27) உணவளிப்பதும் அன்னதானம் செய்வதும்
உணவளிப்பதும் அன்னதானம் செய்வதும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
ஸலாத்தை பரப்புங்கள், ஏழைகளுக்கு உணவளியுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, நீர் (ஏழைகளுக்கு) உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 12 முஸ்லிம் 39 அபூதாவூத் 5194
ஸலாத்தை பரப்புங்கள், மகிழ்ச்சியை காட்டும் முகமாக உணவளியுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! ஸலாமை பரப்புங்கள் (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2485 இப்னு மாஜா 1334
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லுங்கள்
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُكُّوا الْعَانِيَ يَعْنِي الأَسِيرَ وَأَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيضَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்.
அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3046 அஹ்மது 19517
மூன்று நாட்களுக்கு மேல் விருந்தாளிகள் என்ற பெயரில் உறவினர்களுக்கு சிரமம் கொடுக்காதீர்கள்
عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ وَالضِّيَافَةُ ثَلَاثَةُ أَيَّامٍ فَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ وَلَا يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும் (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6135 அபூதாவூத் 3748
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்