3) பெற்றோர்கள் விஷயத்தில் பிள்ளைகள்

180

பெற்றோர்கள் விஷயத்தில் பிள்ளைகள்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

தோழமை கொள்வதற்கு மிகத் தகுதியானவர்கள் பெற்றோர்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جاءَ رجُلٌ إِلَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ منْ أَحَقُّ الناسِ بِحُسْنِ صحابَتِي؟ قالَ أمُّكَ. قالَ ثمَّ مَنْ؟ قالَ أمُّكَ. قالَ ثمَّ مَنْ؟ قالَ أمُّكَ. قالَ ثمَّ مَنْ؟ قالَ أبوكَ

 

ஒரு மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய முறையில் தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். அதற்கு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். அப்போது, அதற்கு, ‘பிறகு யார்?’ என கேட்க.. ‘உமது தாய்’ என அவர்கள் கூறினார்கள் மூன்றாவது தடவையாக ‘அதற்கு பிறகு யார்?’ என அவர் கேட்கவும் அவர்கள் ‘உமது தாய்’ எனக் கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்டபோது ‘உமது தந்தை’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5971 முஸ்லிம் 2548 இப்னு மாஜா 2706

 

தொழுகையை நிறைவேற்றுங்கள், பெற்றோர்களுக்கு நன்மை புரியுங்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ

 

நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘செயலில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது” என பதில் கூறினார்கள். ‘அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன். ”பெற்றோருக்கு நன்மை புரிவது” என்றார்கள். ‘அதன்பிறகு எது?’ என்று கேட்டேன். ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது” என பதில் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 527, 5970 முஸ்லிம் 85 திர்மிதி 173

 

தாயின் பாதங்களுக்குக் கீழ் சுவர்க்கம் உள்ளது

 

عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ جَاهِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ؟ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا

 

ஜாஹிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவர்களை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் சொர்க்கம் தாயின் பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- முஆவியா பின் ஜாஹிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 3104 இப்னு மாஜா 2781 ஹாகிம் 2502

 

தந்தையின் திருப்தியை பெற்றுக் கொள்ளுங்கள்

 

عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال َ رِضَا اللَّه فِي رِضَا الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் இருக்கிறது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் இருக்கிறது.

 

அறிவிப்பவர் :- அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1899, இப்னு ஹிப்பான் 429 பைஹகி 7830

 

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُجَاهِدُ قَالَ لَكَ أَبَوَانِ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

 

ஒருவர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5542, நஸாயி 4163

 

பெற்றோர்களை சபிக்காதீர்கள், அவர்களுக்கு ஏசாதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ وَيَسُبُّ أُمَّهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ அச்சமயம் யா ரஸூலல்லாஹ்! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5973 முஸ்லிம் 90 நஸாயி 1902

 

பெற்றோர்களை துன்புறுத்தாதீர்கள்

 

عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ

 

(ஒருமுறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், யா ரஸூலல்லாஹ்! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5976 முஸ்லிம் 87 திர்மிதி 1901

 

பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள், உறவுகளை ஆதரித்து வாழுங்கள்

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ وَأَنْ يُزَادَ لَهُ فِي رِزْقِهِ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீண்ட ஆயுள் கிடைப்பதற்கும் உணவில் விஸ்தீரணம் கிடைப்பதற்கும் யார் விரும்புகிறாரோ அவர் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும், தன் உறவுகளை ஆதரித்து வாழட்டும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 1213, 13811

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.