29) நேர்ச்சை செய்யலாமா?

316

29) நேர்ச்சை செய்யலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّذْرِ وَقَالَ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்வதை தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் என்றார்கள். மேலும்

 

إِنَّ النَّذْرَ لاَ يُقَدِّمُ شَيْئًا وَلاَ يُؤَخِّرُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6608, 6692, 6693, முஸ்லிம் 1639, 1639

 

♦️நேர்ச்சை செய்வதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருந்தார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அதன் பின்னர் நேர்ச்சை செய்வதற்கு பூரண அனுமதி வழங்கப்பட்டது. அவை பின்வருமாறு 

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ

 

ஸஹ்து இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து என் தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் மரணித்து விட்டார் என்று கேட்டார். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர் சார்பில் அதை நீங்கள் நிறைவேற்று என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2761, 1953

 

♦️நேர்ச்சை செய்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாத நிலையில் அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுடைய பிள்ளைகள் உறவினர்கள் அந்த நேர்ச்சையை நிறைவேற்றலாம் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ يَعْلَمُهٗ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏

 

குர்ஆன் கூறுகிறது (நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அன்றி (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக் காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை.

சூரா பகரா ஆயத் 270

 

يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا

 

குர்ஆன் கூறுகிறது இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள்.

சூரா தஹ்ர் ஆயத் 7

 

ثُمَّ لْيَـقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ‏

 

குர்ஆன் கூறுகிறது பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்களுடைய நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.

சூரா ஹஜ் ஆயத் 29

 

عَنْ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ وَيَنْذِرُونَ وَلَا يَفُونَ وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

 

அறிவிப்பவர் :- இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2651, 2651, 3650, 6428, 6695 முஸ்லிம் 2535 அபூ தாவூத் 4657 திர்மிதி 2221, 2222, 2302

 

♦️நேர்ச்சை செய்து விட்டு அதனை நிறைவேற்றாதவர்கள் வழிகேடர்கள் அநியாயக்காரர்கள் என்ற கருத்தையும் நேர்ச்சை செய்து விட்டு அதனை நிறைவேற்றுபவர்கள் முஃமின்கள் என்ற கருத்தையும் மேற்கூறிய இறைவசனங்கள் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் நேர்ச்சை வணக்கமாகும். அதனை அல்லாஹ்வுக்காக மாத்திரமே செய்ய வேண்டும். நேர்ச்சையை செய்து விட்டு அதனை வேண்டும் என்றே நிறைவேற்றாதவர்கள் அநியாயக்காரர்களாகும். மேலும் நேர்ச்சை செய்வது ஸுன்னத் அதனை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். அவ்வாறு நிறைவேற்ற முடியாத நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர்களுடைய பிள்ளைகள் உறவினர்கள் அந்த நேர்ச்சையை தாராளமாக நிறைவேற்ற முடியும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.