நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு பற்றிய பாடம்

334

بَابُ مَوْلِدِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு பற்றிய பாடம்

 

 

 

وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமுல் பீல் என அழைக்கப்படும் யானை ஆண்டில் பிறந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி, இப்னு அபீ ஷைபா, இப்னு அஸாகிர்” தாரீஹ் 2/35 ஹாகிம்” முஸ்தத்ரக் 4180 ஸுபுலுல் ஹுதா 1/335 அப்துல் பர்ரு” இஸ்திஆப் 1/36

 

குறிப்பு :- யானை ஆண்டு என்பது அபிஸீனியா மன்னரின் ஆட்சியின் கீழிருந்த யமன் மாகாணத்தின் கவர்னரான அப்ரஹா அல்அஷ்ரம் என்பவன் கஃபதுல்லாஹ்வை இடித்துத் தரைமட்டமாக்கும் நோக்கத்தில் யானைப்படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு வந்த போது இறைவன் அப்ரஹாவையும் அவனது யானைப்படையையும் அழித்து விட்டான். இதனால் தான் அந்த ஆண்டை ஆமுல் பீல் (யானை வருடம்) யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.

 

 

 

وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْر رَبِيعٍ الْأَوَّلِ

 

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீ ஷைபா, ஹாகிம் 2/603 ஸீரத் இப்னு ஹிஷாம் 1/211 ஸுபுலுல் ஹுதா 1/334

 

 

وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻟِﺎﺛْﻨَﺘَﻲْ ﻋَﺸْﺮَﺓَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறை (12) பன்னி ரெண்டில் பிறந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 2/603 இப்னு ஜரீர்” தாரீஹ் 1/162 பைஹகி” தலாயிலுன் நுப்வா 1/174

 

 

وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை அன்று பிறந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- கதாத்த அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் :- முஸ்லிம் 1162,198 அபூ தாவூத் 2426முஸ்னத் அஹ்மத் 22537, 22541 மிஷ்காத் 2045

 

 

وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ بِالدَّارِ الْمَعْرُوفَةِ بِمُحَمَّدِ بْنِ يُوسُفَ” تقع الدار فِي شِعْبِ أَبِي طَالِب

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷிஃபு ஹிஷாம் என்ற பகுதியில் உள்ள அபீதாலிபின் வீடு (அதாவது தற்போது) முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று அறியப்பட்ட இடத்தில் அவர்கள் பிறந்தார்கள். அந்த வீடு அமைந்துள்ள இடம் மக்கா நகரில் உள்ளது.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் ஷிபா அவர்கள். ஆதாரம் நூருல் யகீன் 9 முஹம்மதுர் ரசூலுல்லாஹ் 12 இப்திகாவுல் உஸூல் 16 அல்புன்யானுள் மர்ஸுஸ் 29,40,76 ரஹீக் அல் மக்தூம் 41

 

 

وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻟَﻴْﻠَﺔً” وَقْتُ طُلُوعَ فَجْرِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் (கடைசி பகுதி) சுபஹ் உதயமாகும் நேரத்தில் பிறந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் ஷிபா அவர்கள். ஆதாரம் அபூ நுஅய்யும்” தலாயிலுன் நுப்வா 1/174 இப்னு அஸாகிர்” தாரிஹ் தமஸ்க் 3/404

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.