35) உயிருள்ள மனிதர்களிடம் நேரடியாக உதவி தேடலாமா?
35) உயிருள்ள மனிதர்களிடம் நேரடியாக உதவி தேடலாமா?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
குர்ஆன் கூறுகிறது (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
சூரா ஃபாத்திஹா ஆயத் 5
♦️உன்னையே வணங்குகிறோம் உன்னை தவிர வணங்கி வழிபடத் தகுயற்றவன் இவ்வுலகில் வேறு யாருமில்லை. உயிருள்ள மனிதர்களாக இருந்தாலும் சரி மரணித்த நபிமார்கள் நல்லடியார்களாக இருந்தாலும் சரி. அது அல்லாத எந்தப் படைப்புக்களாக இருந்தாலும் சரி அவைகள் வணங்கி வழிபட தகுதியற்றவையாகும்.
♦️உன்னையே! வணங்கி வழிபட்ட நிலையில் உன்னிடமே உதவி தேடுகிறோம். உன்னை தவிர சுயமாக உதவி செய்பவன் வேறுயாரும் இல்லை. வணங்கும் நோக்கில் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடவேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ
குர்ஆன் கூறுகிறது மூஸா நபியின் சமுதாயம் அவர்களிடத்தில் தண்ணீரை தேடியது.
சூரா பகரா ஆயத் 60
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ
குர்ஆன் கூறுகிறது ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் என்றனர்.
சூரா ஸஃப்பு ஆயத் 14
قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ
குர்ஆன் கூறுகிறது (ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) “சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று கேட்டார்.
சூரா நம்லு ஆயத் 38
قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ
குர்ஆன் கூறுகிறது அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்” என்றுகூறினார்.
சூரா கஹ்ப் ஆயத் 95
وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
குர்ஆன் கூறுகிறது இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
சூரா மாயிதா ஆயத் 2
♦️உதவி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது. அவன் நாடியவர்கள் நாடியவைகளை கொண்டு உதவி செய்வான். மேலும் வணங்கும் நோக்கம் அல்லாமல் சுய சக்தி அற்ற படைப்புக்கள் என்ற நோக்கில் குறிப்பாக நபிமார்கள் நல்லடியார்கள் என்ற நோக்கில் தாராளமாக உதவி தேடிக் கொள்ளலாம். இவ்வாறு உதவி தேடிக் கொள்வதில் எவ்வித குற்றமும் இல்லை என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்