30) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் நேர்ச்சை செய்வது பற்றிய தெளிவு
30) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் நேர்ச்சை செய்வது பற்றிய தெளிவு
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ قَالَ نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ قَالُوا لَا قَالَ هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ قَالُوا لَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْفِ بِنَذْرِكَ
புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யா ரஸூலல்லாஹ்! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறினார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா? எனக் கேட்டார்கள். இல்லை என்று ஸஹாபாக்கள் விடையளித்தார்கள். அறியாமைக் கால பெருநாட்கள் ஏதும் அங்கே நடக்குமா? என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ஸஹாபாக்கள் இல்லை என்று விடையளித்தார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக!
அறிவிப்பவர் :- ஸாபித் இப்னு லஹ்ஹாக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 3313, 3325
♦️அறியாமை காலத்தில் வணங்கி வழிபடும் இடங்கள் அது அல்லாத விக்ரகங்கள் சிலைகள் இருக்கும் இடங்களில் நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது அது அல்லாத இடங்களாக இருந்தால் தாராளமாக அவைகளை நிறைவேற்றலாம் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தங்கள் நபிமார்களின் கப்ஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 437. முஸ்லிம் 530, அபூ தாவூத் 3227, நஸாயி 2047
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكِ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ أَوِ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ
உம்முஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அபீ ஸீனியாவில் தாம் கண்ட கோவிலைப் பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அது ‘மாரியா’ என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரின் கப்ருஸ்தானத்தை (மஸ்ஜித்) வணக்கத்தலாமாக அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 434. 427, 1341, 3873, முஸ்லிம் 528, நஸாயி 704, அஹ்மது 24252
♦️நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை யூத நஸாராக்கள் வணக்கஸ்தலமாக எடுத்துக் கொண்டார்கள். அங்கு உருவச் சிலைகளை செதுக்கி விடுவார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️உன்மையில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்கள் வணக்கஸ்தலம் கிடையாது. யூத நஸாராக்கள் வணக்கஸ்தங்களாக எடுத்துக் கொண்டார்கள் கஃபாவை வணக்கஸ்தங்களாக எடுத்துக் கொண்டது போல. இவைகளை தெளிவான முறையில் கூறப்போனால் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை யூத நஸாராக்கள் வணங்கும் நோக்கில் அதிக உயரமாக கட்டி அதில் உருவச் சிலைகளை செதுக்கி வணங்கி வழிபட்டனர். அதுபோல கஃபாவிற்குள் பல கற்சிலைகளை வைத்து ஜாஹிலிய்யா காலத்து மக்கள் வணங்கி வழிபட்டனர் இதனை காரணமாக வைத்து கஃபா ஆரம்பத்தில் கற்சிலைகள் வைத்து வணங்கி வழிபட்ட இடம் அதனால் அங்கு நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது என்று கூறலாமா? அதுபோல நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை யூத நஸாராக்கள் ஆரம்பத்தில் வணக்கஸ்தங்களாக எடுத்துக் கொண்ட இடம் அதனால் அங்கு நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது என்று கூறலாமா? இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடயர்கள் என்று பொருள் கொள்ளப்படும்.
عَنْ عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ قَالَ سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ فَقَالَتْ يَارَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا فَجَعَلَتْ تَضْرِبُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து யா ரஸூலல்லாஹ்! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் தப் அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் எனக் கூறினாள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம் எனக் கூறினார்கள். உடனே அப்பெண் தப் அடிக்கலானார்கள்.
அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3690 அபூதாவூத் 2880, அஹ்மத் 22989, 23011
♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் ஸஹாபாக்கள் முன்னிலையில் நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- மாற்று மத வணக்க வழிபாடுகள் இருக்கும் இடங்களில் நேர்ச்சையை நிறைவேற்றக்கூடாது அது அல்லாத இடங்களில் குறிப்பாக நபிமார்கள் நல்லடியார்கள் இருக்கும் இடங்களில் அவர்கள் முன்னிலையில் அல்லது முஸ்லிம்களின் கைவசம் இருக்கக்கூடிய அவர்களின் கப்ருஸ்தானங்களில் தாராளமாக நேர்ச்சையை நிறைவேற்ற முடியும். அங்கு விக்ரகங்கள் கற்சிலைகள் இல்லை. அறியாமை காலத்து பெருநாட்கள் அங்கு கிடையாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்