33) யா ரஸூலல்லாஹ் யா முஹ்யத்தீன் யா சைஹு யா ரிபாயி என்று அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கலாமா?

281

33) யா ரஸூலல்லாஹ் யா முஹ்யத்தீன் யா சைஹு யா ரிபாயி என்று அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

♦️ரஸூலல்லாஹ், முஹியத்தீன், சைஹு, ரிபாயி போன்ற பெயர்கள் இஸ்லாமிய பெயர்களே அன்றி வேறில்லை. இருப்பினும் அதற்கு முன்னார் யா என்ற பதத்தை முற்படுத்தி. யா அல்லாஹ், யா ரப்பே, என்று இறைவனை அழைப்பது போல. யா ரஸூலல்லாஹ், யா முஹியத்தீன், யா சைஹு, யா ரிபாயி என்று அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்க வேண்டாம். இவ்வாறு அழைப்பது ஷிர்க் என்ற தவறான கருத்துக்களை வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் மக்கள் மத்தியில் கூறி வருவதை நம்மால் காண முடிகிறது.

 

♦️வஹாபிஷ அமைப்புக்களின் கருத்துக்களை ஆலோசனைக்கு மாத்திரமே எடுத்துக்கொள்ள முடியும். அதை நடைமுறை படுத்த போனால் திருக்குர்ஆன் பல ஹதீஸ்களை மறுத்தது போலாகிவிடும். காரணம். ஒருவர் இன்னொருவரை அழைப்பது என்றால் அரபிகள் பெயருக்கு முன் யா என்ற பதத்தை முற்படுத்திக் கூறுவார்கள். இவ்வாறான வார்த்தைகள் திருக்குர்ஆன் ஹதீஸ்களிலும் அரபிகளின் நடைமுறைகளில் சர்வ சாதாரணமாக உள்ளது. திருக்குர்ஆனை பிரட்டி பாருங்கள்.

 

يٰۤاَيُّهَا النَّاسُ

 

குர்ஆன் கூறுகிறது (யா அய்யுஹன்னாஸ்) மனிதர்களே!

சூரா பகரா ஆயத் 21

 

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا

 

குர்ஆன் கூறுகிறது (யா அய்யுஹல்லதீன ஆமனு) ஈமான் கொண்டோரே!

சூரா பகரா ஆயத் 104

 

يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ 

 

குர்ஆன் கூறுகிறது (யா பனீ இஸ்ராயீல) இஸ்ராயீலின் மக்களே!

சூரா பகரா ஆயத் 122

 

قَالَ يٰٓـاٰدَمُ 

 

குர்ஆன் கூறுகிறது (யா ஆதம்) ஆதமே!

சூரா பகரா ஆயத் 33

 

يٰمُوْسٰى

 

குர்ஆன் கூறுகிறது (யா மூஸா) மூஸாவே!

சூரா பகரா ஆயத் 55

 

يٰبَنِىَّ

 

குர்ஆன் கூறுகிறது (யா பனீ) என் குமாரர்களே!

சூரா பகரா ஆயத் 132

 

يٰمَرْيَمُ

 

குர்ஆன் கூறுகிறது (யா மர்யம்) மர்யமே!

சூரா மர்யம் ஆயத் 27

 

يٰۤـاُخْتَ هٰرُوْنَ

 

குர்ஆன் கூறுகிறது (யா உஹ்த ஹாரூன) ஹாரூனின் சகோதரியே!

சூரா மர்யம் ஆயத் 28

 

♦️மேற்கூறிய வசனங்களில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் அல்ல. அல்லாஹ் அல்லாதவர்களுடைய பெயர்களாகும். எனவே யா ரஸூலல்லாஹ், யா முஹியத்தீன், யா சைஹு, யா ரிபாயி என்று அழைப்பது வழிகேடு ஷிர்க் என்றிருந்தால் மேற்கூறப்பட்ட வசனங்களும் ஷிர்க் இணைவைப்பாக ஆகிவிடும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மரணித்தவர்களை பெயர் கூறி அழைக்கலாமா?

