நபி முஹம்மத் ﷺ அவர்களின் சிறப்புக்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் சிறப்புக்கள்
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا * وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
குர்ஆன் கூறுகிறது நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் அல்லாஹ்வினுடைய உத்தரவுப்படி (மக்களை நீங்கள்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்கள்)
சூரா அஹ்ஜாப் ஆயத் 45, 46
مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
குர்ஆன் கூறுகிறது (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
சூரா அஹ்ஜாப் ஆயத் 40
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
குர்ஆன் கூறுகிறது (நபியே) அகிலத்தாருக்கு (ரஹ்மத்) அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம்.
சூரா அன்பியா ஆயத்107
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ قَرْنًا فَقَرْنًا حَتَّى كُنْتُ مِنَ القَرْنِ الَّذِي كُنْتُ فِيهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாகவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3557 அஹ்மது 9392
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُضِّلْتُ عَلَى الأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِىَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِىَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِىَ النَّبِيُّونَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஏனைய நபிமார்களை விட ஆறு (தனிச்) சிறப்புகள் நான் வழங்கப்பட்டுள்ளேன். ஒன்று ஜவாமிவுல் கலிம், (குறைவான வார்த்தைகளில் நிறைவான கருத்தை பேசும் ஆற்றல்) இரண்டாவது (எதிரிகள் என்னை கண்டால்) அஞ்சுமாறு இறை உதவி மூன்றாவது பூமியின் எல்லா இடங்களும் தூய்மையானதும் மஸ்ஜிதும் (தொழும் இடமாக) ஆக்கப்பட்டிருத்தல். நான்காவது கனீமத் (போரில் கிடைத்த பொருட்கள்) ஹலாலாக ஆக்கப்பட்டிருத்தல். ஐந்தாவது முழு படைப்பினத்திற்கும் பொது நபியாக இருத்தல். ஆறாவது என்னைக் கொண்டே நபித்துவம் நிறைவு செய்யப்படிருத்தல். எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 523 திர்மிதி 1553 அஹ்மது 9337 இப்னு ஹிப்பான் 2313
عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا العَاقِبُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது புகழப்பட்டவர் ஆவேன். நான் அஹ்மது இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
அறிவிப்பவர் :- ஜுபைர் இப்னு முத்யிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3532, 6103 முஸ்லிம் 2355 இப்னு மாஜா 2207, 2870, 3044 அஹ்மது 16748
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَكْثَرُ الأَنْبِيَاءِ تَبَعًا يَوْمَ الْقِيَامَةِ وَأَنَا أَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் அதிகமானவர்களால் பின்பற்றப்படும் நபி நான் ஆவேன். மேலும் சுவனத்தின் கதவை தட்டுபவரில் முதன்மையானவரும் நான் ஆவேன்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 196 அஹ்மது 13
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிள்ளையினருக்கு மறுமை நாளில் நானே தலைவன் ஆவேன். கப்ரிலிருந்து வெளிகுவோரில் நானே முதன்மை ஆவேன், ஷஃபாஅத் (பரிந்துரைப்போரில்) நானே முதன்மை ஆவேன், மற்றும் ஷஃபாஅத் ஏற்கப்படுவோரில் நானே முதன்மை ஆவேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2278 அபூதாவூத் 4673 திர்மிதி 3616 இப்னு மாஜா 4308
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ إذَا صَلَّى الغَدَاةَ جَاءَ خَدَمُ المَدِينَةِ بآنِيَتِهِمْ فِيهَا المَاءُ، فَما يُؤْتَى بإنَاءٍ إلَّا غَمَسَ يَدَهُ فِيهَا، فَرُبَّما جَاؤُوهُ في الغَدَاةِ البَارِدَةِ، فَيَغْمِسُ يَدَهُ فِيهَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை மூழ்கச் செய்வார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2324
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آتِى بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتَفْتِحُ فَيَقُولُ الْخَازِنُ مَنْ أَنْتَ فَأَقُولُ مُحَمَّدٌ. فَيَقُولُ بِكَ أُمِرْتُ لاَ أَفْتَحُ لأَحَدٍ قَبْلَكَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் சுவர்க்க வாசலுக்கு வந்து கதவை திறக்கும்படி கூறுவேன். (சுவனத்தின்) காவலாளி, நீங்கள் யார்? என்று கேட்பார். அதற்கு நான் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) என்பேன். உங்களைத் தவிர வேறு யாருக்காகவும் முதலாவதாக கதவை திறக்கக்கூடாது என நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என (காவலாளி வானவர்) கூறுவார்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 197 அஹ்மது 12397
