவர் என்ற கருத்துக்களை இமாம் இப்னு ஹஜர், இமாம் இப்னு ஹிப்பான், இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு மதனி, இமாம் நஸாயி இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் தாரகுத்னி, மற்றும் பலர் கூறியுள்ளார்கள்.

 

♦️பெண்கள் ஸியாரத் செய்வது பற்றிய தலைப்பில் மேற்கூறிய ஹதீஸ் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுருக்கமாக பார்க்கலாம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் ஸியாரத் செய்வதையும் அதில் விளக்கு ஏற்றுவதையும் அதனை மஸ்ஜித் வணக்கத்தலாமாக எடுத்துக் கொள்ளும் பெண்களை சபித்தார்கள். அதன் பின்னர் கப்ருகளை ஸியாரத் செய்ய அனுமதி கொடுத்தார்கள். அதனை மஸ்ஜித் வணக்கத்தலாமாக எடுத்துக் கொள்வதை முற்றாக தடுத்தார்கள் என்று பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் கப்ருகளில் விளக்கு ஏற்றுவது தடை என்பதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெறவில்லை. இது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு கப்ருகளை நோக்கி) கூறுவார்கள். இந்த கப்ருஸ்தானங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1773 இப்னு மாஜா 1546

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு இரவு நேரங்களிலும் கப்ருகளை ஸியாரத் செய்ய செல்பவர்களாக இருந்துள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️இன்றைய காலகட்டத்தில் மின்விளக்குகள் அதிகளவில் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் இவ்வாறான வசதிகள் இல்லை இருப்பினும் இரவு நேரங்களில் வீடுகளிலும் மஸ்ஜிதுகளிலும் வெளிச்சத்திற்காக வேண்டி விளக்கு எரிய வைப்பது நடைமுறையில் இருந்தது. அதேபோன்று தான் இரவு நேரங்களில் கப்ருகளை ஸியாரத் செய்ய செல்பவர்கள் தீப்பந்தம் அல்லது விளக்கு போன்றவைகளை எடுத்துச் செல்வதும் நடைமுறையில் இருந்துள்ளது.

 

♦️இவைகளை காரணமாக வைத்து தான் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அதிகளவில் மக்கள் இரவு பகல் போன்ற நேரங்களில் ஸியாரத் செய்ய வரும் காரணத்தால் அங்கு விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த செயல் வாழையடி வாழையாக இன்னும் நடைமுறையில் உள்ளது. இதன் நோக்கம் இரவு நேரங்களில் கப்ருகளை ஸியாரத் செய்ய வருபவர்கள் விளக்கின் வெளிச்சத்தின் மூலம் நல்ல முறையில் ஸியாரத் செய்ய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

குறிப்பு :- இன்றைய காலகட்டத்தில் மின்விளக்குகள் அதிகளவில் இருக்கின்ற காரணத்தால். நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் விளக்கு ஏற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு ஏற்றுவதன் மூலம் நன்மை கிடைக்கும் கட்டாயம் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூற முற்படுவது முற்றிலும் தவறாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.