3) நபி முஹம்மத் ﷺ அவர்களின் பிறந்த நாளில் மகிழ்ச்சி அடைவதா? அல்லது துக்கம் அனுஸ்டிப்பதா?
நபி முஹம்மத் ﷺ அவர்களின் பிறந்த நாளில் மகிழ்ச்சி அடைவதா? அல்லது துக்கம் அனுஸ்டிப்பதா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
புனித மிகு ரபீவுல் அவ்வல் எனும் வசந்த காலத்தில் நாம் இருந்து வருகிறோம் இம் மாதத்தில் தான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் இவ்வுலகிற்கு தோன்றினார்கள் மீலாத் என்பது பிறப்பை குறிக்கும் அதாவது உரைநடையில் புகழ்வதாகும் மேலும் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாள் என்பதால் அவைகளை சிறந்த நாளாக (பெருநாளாக) எடுக்கக் கூடாது என்பதாக சிலர்களின் மடத்தனமான வாதமாகும்.
وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى
குர்ஆன் கூறுகிறது (நாயகமே) உங்களுக்கு இம்மையை விட மறுமை சிறந்தது.
சூரா ளுஹா ஆயத் 4
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த உலத்தை விட மரணத்திற்கு பின்னருள்ள மறுமை சிறந்தது என்பதாகக் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلاَمَ قَالَ وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் மீது உம்மத்தினர்கள் கூரும் ஸலாம் மலக்குகள் மூலம் எனக்கு எத்திவைக்கப்படுகிறது. மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடுகிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பஸ்ஸார் 1925
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَيَاتِي خَيْرٌ لَكُمْ، وَمَمَاتِي خَيْرٌ لَكُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது ஹயாத்தும் உங்களுக்கு சிறந்தது இன்னும் எனது மரணமும் உங்களுக்கு சிறந்தது அதாவது (நான் பிறந்த நாளும் நான் மறைந்த நாளும் உங்களுக்கு சிறந்ததாகும்)
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஜாமிவுல் முஸ்னத் 224
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணம் இவ்வும்மத்திற்கு சிறந்தது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளும் அவர்களின் மறைந்த நாளும் இவ்வும்மத்திற்கு சிறந்த நாளாகும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்தார் அனைவருக்கும் ரஹ்மத்தாக அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள், அவர்கள் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாள் என்பதால் அந்த நாளை கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். வஹாபிஷ ஷீஆக்களை போன்று நீங்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்