29) உடலும் உறுப்புகளும்
உடலும் உறுப்புகளும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
உடல் உறுப்புக்களால் செய்யும் விபச்சாரத்தை அறிந்து கொள்ளுங்கள், அதனை செய்ய முற்படாதீர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَا مُدْرِكٌ ذَلِكَ لَا مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபச்சாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபச்சாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2657 அஹ்மது 7719
நாவு, கரங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَال َ يَا رَسُولَ اللَّهِ مَنِ الْمُسْلِمُ؟ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ قَالَ فَمَنِ الْمُؤْمِنُ؟ قَالَ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأنْفُسِهِمْ
நிச்சயமாக ஒரு மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யா ரஸூலல்லாஹ் முஸ்லிம் யார் என்று கேட்டார். அதற்கு அவர்கள் யாருடைய, நாவு கரம் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் ஸலாமத் பெறுகிறார்களோ அவனே முஸ்லிம் ஆவான்” முஃமின் யார் என்று கேட்டார். அதற்கு அவர்கள் யாரிடமிருந்து மக்களின் பொருள் ஆன்மா நிம்மதி பெறுமோ அவனே முஃமின் ஆவான்
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 23958 இப்னு குஷைமா 3366
மர்ம உருப்பை மறைத்துக் கொள்ளுங்கள், நாவை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَكَّلَ لِي مَا بَيْنَ رِجْلَيْهِ وَمَا بَيْنَ لَحْيَيْهِ تَوَكَّلْتُ لَهُ بِالْجَنَّةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் தம் இரு (பாதம்) கால்களுக்கிடையே உள்ள (மர்ம உறுப்பி)ற்கும், தம் இரு தாடைகளுக்கிடையே உள்ளத(நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
அறிவிப்பவர் :- சஹ்ல் இப்னு சஅத் அஸ்ஸாயிதி அவர்கள். ஆதாரம் புஹாரி 6807 அஹ்மது 22823
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்