24) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் எண்ணெய் வைப்பதும் அதனை பூசுவதும்
24) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் எண்ணெய் வைப்பதும் அதனை பூசுவதும்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحِجْرِ قَالَ لَا تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ إِلَّا أَنْ تَكُونُوا بَاكِينَ ثُمَّ قَنَّعَ رَأْسَهُ وَأَسْرَعَ السَّيْرَ حَتَّى أَجَازَ الْوَادِيَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஹிஜ்ர்’ பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, ‘தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் நுழையும்போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுதுகொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள்’ என்று கூறினார்கள். பிறகு, தம் தலையை (தம் மேலங்கியால்) மறைத்துக்கொண்டு அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை வேக வேகமாகப் பயணித்தார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4419
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْضَ ثَمُودَ الْحِجْرَ فَاسْتَقَوْا مِنْ بِئْرِهَا وَاعْتَجَنُوا بِهِ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا مِنْ بِئْرِهَا وَأَنْ يَعْلِفُوا الْإِبِلَ الْعَجِينَ وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنْ الْبِئْرِ الَّتِي كَانَتْ تَرِدُهَا النَّاقَةُ
மக்கள் (தபூக் போரின் போது) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான ‘ஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3379 முஸ்லிம் 2981
♦️ஆரம்ப ஹதீஸில் இறைவனின் சோதனை காரணமாக அழிக்கப்பட்ட நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமூத் கூட்டத்திற்கு இன்னுமும் சோதனை இறங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் அடுத்த ஹதீஸில் அவர்கள் அழிக்கப்பட்ட இடத்திற்கும் அவர்கள் பயன்படுத்திய கிணறு அதிலுள்ள தண்ணீரிலும் அந்த சோதனை இறங்கி கொண்டே இருக்கிறது என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெளிவு படுத்துகிறது.
♦️இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைவனின் சோதனை காரணமாக அழிக்கப்பட்ட இடங்களிலும் அதை சூழவுள்ள பகுதிகளிலும் இறைவனின் சோதனை மறுமை நாள் வரை இறங்கிக் கொண்டே இருக்கும். இது போன்ற இடங்களில் தண்ணீர் அது அல்லாத பாவனை பொருட்கள் இருந்தாலும் அதிலும் அந்த சோதனை இறங்கும். அதுபோல இறைவனின் இறைநெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்கள் மரணித்த இடங்களிளும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ரஹ்மத்து மறுமை நாள் வரை இறங்கிக் கொண்டே இருக்கும். இது போன்ற இடங்களில் தண்ணீர் எண்ணெய் அது அல்லாத பாவனை பொருட்களை வைப்பதன் மூலம் அதிலும் அந்த ரஹ்மத்து இறங்கும் என்ற கருத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
குறிப்பு :- இறைவனின் சோதனை காரணமாக அழிக்கப்பட்ட இடங்களிலும் அதை சூழவுள்ள பகுதிகளிலும் இன்னுமும் சோதனை இறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு செல்பவர்கள் நிதானமாக இருக்க வேண்டும். அதுபோல இறைவனின் இறைநெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்கள் மரணித்த இடங்களிலும் அதை சூழவுள்ள பகுதிகளிலும் ரஹ்மத்து இன்னுமும் இறங்கிக் கொண்டே இருக்கின்றது. அங்கு எண்ணெய் அது அல்லாத பாவனை பொருட்கள் இருந்தாலும் சரி அதிலும் ரஹ்மத்து இறங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது போன்ற இடங்களுக்கு ஸியாரத் செய்ய செல்பவர்கள் பரக்கத்திற்காக வேண்டி அங்கிருக்கும் எண்ணெய் அது அல்லாத பொருட்களை அங்குள்ள பொருப்புதாரிகளின் அனுமதியுடன் அவைகளை எடுத்துக் கொள்வதில் எவ்வித குற்றமும் இல்லை.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்