24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- ஈஸா (ஏசு நாதர், ஜீஸஸ்)
♦️சிறப்பு பெயர் :- மஸீஹ்
♦️பிறப்பு :- கிமு. 0001
ஹதீஸ்களின் வெளிச்சத்தில் பார்க்கும் போது நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஹர்ரம் மாதம் பிறை 10 ஆஷுரா தினத்தில் பிறந்தார்கள்.
♦️பிறந்த இடம் :- பைத்துல் லஹ்ம் என்னும் இடத்தில் வைத்து அவர்கள் பிறந்தார்கள்.
♦️தாய் பெயர் :- மர்யம்
♦️தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️அற்புதம் :- தந்தை இன்றி பிறந்த குழந்தை பற்றி மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேள்வி கேட்டனர், குழந்தையாக இருந்த நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசினார்கள், மேலும் 8ம் நாள் அவர்களுக்கு விருத்தசேதனம் (கத்னா) செய்து ‘ஈஸா‘ என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன, மேலும் வெண்குஷ்டம் கருங்குஷ்டம் மரணித்தோரை உயிர் பிக்கும் ஆற்றலை அற்புதத்தை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான்.
♦️வேதம் :- இன்ஜீல்
இன்ஜீல் வேதம் ரமலான் மாதம் 18 ம் அன்று இறக்கப்பட்டது.
♦️மொழி :- சுர்யானீ (அரேமிய பாசை)
♦️வானம் :- நபி ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்கள் விண்ணகத்தில் 4ம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது. கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகில் இன்னும் மரணிக்கவில்லை.
مَكْتُوبٌ في التّوْرَاةِ صِفَةُ مُحَمّدٍ، وَصِفَةُ عِيسَى بنُ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ. قالَ فقالَ أَبُو مَوْدُودٍ وقَدْ بَقِيَ في البَيْتِ مَوْضِعُ قَبْرٍ
தவ்ராத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வர்ணனையும்; ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற அவர்களது வர்ணனையும் எழுதப்பட்டுள்ளது. அபூ மவ்தூது கூறுகிறார்: (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடங்கியுள்ள ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது) வீட்டில் ஒரு கப்ரின் இடமும் உள்ளது.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3617
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயர்த்தப்பட்ட இடம் பலஸ்தீன் (யூஸுப் நஜ்ஜாரின் வீடாகும்) மேலும் அவர்கள் மீண்டும் பூமிக்கு வந்து சீர்திருத்தம் செய்வார்கள் பின்னர் அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்படும் இடம்
நாடு ஷவூதி அரேபியா மதினா நகர் மஸ்ஜிதுன் நபவி பள்ளி அதாவது ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீடு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு அருகில் உள்ளது.
♦️குறிப்பு :- நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிற்காலத்தில் இவ்வுலகிற்கு வருவார்கள். சீர்திருத்தம் செய்வார்கள். பின்னர் இவ்வுலகில் மரணிப்பவர்கள். அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்படும் இடம் ஷவூதி அரேபியா நாட்டிலுள்ள மதீனா நகரில் மஸ்ஜித் நபவி உள்பகுதியில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீபுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்டுவார்கள்.
♦️குர்ஆன் :- நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்