3) கேள்வி :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இறைதூதர் ﷺ அவர்கள் திருமண பந்தத்தில் இணையும் போது அவர்கள் சிறுமியாக இருந்தார்களா? 

79

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إذا بلقت الجارية تشع .سنين فهي امرأة

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஒரு பெண்பிள்ளை 9 வயதை அடையும் போது, அவள் பருவம் அடைந்த ஒரு பெண்ணாக ஆகிறாள்.

நூல் ஆதாரம் :-  ஜாமிஉத் திர்மிதி 11/1109 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்று பிரகாரம். அன்னை அவர்கள் ஒன்பதாவது வயதில் அவர்கள் பருவ வயதை அடைந்து விட்டார்கள் என்ற செய்தியை நம்மால் காண முடிகிறது.

  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَرَادَتْ أُمِّي أَنْ تُسَمِّنِّي لِدُخُولِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ أَقْبَلْ عَلَيْهَا بِشَىْءٍ مِمَّا تُرِيدُ حَتَّى أَطْعَمَتْنِي الْقِثَّاءَ بِالرُّطَبِ فَسَمِنْتُ عَلَيْهِ كَأَحْسَنِ السِّمَنِ 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். எனது தாய் என்னை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னுடைய உடல் எடையை அதிகரிக்க நாடினார்கள். அதனால் வெள்ளரிக்காயும் புதிய பேரிச்சம் பழத்தையும் எனக்கு கொடுக்கும் வரை அவர் விரும்பியவை பயனளிக்கவில்லை. பின்னர் நான் (தாயார் விரும்பியபடி) நான் நன்கு (கொழுத்து விட்டேன்) என் உடல் எடை அதிகரித்து விட்டது.

நூல் ஆதாரம் :- அபூ தாவூத் 3903 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் திருமண பந்தத்தில் இணையும் போது சிறுமியாக இருக்கவில்லை. அதற்கு மாற்றமாக உடல் எடை அதிகரித்த பெண்னாகவும், பருவ வயதை அதாவது திருமண வயதை எத்திய பெண்னாகவும் இருந்தார்கள்.

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண் குழந்தையுடன் அல்லது சிறுமியுடன் திருமண பந்தத்தில் இணையவில்லை. அதற்கு மாற்றமாக ஒன்பது வயதுடைய பருவ வயதை எத்திய உடல் எடை அதிகரித்த திருமணம் மூலம் ஆகுமாக்கப்பட்ட மனைவியர். அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் தான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். இப்படி திருமண பந்தத்தின் மூலம் இணைவது அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தது. குறிப்பாக மாற்று மத வேதங்கிலும் திருமண வயதை எத்திய பெண் தாராளமாக திருமண பந்தத்தில் இணைய முடியும் என்ற நற்செய்தியும் மேற்குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.

WORLD ISLAM YSYR ✍️          அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.