2) நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கடவுள் யார்? தெளிவு பெறுவீர்
2) நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கடவுள் யார்? தெளிவு பெறுவீர்
கடவுள் உன்னை உருவாக்கியவனே! தவிர நீ உருவாக்கிய ஒன்று எக்காலமும் கடவுளாக இருக்க முடியாது
கடவுள் சர்வலோகம் பிரபஞ்சத்திலுள்ள சகல வஸ்துக்களையும் படைத்தவன், அவன் பரிபாலிப்பவன். ஆக படைப்பாளி படைப்புகளை உருவாக்க முடியும் அதாவது படைக்க முடியும், படைக்கப்பட்ட படைப்புக்கள் படைப்பாளியை உருவாக்க முற்படுவது முற்றிலும் தவறு அது சிலர்களின் தவறான சிந்தனையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.
படைப்பாளி படைப்புக்களை பாதுகாக்கிறான், மேலும் படைப்புக்கள் படைப்பாளியின் நாட்டத்தை கொண்டு ஏனைய படைப்புக்களை பாதுகாக்கிறது, இதில் எந்த ஒரு ஆச்சரியக்குறியும் இல்லை, ஆனால் படைப்பாளியை மனித படைப்புக்கள் பாதுகாக்கிறது, மேலும் படைப்பாளியை மனித படைப்புக்கள் கற்சிலைகளாக செய்து வேரு சில உருவ படங்களாக செய்து ஓர் இடத்தில் அவைகளை முடக்கி வைக்கிறது என்பது ஆச்சரியக்குறியே அன்றி வேறில்லை.
கேள்வி :- கடவுள் என்ற பெயரில் கற்சிலைகள் அது அல்லாத மனித சிந்தனைக்கு எட்டும் உருவங்கள் அனைத்தும் படைப்பினங்களை சார்ந்தது. மேலும் அவைகள் அழிந்து போக்கக்கூடியது. ஆக அழிந்து போகக்கூடிய கற்சிலைகள் எப்படி கடவுளாக முடியும்?
கேள்வி :- கடவுள் என்று வர்ணிக்கப்படக்கூடிய ஒருவரின் மனைவி பத்தினி தன்மையில் இருக்கிறாளா? இல்லையா? என்றுகூட அவரால் அறிய முடியவில்லை என்றால்! அப்படியாப்பட்ட ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?
கேள்வி :- நம்மை போன்ற வாழ்க்கையை வாழும் பலர்கள். நாம் பிற்காலத்தில் துறவியாக மாறுவோம் பிர மனிதர்கள் நம்மை கடவுளாக பார்ப்பார்கள் என்று அவருக்கே! தெரியாது. அப்படி இருக்க இவ்வாறான மனிதர்கள் பிற்காலத்தில் துரவியாக மாறுகிறார்கள் நல்லதை கூறுகிறார்கள் என்ற காரணத்தால்! அவர்கள் எப்படி கடவுளாக முடியும்?
கேள்வி :- கடவுள் படைப்புகளை படைத்து பரிபாலனம் செய்து வருகிறான். அடக்கி ஆளுகிறான். ஆனால் படைப்புகள் படைத்த கடவுளை அடித்து பல வேதனைகள் செய்து சிலுவையில் தொங்கவிடுகிறார்கள் என்றால்! இது எப்படி சாத்தியம் ஆகும். ஆபத்துக்கள் வரும் போது தன்னை தானே காத்துக் கொள்ள முடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?
கேள்வி :- கடவுளின் தீர்க்கதரிகள் நபிமார்கள். மேலும் நெருக்கத்தை பெற்ற நல்லடியார்களின் தர்ஹா கல்லறைகளை மஸ்ஜித் வணக்கஸ்தலமாக சிலர்கள் எடுத்த காரணத்தால்! நபிமார்கள் நல்லடியார்கள் கடவுளாக முடியுமா?
கேள்வி :- கடவுள் ஒருவன் என்று ஏற்றுக் கொள்ளும் சிலர்கள் அத்தகைய கடவுளுக்கு கற்பனையில் கை கால் முகம் போன்ற மனித உருவம் கற்பித்து. அத்தகைய கடவுளை உயரமான ஓர் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டால்! அவன் உன்மையான கடவுளாக முடியுமா?
மேற்கூறிய கேள்விகள் என் மனதில் எழும் சந்தேகங்களே! அன்றி வேறில்லை. பிரமதக் கடவுள்களை மதிக்க வேண்டும். அவைகளுக்கு ஏசக்கூடாது என்று இஸ்லாம் பறைசாற்றுகிறது. சகல மதங்களும் பல கோணங்களில் இருந்தாலும் அடிப்படையில் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்றே ஏற்றுக் கொள்கிறது. அத்தகைய ஓர் கடவுளை பல கடவுள்களாக மாற்றியது மனிதர்களே! அன்றி கடவுள் அல்ல. கடவுள் யார் என்பதை அறிந்து வணங்குங்கள்.
குறிப்பு :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவதிகளின் பார்வையில் கடவுள் என்பவன் ஒருவன், அவன் தனித்தவன், அவனுக்கு இணையுமில்லை துணையுமில்லை, அவன் தேவையற்றவன், அவனே அனைவருக்கும் தேவை, அவன் யாரையும் பெறவில்லை யாராலும் பெறப்படவுமில்லை, அவனை போல் வேறொன்று இல்லை, சுய சக்தி என்பது அவனை தவிர வேறு யாருக்குமில்லை, அவன் எப்பொழுதும் எங்கும் இருக்கிறான், அவனுக்கு மறைவாக எதுவும் இல்லை, அவனுக்கு ஆரம்பமுமில்லை முடிவுமுமில்லை, அவன் தான் எல்லாவற்றயும் படைத்து பாதுகாக்கிறான், அவன் உங்களை அடக்கி ஆளுகிறான், உங்களால் அவனை அடக்கி ஆள முடியாது, அவனை முழுமையாக ஏற்ற நிலையில் அவனை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். கடவுள் ஒருவன் என்று உறுதியாக மக்கள் மத்தியில் உறக்கச் சொன்ன தீர்க்கதரிசி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் உறுதியாக ஏற்று அவர்களது போதனைகளையும் பின்பற்றி நடங்கள்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்