31) நபிமார்கள் நல்லடியார்களின் பெயரில் நேர்ச்சை செய்வது பற்றிய தெளிவு
31) நபிமார்கள் நல்லடியார்களின் பெயரில் நேர்ச்சை செய்வது பற்றிய தெளிவு
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَمَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 6696, 6700 அபூ தாவூத் 3289 திர்மிதி 1526 நஸாயி 3806, 3807, 3808
♦️நேர்ச்சை அல்லாஹ்வுக்குறியது, அவனை வழிப்பட்ட நிலையில் ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️நேர்ச்சை செய்வது ஓர் வணக்கமாகும் அதை அல்லாஹ்விற்கு மாத்திரமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நேர்ச்சை செய்யக்கூடாது. அப்படி இருக்க நபிமார்கள் நல்லடியார்களுக்காக அவர்களின் பெயர்களில் நேர்ச்சை செய்யலாமா?
♦️இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே. இருப்பினும் நன்மையை சேர்த்து வைக்கும் நோக்கில் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரில் நேர்ச்சை செய்கிறேன் அது அல்லாத அமல்களை செய்கிறேன் என்று கூறுவதில் எவ்வித குற்றமும் இல்லை. உதாரணமாக
عَنْ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ تُوُفِّيَ الْيَوْمَ رَجُلٌ صَالِحٌ مِنَ الْحَبَشِ فَهَلُمَّ فَصَلُّوا عَلَيْهِ قَالَ فَصَفَفْنَا فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ وَنَحْنُ صُفُوفٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். (அனைவரும்) வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்’ மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1320, 1334, 3877
♦️தொழுகை என்பது முக்கியமான ஓர் வணக்கமாகும். வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே. அப்படி இருக்க அல்லாஹ்விற்காக தொழுங்கள் என்று கூறாமல் மய்யத்திற்காக ஜனாஸா தொழுங்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை வழித்து பெயர் சூட்ட வேண்டும்.
அறிவிப்பவர் :- சமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2837, 2838 அஹ்மது 20083, 20256
♦️அகீகா என்பது ஓர் வணக்கமாகும். வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே. அப்படி இருக்க அல்லாஹ்விற்காக அறுக்க வேண்டிய ஆட்டை குழந்தையின் சார்பில் அறுக்க வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا
ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள். ஆம்! அவர்களுக்காக நீ ஹஜ் செய் என்றார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1852, 1853, 4399
♦️ஹஜ் என்பது முக்கியமான ஓர் வணக்கமாகும். வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே. அப்படி இருக்க அல்லாஹ்விற்காக ஹஜ் செய்யுங்கள் என்று கூறாமல் உன் தாயாருக்காக வேண்டி ஹஜ் செய் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَنَّهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي
قال الترمذي حديث حسن صحيح ورواه ابن ماجه إسناد صحيح
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒரு ஆட்டை அறுத்து விட்டு தன் சமுதாயத்தில் யாரெல்லாம் உழ்ஹிய்யா கொடுக்க (முடியாமல் இருக்கிறார்களோ) அவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1505 அபூ தாவூத் 2010
♦️உழ்ஹிய்யா என்பது முக்கியமான ஓர் வணக்கமாகும். வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே. அப்படி இருக்க அல்லாஹ்விற்காக உழ்ஹிய்யா கொடுங்கள் என்று கூறாமல் என்னுடைய சமுதாயத்தில் யாரெல்லாம் உழ்ஹிய்யா கொடுக்க (முடியாமல் இருக்கிறார்களோ) அவர்களுக்காக வேண்டி உழ்ஹிய்யா கொடுத்தார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
♦️இஸ்லாத்தை பொருத்த வரையில் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக வேண்டி மய்யத்து தொழுகை தொழப்படுகிறது அதுபோல அகீகா” குழந்தைகளின் பெயரில் மிருகங்களை அறுத்து பங்கிடப்படுகிறது. அல்லாஹ் அல்லாதவர்களின் நேர்ச்சைகள் நிறைவேற்றப்படுகிறது, அவர்களுடைய பெயரில் தான தர்மங்கள் கொடுக்கப்பட்டுகிறது, அவர்களுடைய பெயரில் உழ்ஹிய்யா போன்றவைகள் கொடுக்கப்படுகிறது.
