34) அல்லாஹ் நாடினால் உயிரற்ற கற்களும் கற்சிலைகள் பேசுமா? உதவி செய்யுமா? இவைகளை அழைத்தால் ஷிர்க்கா?
34) அல்லாஹ் நாடினால் உயிரற்ற கற்களும் கற்சிலைகள் பேசுமா? உதவி செய்யுமா? இவைகளை அழைத்தால் ஷிர்க்கா?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
♦️பொதுவாகவே சில கற்சிலைகள் மாற்று மதத்தினர்களுக்கு கடவுள். முஸ்லிம்களை பொறுத்தவரை அது கடவுள் அல்ல வெறும் கற்கள் தான். அல்லாஹ் நாடினால் அதற்கு சக்தியை கொடுப்பான். அவன் நாடினால் சில சமயங்களில் அதன் மூலமும் உதவி கிடைக்கக்கூடும் இதுவே முஸ்லிம்களின் ஆழமான இறைநம்பிக்கையாகும்.
قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ
குர்ஆன் கூறுகிறது. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) “ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)” என்று கேட்டார். மேலும்
قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى
குர்ஆன் கூறுகிறது. அதற்கவன் “அவர்கள் பார்க்காததொன்றை நான் பார்த்தேன். தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது” என்று கூறினான்.
சூரா தாஹா ஆயத் 95,96
♦️பசுமாட்டின் வடிவிலுள்ள கற்சிலைகள் எப்படி சத்தமிட முடியும்? இதற்கு சக்தியை அல்லாஹ் கொடுப்பானா? அல்லது அது சுயமாக சத்தமிட்டதா? என்ற அவநம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை விட்டு விடுங்கள். அல்லாஹ் நாடினால் பசுவின் வடிவிலுள்ள கற்சிலை மட்டுமின்றி அது அல்லாத கற்சிலைகளும் இவ்வுலகில் பேசும் என்ற ஆழமான இறைநம்பிக்கையை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்காவில் உள்ள ஓர் கல்லை நான் நன்கு அறிவேன் நான் நபியாக அனுப்ப படுவதற்கு முன்னரே அந்த கல் எனக்கு ஸலாம் சொல்லி கொண்டு இருந்தது அதை நான் இப்பொழுதும் பார்க்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2277 திர்மிதி 3441
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு’ என்று கூறும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2926 முஸ்லிம் 2922
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி அந்த கற்கள் அறிந்து கொண்டது? கற்கள் எப்படி ஸலாம் கூறியது? கற்கள் எப்படி யூதனை அறிந்து கொண்டது? கற்கள் எப்படி முஸ்லிம்களுடன் பேச முடியும்? மேலும் யூதர்களுக்கு பாதகமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எப்படி உதவி செய்ய முடியும்? என்ற அவநம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை விட்டு விடுங்கள். அல்லாஹ் நாடினால் கற்களும் இவ்வுலகில் பேசும். உதவியும் செய்யும் என்ற ஆழமான இறைநம்பிக்கையை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.
عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ
(ஒரு முறை) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூ பக்கர, உமர், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹும் ஆகீயோரும் (கற்பாறை) உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புகாரி 3675
♦️உயிரற்ற கற்பாறைகளுடன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசி தவறிளைத்து விட்டார்கள் ஷிர்க் இணைவைத்து விட்டார்கள் என்ற கருத்தை வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் கூற முற்படுவார்களா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
♦️அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! கூர்ந்து கவனியுங்கள் அழிந்து போகக்கூடிய சுய சக்தி அற்ற கற்பாறைகளுடன் கற்சிலைகளுடன் பேசினால்! அல்லது அழிந்து போகக்கூடிய சுய சக்தி அற்ற கற்களே! கற்சிலைகளே! எனக்கு உதவி செய் என்று ஒருவர் கூறினால்! அது இஸ்லாத்தின் பார்வையில் ஷிர்க் இணைவைப்பாகாது. அது அல்லாமல் அழிந்து போகாத கற்களே! கற்சிலைகளே! நீங்கள் தான் கடவுள். சுய சக்தி உங்களுக்கு உண்டு என்ற அவநம்பிக்கையுடன் ஒருவர் அழைத்தால்! அல்லது எனக்கு உதவி செய் என்று கூறினால்! அது ஷிர்க் இணைவைப்பாகும்.
குறிப்பு :- கற்களும் கற்சிலைகளும் உயிற்ற பொருட்களாகும். அவைகளுக்கு இறைவன் சக்தி கொடுப்பானா? கொடுக்க மாட்டானா? என்ற அவநம்பிக்கை சார்ந்த கேள்விகளை விட்டு விடுங்கள். அல்லாஹ்வை தவிர வேறெந்த ஒன்றுக்கு சக்தி கிடையாது. இறைவன் நாடினால் கற்களுக்கு மட்டும் அல்ல. காய்ந்து போன மரக்கட்டைகளுக்கும் சக்தியை கொடுப்பான் என்பதே அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களின் ஆழமான இறைநம்பிக்கையாக இருத்தல் வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்