3) நபி முஹம்மத் ﷺ அவர்கள் முன்னிலையில் வைத்து பெருநாள் தினங்களில் மௌலிது கவி பாடல்கள்

203

3) நபி முஹம்மத் ﷺ அவர்கள் முன்னிலையில் வைத்து பெருநாள் தினங்களில் மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ فَقَالَ دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَتِلْكَ الْأَيَّامُ أَيَّامُ مِنًى

 

என் அருகே இரண்டு சிறுமியர் தப் ரபான் அடித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் முகத்தை விட்டும் ஆடையை விலக்கி ‘அபூ பக்கரே! அவ்விருவரையும் விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்’ என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவின் நாள்களாக அமைந்திருந்தன.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 987 முஸ்லிம் 892 அஹ்மது 24049, 24682

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِدُفَّيْنِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُنَّ فَإِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا

 

நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடத்தில் நுழைந்த போது என் அருகே இரண்டு சிறுமியர் தப் ரபான் அடித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விருவரையும் விரட்டினார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரையும் விட்டு விடுங்கள், (அவர்கள் பாடட்டும்) நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு என்பதாகக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் நஸாயி 1593 1597, அஹ்மது 24952

 

♦️பெருநாள் தினங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தப் ரபான் கருவிகளை கொண்டு அடிப்பதும் அதை இசைப்பதும், மௌலிது கவிதை பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.