26) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு போர்வை போற்றலாமா?
26) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு போர்வை போற்றலாமா?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنِ الْقَاسِمِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ يَاأُمَّهِ اكْشِفِي لِي عَنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَاحِبَيْهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَكَشَفَتْ لِي عَنْ ثَلَاثَةِ قُبُورٍ لَامُشْرِفَةٍ وَلَا لَاطِئَةٍ مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ
காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு சென்றேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்றையும் அவர்களின் தோழர்கள் இருவரின் கப்றுகளையும் திறந்து காட்டுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் (அதன் போர்வையை அகற்றி) திறந்து காட்டினார்கள். அவை அதிக உயரமாகவும் இருக்கவில்லை. பூமியுடன் சமமாகவும் இருக்கவில்லை. நடுத்தரமாக சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பவர் :- காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2333
♦️நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு போர்வை போற்றுவது ஸஹாபாக்களின் காலத்தில் நடைமுறையில் இருந்தது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️கஃபா கண்ணியமான ஓர் இடமாகும். அதுபோல் நபிமார்கள் நல்லடியார்கள் அடங்கப்பட்டிருக்கும் கப்ருஸ்தானங்களும் கண்ணியமான ஓர் இடமாகும். அதனை அசுத்த படுத்துவதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பமாட்டாது. கஃபாவுக்கு கண்ணியம் கருதி கருப்பு போர்வை போற்றுவது போல நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு கண்ணியம் கருதி பச்சை போர்வை போற்றப்படுகிறது.
குறிப்பு :- இன்றைய காலகட்டத்தில் பலர் புதிய வாகனங்கை வாங்கி அதனை பாதுகாத்து வருகின்றனர். இன்னும் சிலர் வாகனங்களின் மீது போர்வை போற்றி வைத்திருப்பதை நம்மால் காண முடிகிறது. இதை ஷிர்க் பித்அத் என்று கூறமுடியுமா? அதுபோல் கண்ணியம் கருதி கஃபா அது அல்லாத நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு போர்வை போற்றுவதில் எவ்வித குற்றமும் இல்லை. இருப்பினும் கட்டாயம் போர்வை போற்ற வேண்டும் அது வணக்கம் இவ்வாறு போற்றுவதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று கூற முற்படுவது முற்றிலும் தவறு என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்