3) கப்ரு ஸியாரத் தடை என்று கூறும் ஆதாரங்களும் அதற்குறிய தெளிவும்

456

3) கப்ரு ஸியாரத் தடை என்று கூறும் ஆதாரங்களும் அதற்குறிய தெளிவும்

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ

هذا إسناد ضعيف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத்து செய்வதை தடுத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 1236, 1237

 

மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான அலி இப்னு ஸைய்த் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பத்தகுந்தவர், பலவீனமானவர் உறுதி அற்றவர் என்ற கருத்துக்களை இமாம் இப்னு ஹஜர், இமாம் தாரகுத்னி, இமாம் நஸாயி, இமாம் ஹம்பல் இப்னு இஸ்ஹாக், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், இமாம் ராஸி, இமாம் இப்னு மதனி, இமாம் தாரமி மற்றும் பலர் கூறியுள்ளார்கள்.

 

عَنْ أَبِي صَالِحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ

 

هذا إسناد ضعيف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் அதை (மஸ்ஜித்) பள்ளிவாசலாக எடுத்துக் கொள்பவர்களையும் சபித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3236, திர்மிதி 320, நஸாயி 2043, அஹ்மது 2030, 2603, 2984, 3118

 

மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஸாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பத்தகுந்தவர் பலவீனமானவர் என்ற கருத்துக்களை இமாம் இப்னு ஹஜர், இமாம் இப்னு ஹிப்பான், இமாம் அபூ ஹாதிம், இமாம் இப்னு மதனி, இமாம் நஸாயி இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் தாரகுத்னி, மற்றும் பலர் கூறியுள்ளார்கள்.

 

عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ

هذا إسناد ضعيف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை சபித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1056, அஹ்மது 8449, 8452

 

மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான உமர் இப்னு அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பத்தகுந்தவர் பலவீனமானவர் என்ற கருத்துக்களை இமாம் நஸாயி, இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி, இமாம் இப்னு மதினீ, இமாம் யஹ்யா இப்னு முயீன், இமாம் அபூ ஹாதிம், இமாம் ஷுஅபா, இமாம் முஹம்மது இப்னு ஸஅத், இமாம் இப்னு குஸைமா மற்றும் பலர் கூறியுள்ளார்கள்.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْمَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ بْنِ ثَابِت رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ

هذا إسناد ضعيف

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கப்ருகளை அதிகமாக ஸியாரத்து செய்யும் பெண்களை சபித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1574, அஹ்மது 15657

 

மேற்கூறிய ஹதீஸில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் இப்னு ஹுசைம் என்பவரை சிலர்கள் சரி கண்டாலும் இவர் ஹதீஸ்களில் உறுதி அற்றவர் என்ற கருத்தை இமாம் துரூக்கி, இமாம் நஸாயி, இமாம் இப்னு முயீன் போன்றவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இவர் ஹதீஸ்களில் மறுக்கப்பட்ட வேண்டியவர் என்ற கருத்தை இமாம் இப்னு மதனி போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.

 

குறிப்பு :- கப்ருகளை ஸியாரத் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தை கூறும் மேற்கூறிய ஹதீஸ்கள் அனைத்தும் பலஹீனமானவையாக இருப்பினும் அவைகள் மாற்றப்பட ஹதீஸ்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் கப்ருகளை ஸியாரத்து செய்வதை பொதுவாக தடுத்திருந்தார்கள். அதன் பின்னர் கப்ருகளை ஸியாரத்து செய்யுங்கள் என்று பூரண அனுமதி அளித்தார்கள். இதில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உள்ளடங்குவார்கள் என்ற கருத்தை தரும் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.