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் உள்ள ஓர் கல்லை நான் நன்கு அறிவேன் நான் நபியாக அனுப்ப படுவதற்கு முன்னரே அந்த கல் எனக்கு ஸலாம் சொல்லி கொண்டு இருந்தது அதை இப்பொழுதும் காண்கிறேன்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2277 திர்மிதி 3624 தாரமீ 20 அஹ்மது 20828
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَكْرَمُ وَلَدِ آدَمَ عَلَى رَبِّي وَلاَ فَخْرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய பிள்ளைகளில் சிறந்தவர்களாக நான் இருக்கிறேன் இறைவனிடத்தில் அதில் எனக்கு பெருமை கிடையாது.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3610 அஹ்மது 23336
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلاَ أَنَا حَبِيبُ اللَّهِ وَلاَ فَخْرَ وَأَنَا حَامِلُ لِوَاءِ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ فَخْرََ وَأَنَا أَكْرَمُ الأَوَّلِينَ وَالآخِرِينَ وَلاَ فَخْرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் அல்லாஹ்வின் ஹபீப் அதில் எனக்கு பெருமை கிடையாது, இன்னும் மறுமையில் லிவாவுல் ஹம்த் புகழுக்குறிய கொடியை சுமப்பவனும் நானே அதில் எனக்கு பெருமை கிடையாது, இன்னும் ஆரம்பத்திலும் இறுதியிலும் நானே சந்கையானவன் அதில் எனக்கு பெருமை கிடையாது என்றார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3616
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُكْسَى الْحُلَّةَ مِنْ حُلَلِ الْجَنَّةِ ثُمَّ أَقُومُ عَنْ يَمِينِ الْعَرْشِ لَيْسَ أَحَدٌ مِنَ الْخَلاَئِقِ يَقُومُ ذَلِكَ الْمَقَامَ غَيْرِي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுவர்க்க ஆபரணங்களில் ஓர் ஆபரணம் எனக்கு அணிவிக்கப்படும். பிறகு, (அல்லாஹ்வின்) சிம்மாசனத்தின் வலப்பக்கத்தில் நான் நிற்பேன். படைப்பினங்களில் வேறு எவரும் என்னைத் தவிற அந்த இடத்தில் நிற்க மாட்டார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3611
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَبِيًّا وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் உடலுக்கும், ருஹூக்கும் இடையில் இருந்தபோதே நான் நபியாக இருந்தேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3609 அஹ்மது 16623, 20596, 23212
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ، وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ وَإِلَى الْقَمَرِ، فَلَهُوَ عِنْدِي أَحْسَنُ مِنَ الْقَمَرِ
சந்திரன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்க கண்டேன், அச்சமயம் அவர்களையும் பார்த்தேன். சந்திரனையும் பார்த்தேன். அவர்கள் தான் சந்திரனை விட எனக்கு அழகாக (ஒளி பிரகாசமாக) தோன்றினார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு சமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2735 தாரமீ 57
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட மிக அழகான எந்த ஓர் வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் (ஒளி பிரகாசம்) ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3648 மிஷ்காத் 5795 அஹ்மது 2344
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا افْتَرَقَ النَّاسُ فِرْقَتَيْنِ إِلَّا جَعَلَنِي اللَّهُ فِي خَيْرِهَا فَأُخْرِجْتُ مِنْ بَيْنِ أَبَوِيَّ فَلَمْ يُصِبْنِي شَيْءٌ مِنْ عُهْرِ الْجَاهِلِيَّةِ. وَخَرَجْتُ مِنْ نِكَاحٍ وَلَمْ أَخْرُجْ مِنْ سِفَاحٍ مِنْ لَدُنْ آدَمَ حَتَّى انْتَهَيْتُ إِلَى أَبِي وَأُمِّي، فَأَنَا خَيْرُكُمْ نَفْسًا، وَخَيْرَكُمْ أَبًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால், அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என் பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் திருமணத்தின் மூலம் வெளியானேன். விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆதம் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களில் சிறந்தவன். நான் உங்களின் வமிசத்திலும் சிறந்தவன்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 360 பைஹகி” தலாயிலுன் நுப்வா 582
عن ابن عباس رضي اللَّه عنه: لم يكن لرسول اللَّه ظل ولم يقم مع شمس قط إلا غلب ضوؤء الشمس، ولم يقم مع سراج قط إلا غلب ضوءه على ضوء السراج
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் இல்லை. அவர்கள் சூரிய ஒளியில் நின்றால் அவர்களின் நூரானது அதனை எஞ்சிவிடும். சந்திர ஒளியில் நின்றால் அவர்களின் நூரானது அதனை எங்சிவிடும்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு ஜவ்ஷி” அல் வபா 1/301
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்