27) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் சாம்ராணி சந்தனக்குச்சி புகைகளை பிடிக்கலாமா?
27) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் சாம்ராணி சந்தனக்குச்சி புகைகளை பிடிக்கலாமா?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ عَمْرُو بْنُ سُلَيْمٍ الْأَنْصَارِيُّ قَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்.
அறிவிப்பவர் :- அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 880
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 444 அபூ தாவூத் 4174
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا اسْتَجْمَرَ اسْتَجْمَرَ بِالْأَلُوَّةِ غَيْرَ مُطَرَّاةٍ وَبِكَافُورٍ يَطْرَحُهُ مَعَ الْأَلُوَّةِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ يَسْتَجْمِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். (சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு “இவ்வாறுதான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நறுமணப் புகையிடுவார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4191
♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் புஹூர் அம்பர் சாம்ராணி சந்தனக்குச்சி போன்ற மணமான புகைகளை பிடிப்பது அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களிலும் சந்தனக் குச்சி, சாம்ரானி, பூ, பன்னீர், அத்தர், போன்ற மணமான வாசனைப் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் அதிகமான மக்கள் இது போன்ற இடங்களுக்கு ஸியாரத்து செய்ய வருகை தருகிறார்கள். மக்கள் அதிகம் வருகை தரும் இடங்களில் வாசனை பொருட்கள் பயன் படுத்துவது நபிவழியாகும். இதனை தவறாக புரிந்தோர்கள் இன்னும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தனங்களில் மணமான பொருட்களை பயன் படுத்துவது ஸியாரத்து செய்ய வருபவர்கள் நுகர்ந்து கொள்வதற்காகவே அன்றி வேறில்லை.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்