7) ஸியாரத் செய்ய செல்வதும் அவர்களுடைய பெயரில் திருக்குர்ஆன் ஓதுவது பற்றிய தெளிவு

390

7) ஸியாரத் செய்ய செல்வதும் அவர்களுடைய பெயரில் திருக்குர்ஆன் ஓதுவது பற்றிய தெளிவு

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ‏ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَخَلَ الْمَقَابِرَ ثُمَّ قَرَأَ فَاتِحَةَ الْكِتَابِ وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَأَلْهَاكُمْ التَّكَاثُرُ ثُمَّ قَالَ إِنِّي جَعَلْت ثَوَابَ مَا قَرَأْت مِنْ كَلَامِك لِأَهْلِ الْمَقَابِرِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كَانُوا شُفَعَاءَ لَهُ إِلَى اللَّهِ تَعَالَى

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் கப்ருக்குச் சென்று அல்ஹம்து ஸூராவையும் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் அல்ஹாக்கு முத்தகாதுரு என்ற ஸூராவையும் ஓதி அதன் பிறகு இறைவா! உமது கலாமிலிருந்து நான் இப்போது ஓதிய ஸூராக்களின் சவாபை முஃமினான கப்ருவாசிகளுக்கு ஆக்கிவிட்டேன் என்று சொல்வாரானால் அவருக்காக அந்த கபுருவாசிகள் அல்லாஹ்வின்பால் பரிந்துரை செய்பவர்களாக ஆகிவிடுவார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஷரஹுல் ஸுதூர் 418

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ‏ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَخَلَ الْمَقَابِرَ فَقَرَأَ سُورَةَ يس خَفَّفَ اللَّهُ عَنْهُمْ وَكَانَ لَهُ بِعَدَدِ مَنْ فِيهَا حَسَنَاتٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் கப்ருஸ்தானங்களுக்கு சென்று யாஸீன் சூரா ஓதுவாரோ அந்நாளில் அல்லாஹ் அவர்களின் (வேதனைகளை) இலேசாக்கி வைப்பான்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் உம்தத்துல் காரீ 3/176

 

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ‏ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَرَّ عَلَى الْمَقَابِرِ وَقَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ إِحْدَى عَشْرَةَ مَرَّةً ثُمَّ وَهْبَ أَجْرَهُ لِلْأَمْوَاتِ أُعْطِيَ مِنَ الْأَجْرِ بِعَدَدِ الْأَمْوَاتِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் கப்ருகளுக்குச் சென்று குல்ஹுவல்லாஹு அஹது என்ற சூராவை பதினொரு தடவை ஓதி அதன் நன்மையை கப்ராளிக்கு சேர்த்தாரோ அவருக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கையின் அளவு நன்மை கிடைக்கும்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் உம்தத்துல் காரீ 3/176

 

عَنْ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ‏ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நல்லடக்கம் செய்துவிடுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 8854 தப்ரானி 13613, மிஷ்காத் 1717

 

♦️கப்ருகளை ஸியாரத் செய்ய செல்பவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது மட்டுமின்றி அவர்களுகளுடைய பெயரில் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சூரா யாஸீன் அது அல்லாத சூராக்களை ஓதி அதன் சவாபை அவர்களுக்கு சேர்க்க வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு தர்சித்தல், சந்தித்தல் என்று பொருள்படும். ஸியாரதுல் குபூர் என்றால் கப்ருகளை சந்தித்தல் என்று பொருள்படும். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலும் மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கிலும் கப்ருவாசிகளுக்காக துஆ கேட்க வேண்டும். அவர்களுடைய பெயரில் திருக்குர்ஆன் ஓத வேண்டும் என்ற நோக்கிலும் இஸ்லாம் பொது மய்யவாடிகளிலுள்ள கப்ருகளை ஸியாரத் செய்வதற்கு பூரண அனுமதி அளித்துள்ளது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.