♦️இவைகளை கூர்ந்து கவனியுங்கள். ஜனாஸா தொழுகை, அகீகா, நேர்ச்சை, உழ்ஹிய்யா இவையெல்லாம் வணக்கமாகும். அப்படி இருக்க இவ்வாறான வணக்கங்களை எப்படி அல்லாஹ் அல்லாத முஸ்லீம்களுடைய பெயரில் செய்வது? இவ்வாறு செய்ததாக பல ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளதே. உன்மையில் இதன் நோக்கம் என்ன என்பதை சற்று நிதானமாக பாருங்கள்.
♦️வெளிப்படையில் மய்யத்திற்கு ஜனாஸா தொழுகை என்று கூறப்படும். இதன் நோக்கம். ஜனாஸா தொழுகை அல்லாஹ்வை வணங்கி வழிபடும் நோக்கில் தொழப்படுகிறது. அந்த தொழுகையின் மூலம் கிடைக்கப் பெறும் நன்மைகளை அந்த மய்யத்திற்கு சேர்த்து வைக்கப்படுகிறது. அதுபோல அகீகா வெளிப்படையில் பிள்ளைகளின் பெயரில் மிருகங்களை அறுத்து பங்கிடுவது எனக் கூறப்படுகிறது. இதன் நோக்கம் மிருகங்களை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டு அதன் நன்மைகளை அந்த பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கப்படுகிறது. அதுபோல வெளிப்படையில் என்னுடைய தாயாரின் நேர்ச்சை என்று கூறப்படும். இதன் நோக்கம். நேர்ச்சை அல்லாஹ்விற்காக செய்யப்படுகிறது. என்னுடைய தாயார் செய்த நேர்ச்சையை நான் நிறைவேற்றுவதன் மூலம் அதன் நன்மைகள் அவர்களுக்கு சேர்த்து வைக்கப்படுகிறது. அதுபோல வெளிப்படையில் பிற மனிதர்களின் பெயரில் தான தர்மங்கள் கொடுக்கப்படுகிறது. இதன் நோக்கம் தான தர்மங்களை அல்லாஹ்விற்காக வேண்டி கொடுக்கப்பட்டு அதன் நன்மைகளை அந்த மனிதர்களுக்கு சேர்த்து வைக்கப்படுகிறது. அதுபோல வெளிப்படையில் பிற மனிதர்களின் பெயரில் உழ்ஹிய்யா கொடுக்கப்படுகிறது. இதன் நோக்கம் உழ்ஹிய்யா அல்லாஹ்விற்காக கொடுக்கப்படுகிறது அதன் நன்மைகளை அந்த மனிதர்களுக்கு சேர்த்து வைக்கப்படுகிறது. எனவே வெளிப்படை எவ்வாறு இருந்தாலும் அதன் நோக்கங்கள் மேற்கூறியது போன்று இருந்தால் அதில் எவ்வித குற்றமும் இல்லை.
குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் வெளிப்படையில் நபிமார்கள் நல்லடியார்களின் பெயரில் நேர்ச்சை செய்வதில் எவ்வித குற்றமும் இல்லை. அதன் நோக்கம் அல்லாஹ்விற்காக வேண்டி நேர்ச்சையை நிறைவேற்றி அதன் நன்மைகளை குறிப்பிட்ட அந்த நபிமார்கள் நல்லடியார்களுக்கு சேர்த்து வைப்பதே முக்கியமான நோக்கமாக இருத்தல் வேண்டும். மேற்கூறிய நோக்கம் இல்லாமல் நேர்ச்சை செய்வது ஷிர்க் இணைவைப்பாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்