3) ஜலாலுதீன் ரூமி (ரஹ்) அவர்களின் தத்துவக் கவிதைகள்

65

நீ கடலில் கலந்திருக்கும் ஒரு துளி அல்ல.. ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடல்

அன்பு என்னும் முடிவில்லா பெருங்கடலில் நாம் ஒரு துளி மட்டுமே

காண இயலாததை ஒவ்வொருவரும் காண்கிறார்கள் அவரவர் இதயத் தெளிவின் அளவிற்கு ஏற்றாற் போல்

நான் ஒரு கண்ணாடி; வாதம் செய்பவன் அல்ல.

சிலநேரம் உணர்கிறேன் நானொரு மன்னன் போல் சிலநேரங்களில் சொந்தச் சிறைக்குள் புலம்புகிறேன்.

இந்த நிலைகளுக்கிடையில் உழலும்போது பெருமைப் படுவதெங்கே என்னைப் பற்றி நான்?

இந்த ‘நான்’ என்பது என் கற்பனையின் துணுக்கு மட்டுமே.!!

என்னைத் தவிர நீ வேறு எல்லோருடனும் இருப்பாயானால் எவரோடும் நீ இருக்க வில்லை! என்னைத் தவிர நீ வேறு. எல்லோரிடம் இல்லா விட்டால் ஒவ்வொருவர் உடனும் நீ இருக்கிறாய்! ஒவ்வொரு வருக்கும் உரிமையாய் இருப்பதற்குப் பதிலாக எல்லாரும் போல் இருப்பாய். பலரைப் போல் நீ இருந்தால் நீ எவனுமில்லை ! பூஜியம் …

அன்பு தான் முழுமையானது; நாமோ சிதிலங்கள் மட்டும் தான்”

எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.

நெருங்கி வா; நானே நீ என்பதை உணர்” இப்பிரபஞ்சத்தின் ஆத்மாவின் ஆத்மா, அன்பாகவே அமைந்திருக்கிறது”

நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு: உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு…!!

வாழ்க்கை யாருக்காகவும் காத்திருப்பதில்லை ஆனால் அதை தள்ளிப்போடாதீர்கள்,

என் இதய அறையினுள் யாரும் காணாதவாறு ரகசியமாய் நீ நடமாடுகிறாய்.

காதலில் எல்லைகள் கலந்து விடுகின்றன.

பெண் இறைவனின் வெளிச்சம்

இரவு வேளையில் உன் காதலி திரிகிறாள் உன்னைத் தேடி ! ஆறுதல் அளிக்க வருவோரை ஏற்றுக் கொள்ளாதே!

வாயை மூடிக் கொள் வாயிற்குள் உண்டியைத் திணித்த பிறகு! உன் காதலி வாயை உன் வாயால் சுவைத்திடு

நான் என் தாயை எப்படி நேசிக்காமலிருப்பது? முதலில் என்னை உடலில் சுமந்தாள். பின்னர் கைகளில் சுமந்தாள். பின்னர் ஆயுள் முழுவதும் என்னை நெஞ்சில் சுமந்தாள்.

அனைவரும் என் நாவின் சத்தத்தைக் கேட்பார்கள்

ஆனால் நீ மாத்திரம் என்னுள்ளத்தின் சத்தத்தைக் கேட்கிறாய்

ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

தொடர்….

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.