25 நபிமார்களையே அல்லாஹ் பல்வேறு சந்தர்ப்பங்களில் சோதித்துள்ளான். அவை பின்வருமாறு

22

25 நபிமார்களையே அல்லாஹ் பல்வேறு சந்தர்ப்பங்களில் சோதித்துள்ளான். அவை பின்வருமாறு

 

அதில் சிலவற்றை புகைப்படங்களில் பார்வையிடுங்கள். எம்மை எடுத்துக் கொள்வோம். நாம் நல்லதை தான் சொல்கிறோம் செய்கிறோம். முடிந்த வரை பெரும்பாலான பாவங்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறோம். அப்படி இருந்தும் அல்லாஹ் எம்மை தான் அதிகளவில் சோதிக்கிறான் என்று நாம் பல முறை யோசித்துள்ளோம். மார்க்க விஷயத்தை விட்டு விட்டு உலக விஷயத்தில் மூழ்கி விடலாம் என்ற மனோநிலைக்கும் தள்ளப்பட்டோம். அப்படி நீங்களும் பல சந்தர்ப்பங்களில் யோசித்து இருப்பீர்கள். நாம் அறிந்த எதார்த்தத்தை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட கண்ணியத்திற்குரிய இருபத்தி ஐந்து நபிமார்கள் ரஸூல்மார்களையே அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில் சோதித்து இருக்கின்றான் என்றால்! நம்மை போன்ற சாதாரண மனிதர்களை அவன் விட்டு விடுவானா? என்பதனை சற்று சிந்தித்துப் பாருங்கள். 
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அல்லாஹ் உங்களை அதிகளவில் சோதிக்கிறான் என்றால் அவன் உங்கள் மீது நேசம் கொல்கிறான். உங்களை பரிசோதித்து உங்கள் இறையச்சம் எந்த அளவுக்கு மிகைத்திருக்கிறது என்பதனை அவன் நன்கறிகிறான். உனது பொறுமையைக் கையாளும் தருணத்தில், நிச்சயம் அல்லாஹ்விடம் இருந்து மகத்துவம் மிக்கவர்கள் அடைந்து கொண்ட மாபெரும் பதவிகள் யாவும் இவ்வுலகில் அல்லது மறுவுலகில் நிச்சயம் உன்னை வந்தடைந்தே தீரும் என்ற இறைநம்பிக்கையை மனதில் ஆழமாக பதிந்து கொள்! அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
 

 

 

அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.