 

يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (யா அய்யுஹல் முஸம்மில்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

சூரா முஸம்மில் ஆயத் 1

 

يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (யா அய்யுஹல் முதஸ்ஸிர்) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

சூரா முதஸ்ஸிர் ஆயத் 1

 

♦️மேற்கூறிய இரு வசனங்களையும் கூர்ந்து கவனியுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். உயிருடன் இருக்கும் போது இறைவன் (யா அய்யுஹல் முஸம்மில் = யா அய்யுஹல் முதஸ்ஸிர்) என்று அழைத்துள்ளான். இப்போது அவர்கள் உயிருடன் இல்லை. மரணித்து விட்டார்கள். முஸ்லிம்களாகிய நாம் மரணித்தவர்களை யா என்ற பதத்தை முற்படுத்தி பெயர் கூறியவாறு அழைப்பது ஷிர்க் இணைவைப்பு என்டிருந்தால் மேற்கூறிய இரு வசனங்களையும் ஓதுவது ஷிர்க் இணைவைப்பு என்றல்லவா அர்த்தமாகும். காரணம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஹ்ஹாபிஷ அமைப்புக்களின் பார்வையில் இப்போது உயிருடன் இல்லையே! அன்புக்குரிய ஆலிம்களே! சகோதர சகோதரிகளே! கொல்கை வெறி வேண்டாம் நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்.

 

السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ 

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹியாத்தின் போது (அஸ்ஸலாமு அழைக்க அய்யுஹன் நபிய்யு) நபியே! உங்கள் மீது ஸலாம் உண்டவதாக எனக் கூறவேண்டும்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 831, 835, 1202, 6230 முஸ்லிம் 402

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து மறைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹியாத்தின் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து ஸலாம் கூறுவது முஸ்லிம்களின் மீது கடமையாகும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

فَقالَ : يا أَبَا جَهْلِ” يا أُمَيَّةَ” يا عُتْبَةَ” ياشيبَةَ

 

பத்ரு யுத்தத்தில் மரணித்த காஃபிர்களை பெயர்களைக்கூறி (யா அபாஜஹ்ல்) அபூ ஜஹ்லே! (யா உமய்யா) உமய்யாவே! (யா உத்பா) உத்துபாவே! (யா ஷைபா) ஷைபாவே என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3976 முஸ்லிம் 2874

 

السَّلامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُورِ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத்து செய்ய சென்றால். (அஸ்ஸலாமு அலைக்கும் யா அஃலல் குபூர்) கப்ரு வாசிகளே உங்கள் மீது ஸலாம் உண்டவதாக என அழைத்துக் கூறுவார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1053

 

السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ السَّلاَمُ عَلَيْكَ يَا أَبَا بَكْرٍ

 

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபிற்கு சென்று (அஸ்ஸலாமு அழைக்க யா ரஸூலல்லாஹ்) ரஸூலே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருகிலுள்ள கப்ரை நோக்கி (அஸ்ஸலாமு அழைக்க யா அபா பக்கர்) அபூ பக்கரே உங்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள்.

 

அறிவிப்பவர் :- நாபியி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 1/498

 

♦️ஆரம்ப ஹதீஸில் மரணித்த காஃபிர்களை யா என்ற பதத்தை முற்படுத்தி ஒவ்வொருவரின் பெயர்களை கூறிக்கூறி அழைத்துள்ளார்கள். அடுத்த ஹதீஸ்களில் மரணித்த கப்ரு வாசிகளை அலைக்கும் போது யா என்ற பதத்தை முற்படுத்தி பொதுவான பெயரைக் கூறியவாறு அழைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும் போது மரணித்தவர்களில் குறிப்பாக நபிமார்கள் நல்லடியார்களின் பெயருக்கு முன் யா என்ற பதத்தை முற்படுத்தி அழைப்பது நபிவழிக்கு முறனான வழிகேடு ஷிர்க் இணைவைப்பு என்று கூறுபவர்கள் தன் மனோ இச்சை படி கூறுபவர்கள். இஸ்லாத்தை ஒழுங்கு முறைப்படி படிக்கவில்லை என்றே பொருள் கொள்ளப்படும்.

