32) அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?

286

32) அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

ﻓَﻠَﺎ ﺗَﺪْﻉُ ﻣَﻊَ ﺍﻟﻠّٰﻪِ ﺍِﻟٰﻬًﺎ ﺍٰﺧَﺮَ

 

குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்காதீர்கள்.

குர்ஆன் 26:213

 

அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்காதீர்கள். மேலும் அழைத்து பிரார்த்திக்காதீர்கள் என்ற கருத்துக்களை தரும் வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. திருக்குர்ஆன் 6:40, 6:71, 7:194, 7:197, 10:106, 13:14, 16:20, 17:57, 17:67, 18:52, 22:12, 22:62, 22:73, 23:117, 26:213, 28:64, 28:88, 31:30, 35:13, 35:14, 35:40, 40:20, 46:4, 46:5 இடம் பெற்றுள்ளது.

 

♦️அல்லாஹ் என்பவன் (படைப்பாளி) அல்லாதவர்கள் என்பது (படைப்பினங்கள்) அழைக்க வேண்டாம் என்பது (உதவிக்காக வேண்டி அது அல்லாத வேறு நோக்கங்களுக்காக வேண்டி அழைக்கப்படும்) அழைப்பை குறிக்கும்.

 

♦️எனவே மேற்கூறிய வசனத்தில் படைப்பாளியை அழையுங்கள் என்றும். படைப்பினங்களை அழைக்காதீர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் படைப்பினங்கள் என்று வரும் போது உயிருள்ளவைகளையும் மரணித்தவைகளையும் பொதுவாக குறிக்கும். காரணம் உயிருள்ளவர்கள் அல்லாஹ் கிடையாது. அவர்களும் அல்லாஹ் அல்லாதவர்கள் என்பதை வஹ்ஹாபிஷ உலமாக்கள் அது அல்லாத சகோதர சகோதரிகள் அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

 

♦️மேற்கூறிய வசனங்களின் நேரடி அர்த்தத்தின் அடிப்படையில் பார்க்கும் போது உயிருள்ள மனிதர்களை அழைப்பதும் மரணித்த மனிதர்களை அழைப்பதும் அது அல்லாதவைகளை அழைத்து உதவி தேடுவதும். ஷிர்க் இணைவைப்பு ஆகிவிடும். மேலும் உயிருள்ளவைகளை அழைத்து உதவி தேடினார்கள் என்றும் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை அழைத்து உதவி தேடுவது மட்டுமின்றி மரணித்த பிராணிகளை கூட அழைத்த வரலாறு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த அளவுகோலை வைத்து பார்க்கும் போது திருக்குர்ஆன் ஹதீஸ்களிலும் ஷிர்க் இணைவைப்பு உண்டு என்பதாக அர்த்தமாகிவிடும். இது போன்ற தவறான கருத்துக்களை விட்டும் முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாப்பானாக.

 

♦️அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! வஹாபிஷ அமைப்புக்கள் கூறுவது போல. அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்க வேண்டாம் என்றால் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் பொய்பித்து விடும். இது போன்ற கருத்துக்கள் நடைமுறைக்கு சாத்தியம் அற்றது மட்டுமின்றி இது போன்ற தவறான கருத்துக்களை இறைவேதம் திருக்குர்ஆன் எக்காலத்திலும் கூற மாட்டாது என்ற கருத்தை முஸ்லிம்கள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். உன்மையில் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களின் சரியான அர்த்தம் என்னவெனில்

 

ﻓَﻠَﺎ ﺗَﺪْﻉُ ﻣَﻊَ ﺍﻟﻠّٰﻪِ ﺍِﻟٰﻬًﺎ ﺍٰﺧَﺮَ

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் அல்லாதவர்களை (வணங்கும் நோக்கில்) அழைக்காதீர்கள் என்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். இது போன்ற அமைப்பில் மேற்கூறிய ஏனைய வசனங்களையும் முறைப்படி அர்த்தம் செய்தால்! எந்த விதத்திலும் திருக்குர்ஆன் ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏட்படமாட்டாது.

 

குறிப்பு :- அல்லாஹ் அல்லாதவர்களை (வணங்கும் நோக்கில்) அழைக்க வேண்டாம் அல்லது (வணங்கி) அழைக்க வேண்டாம் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் கூறப்பட்டுள்ளது. அவைகளிடம் வணங்கும் நோக்கில் உதவி தேடக்கூடாது. வெறுமனே சுய சக்தி அற்ற படைப்புக்கள் என்ற நோக்கில் அவைகளை அழைத்தால் அல்லது உதவி தேடினால் அது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களுக்கு எந்த விதத்திலும் முறன் கிடையாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.