3) நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கப்ருகள் வணக்கஷ்தலம் கிடையாது

72

3) நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கப்ருகள் வணக்கஷ்தலம் கிடையாது

 

நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்கள் வணக்கஷ்தலம் கிடையாது. அதில் அடங்கியுள்ள மனிதர்கள்‌‌ அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்களே தவிர கடவுளோ கடவுளின் குமரரோ அல்ல. அவர்களுக்கு சுய ஆற்றலும் கிடையாது.

 

குறிப்பு :- யூத நஸாராக்களை போன்று நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை மஸ்ஜிதாக எடுக்கக்கூடாது. அங்கு சென்று அவர் கடவுள் என்ற நோக்கில் உதவி தேடக்கூடாது. மேலும் சுஜூது செய்யக்கூடாது. மேலும் அதனை சுற்றி வலம் வரக்கூடாது. இவைகளை இஸ்லாம் முற்றாக தடை செய்துள்ளது. மேலும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை கண்ணியப்படுத்துங்கள். அவைகளை வணக்கஷ்தங்களாக பார்க்காமல் அல்லாஹ்வின் அடையாள சின்னமாக பாருங்கள். அவைகளை இஸ்லாமிய முறைப்படி ஸியாரத்து செய்யுங்கள். மேலும் கடவுள் என்ற நோக்கம் இன்றி நபிமார்கள் நல்லடியார்கள் என்ற நோக்கில் வஸீலா மூலம் உதவி தேடுங்கள். இதனை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இது பற்றிய ஆதாரங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முஃமின்கள் கப்ரு வணங்கிகளா என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அடுத்து நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை எப்படி வணங்கக்கூடாதோ அதே போன்று உயிருள்ள நல்ல மனிதர்களையும் வஹாபிஷ தலைவனையும் அதிலுள்ள இமாம்களையும் வணங்கக்கூடாது. அவர்களுக்கு சுஜூது செய்யக்கூடாது. அவர்கள் மனிதர்களே தவிர கடவுளோ கடவுளின் குமரரோ அல்ல. அவர்களுக்கு சுய ஆற்றலும் கிடையாது.

 

குறிப்பு :- மாற்று மதத்தவர்கள் போன்று நீங்கள் உயிருள்ள மனிதர்களை கடவுளாக எடுக்காதீர்கள். நல்ல மனிதர்களாக இருந்தாலும் சரி வழிகெட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு சுஜூது செய்யாதீர்கள். கடவுள் என்ற நோக்கில் அவர்களிடம் உதவி தேடாதீர்கள். தவ்ஹீத் தலைவன் அப்துல் வஹ்ஹாபை புகழும் நோக்கில் வணங்காதீர்கள். அவனுடைய புகைப்படத்திற்கு சுஜூது செய்யாதீர்கள். இவைகளை இஸ்லாம் முற்றாக தடை செய்துள்ளது.

 

முஸ்லிம்களே! வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே.. வணங்கும் நோக்கில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு சுஜூது செய்யாதீர்கள். அவைகளை அழைத்து உதவி தேடாதீர்கள். அது அல்லாமல் படைப்புகள் மனிதர்கள் என்ற நோக்கில் கை கால்களை தர்ஹாக்களை, மஸ்ஜிதை, கஃபாவை அது அல்லாத பொருட்களை முத்தமுடுவது சுஜூது ஆகாது. அவர்களை அழைத்து உதவி தேடுவது வணக்கம் ஆகாது. அது ஷிர்க் ஆகாது. தெளிவு பெறுங்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.