 

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى قَالَ اَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

 

குர்ஆன் கூறுகிறது அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) “என்  இறைவனே! மரணித்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய்.   (அதை) நீ எனக்குக் காண்பி” எனக் கூறியபோது, அவன் (இதை) “நீங்கள் நம்பவில்லையா?” என்று கேட்டான். (அதற்கு) அவர் “நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)” எனக் கூறினார். (அதற்கவன்) “நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விட்டு (நடுவில் இருந்து கொண்டு) அவைகளை நீங்கள் அழையுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) “நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்” என்றான்.

சூரா பகரா ஆயத் 260

 

♦️மரணித்தவைகளை அழைப்பது ஷிர்க் இணைவைப்பு என்றால்! மேற்கூறிய இறைவசனத்தின் பிரகாரம் ஷிர்க் இணைவைப்பை ஒழிக்க வந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்த பறவைகளை அழைத்தது ஷிர்க் இணைவைப்பு இல்லையா? அது மட்டுமின்றி இதனை கண்டிக்க வேண்டிய இறைவன்தான் மரணித்த பறவைகளை நீங்கள் அழையுங்கள் என்று நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்டது மிகப் பெயரிய ஷிர்க் இணைவைப்பு இல்லையா? என்பதை நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்.

 

♦️அன்புக்குரியவர்களே! அல்லாஹ் அல்லாத மனிதர்களை சிலைகளை கப்ருகளை வணங்குவது ஷிர்க் இணைவைப்பாகும். இந்த ஷிர்க் இணைவைப்பை செய்யும் படி இறைதூதர்களுக்கு இறைவன் கட்டளையிடுவானா? அதுபோல படைப்புக்கள் என்ற நோக்கில் மரணித்தவர்களை அழைப்பது ஷிர்க் இணைவைப்பு என்டிருந்தால்! மரணித்த பறவைகளை அழைக்கும் படி இறைவன் இறைதூதர்களுக்கு கட்டளையிடுவானா என்பதை நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்.

 

குறிப்பு :- அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கும் நோக்கில் கடவுள் என்ற நோக்கில் சுய சக்தி உண்டு என்ற நோக்கில் அழைக்கக்கூடாது. இவ்வாறான அழைப்புகள் அனைத்தும் ஷிர்க் இணைவைப்பாகும். அது அல்லாமல் மனிதர் நல்லடியார் என்ற நோக்கில் தாராளமாக அழைக்க முடியும். மேலும் யா ரஸூலல்லாஹ், யா முஹியத்தீன், யா சைஹு, யா ரிபாயி போன்ற பெயர்கள் மனிதர்களின் பெயரே அன்றி கடவுளின் பெயர்கள் அல்ல. இவ்வாறான பெயர்களை கொண்டு தாராளமாக மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை அழைக்க முடியும். இதுபோன்ற அழைப்புக்கள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு நேர்படுகிறதே தவிர எந்தவிதத்திலும் முறன் கிடையாது. அன்புக்குரிய வஹ்ஹாபிஷ சகோதர சகோதரிகளே! அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்கள் யா ரஸுலல்லாஹ் யா முஹ்யித்தீன் என்று கூறிவிட்டார்கள் ஷிர்க் செய்து விட்டார்கள் என்று மக்கள் மத்தியில் தவறாகவும் கிர்குதானமாகவும் பேசாதீர்கள். முடிந்த வரை திருக்குர்ஆன் ஹதீஸ்களை நல்ல முறைப்படி படியுங்கள் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.