28) உலக ஆசையும் தற்பெருமையும்

156

உலக ஆசையும் தற்பெருமையும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

உலக ஆசைகளை விட்டுவிடுங்கள்

 

عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حُبُّ الدُّنْيَا رَأْسُ كُلِّ خَطِيْئَةٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உலக ஆசை அனைத்து பாவமான காரியங்களுக்கும் தலைமையனதாகும்.

 

அறிவிப்பவர் :- ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மிர்காதுல் மபாதீஹ் ஷரஹ் மிஷ்காத்துல் மஷாபீஹ் 5212

 

மனோ இச்சைக்கு கட்டுப்படாதீர்கள்

 

عَنْ أَبِي يَعْلَى شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا ثُمَّ تَمَنَّى عَلَى اللَّهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவாளி தனது மனதை விசாரணை செய்து (வென்று) மரணத்திற்கு பிறகு உள்ளவற்றிர்க்காக அமல் செய்தவனாவான். முட்டாள் தனது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு (நிராசயாகி) பிறகு அல்லாஹ்வை ஆதரவு வைப்பவனாவான்.

 

அறிவிப்பவர் :- அபூ யஃலா ஷத்தாது இப்னு அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4260 அஹ்மது 17123

 

மாய உலகில் நீங்கள் அன்னியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இருந்து கொள்ளுங்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي فَقَالَ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ إِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرِ الصَّبَاحَ وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرِ الْمَسَاءَ وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அன்னியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:) ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6416 திர்மிதி 2333

 

எனது செல்வம் என்று இவ்வுலகில் எதுவுமில்லை

 

عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ { أَلْهَاكُمُ التَّكَاثُرُ } {حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ } قَالَ فَقَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِي مَالِي وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ

 

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது என்று தொடங்கும் சூராவை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம் என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது? என்று கேட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஷிக்கீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 16322, 16327

 

தற்பெருமை கொள்ளாதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهَُ قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 91 அபூதாவூத் 4091 திர்மிதி 1998

 

இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளாதீர்கள்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ امْرَأَةً قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَقُولُ إِنَّ زَوْجِي أَعْطَانِي مَا لَمْ يُعْطِنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ ثَوْبَيْ زُور

 

ஒரு பெண்மணி (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) வந்து யா ரஸுலல்லாஹ்! நான் என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொள்ளலாமா?’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார். என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2129 அஹ்மது 24593

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.