28) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருகளை முத்தமிடலாமா?

254

28) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருகளை முத்தமிடலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ

 

أخرجه أبو داود بإسناد صحيح وقال الترمذي حسن صحيح

 

உஸ்மான் இப்னு மழ்வூன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த நிலையில் இருக்கும் போது அவர்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3163 இப்னு மாஜா 1456

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ فَجَاءَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلَهُ قَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي طِبْتَ حَيًّا وَمَيِّتًا

 

அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (அங்கே) வந்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களின் (நெற்றியில்) முத்தமிட்டு, ‘தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். மரணித்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3667 இப்னு மாஜா 1457

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் தோழரான அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மரணிதவர்களை முத்தமிட்டுள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ دَاوُدَ بنِ أَبي صَالِحٍ قَالَ أَقْبلَ مَرْوَانُ يَوْمًا فَوَجَدَ رَجُلًا وَاضِعًا وَجْهَهُ عَلَى الْقَبرِ فَقَالَ أَتَدْرِي مَا تَصْنَعُ فَأَقْبلَ عَلَيْهِ فَإِذَا هُوَ أَبو أَيُّوب فَقَالَ نَعَمْ جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ آتِ الْحَجَرَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَبكُوا عَلَى الدِّينِ إِذَا وَلِيَهُ أَهْلُهُ وَلَكِنْ ابكُوا عَلَيْهِ إِذَا وَلِيَهُ غَيْرُ أَهْلِهِ

 

قلت إسناده حسن وصححه الحاكم والذهبي وحسنه وحمزة أحمد الزين مسند أحمد اسناده صحيح والسمهودي خلاصة الوفا بأخبار دار المصطفى

 

ஒரு முறை மர்வான் அவர்கள் ஒரு மனிதர் தனது முகத்தைக் கப்ரில் வைத்திருப்பதைக் கண்டு அவரிடம் நீர் என்ன செய்கிறீர்” என்று தெரியுமா? எனக் கேட்டார். அதற்கு அவர் ஆம் எனக் கூறி திரும்பிய போது அவர்தான் அபூ அய்யூப் அல் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் (மர்வானை நோக்கி) கூறினார்கள். “நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தான் வந்துள்ளேனே அல்லாமல் கல்லிடத்தில் வரவில்லை” என்றார். மேலும் உரியவர் பதவிக்கு வந்தால் மார்க்கம் பாழாகிவிடும் என அழாதீர்கள் உரியவர் அல்லாதவர் வந்தால் அவ்வாறு அழுங்கள் என இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- தாவூத் இப்னு சாலிஹ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் அஹமது 23054 ஹாகிம்” முஸ்தத்ரக் 8571

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ بِلَالًا رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَتَى قَبْرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَبْكِي عِنْدَهُ وَ يُمَرِّغُ وَجْهَهُ عَلَيْهِ وَأَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ فَجَعَلَ يَضُمُّهُمَا وَيُقَبِّلُهُمَا

 

روى ابن عساكر بسند جيد عن بلال والزرقاني شرح الزرقاني على المواهب والذهبي تاريخ الاسلام والسمهودي خلاصة الوفا بأخبار دار المصطفى

 

நிச்சயமாக பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (மதீனாவிலுள்ள) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்குச் சென்று அங்கே அழுது தனது முகத்தினை கப்ரு ஷரீபின் மீது வைத்து புரட்டி புரட்டி எடுத்தார்கள் (முத்தமிட்டார்கள்) அப்போது அங்கே வந்த ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் இருவரையும் (பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்) கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அஸாகிர்” தாரீகு திமிஸ்க் 7/137

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமான கப்ரு ஷரீபை அபூ அய்யூப் அல் அன்ஸாரி மற்றும் பிலால் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் முத்தமிட்டுள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَدِمَ عَلَيْنَا أَعْرَابِيٌّ بَعْدَ مَا دَفَنَّا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثَةِ أَيَّام فَرَمَى بِنَفْسِهِ عَلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَثَا مِنْ تُرَابِهِ عَلَى رَأْسِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடக்கம் செய்து மூன்று நாட்கள் கழிந்தபிறகு ஒரு கிராமத்து அரபி வந்து, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது விழுந்தார்கள். அச்சமயம் அவர்களின் தலையில் மண் படிந்திருந்தது.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ஸீர் குர்துபி 5/265

 

♦️அன்பின் வெளிப்பாடு காரணமாக ஓர் கிராமத்து அரபி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபில் வந்து விழுந்தார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️உதாரணமாக :- இஸ்லாத்தின் பார்வையில் கணவன் மனைவி உடல் உறவு கொள்ளும் போது இச்சையின் வெளிபாட்டில் முத்தமிட்டாளும் பிள்ளைகள் மரணித்த உறவினர்களை இரக்கத்தில் முத்திமிட்டாளும் தாய் தந்தை பெரியார்களை மரியாதைக்காக வேண்டி முத்தமிட்டாளும் அது அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் நூல்கள், பூக்கள் கண்ணியமான பொருட்கள் இடங்களை முத்தமிட்டாளும் அன்பின் வெளிப்பாடு காரணமாக அங்கு விழுந்தாலும் சரி அதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை முத்தமிட்டாள். கஃபாவை முத்தமிட்டாள். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டாள். அது அல்லாத கண்ணியமாக இடங்களை பொருட்களை முத்தமிட்டாள் அதில் எவ்வித குற்றமும் இல்லை. தாராளமாக அவைகளை முத்தமிடலாம். அது சுஜூதாக ஆகாது. அதனை வணங்கி வழிபட்டதாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் நன்மைகள் கிடைக்கும் என்ற நோக்கில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை கஃபா போன்றவைகளை முத்தமிடக்கூடாது, வணங்கி வழிபடும் நோக்கில் சுஜூது செய்வது சிரம் பணிவது அல்லாஹ் ஒருவனுக்கே அதனை வேரு எவர்களுக்கும் செய்யக்கூடாது. வணங்கும் நோக்கில் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடி பணியக்கூடாது. தலைகுணியக்கூடாது. காலில் விழக்கூடாது இதுவெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கும் மேற்கூறிய முத்தமிடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.