36) மரணித்த நபிமார்கள் நல்லடியார்களிடம் நேரடியாக உதவி தேடலாமா?
36) மரணித்த நபிமார்கள் நல்லடியார்களிடம் நேரடியாக உதவி தேடலாமா?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلَاةً قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ فَرَاجَعَنِي فَوَضَعَ شَطْرَهَا فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا، فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ فَرَاجَعْتُهُ فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது ‘உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?’ என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது’ என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது ‘ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமமாக.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 349, 1636, 3342, 3393, 3570, 7517 முஸ்லிம் 162, 163 திர்மிதி 213
♦️மரணித்த நபிமார்கள் நல்லடியார்களிடம் உதவி தேடுவது ஷிர்க் இணைவைப்பு என்றால் 5 வக்து தொழுகைக்கு பதிலாக நாம் 50 வக்து தொழுகையை தான் இந்த வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் தொழ வேண்டும். காரணம் 50 வக்து தொழுகையை 5 வக்தாக மாறும் அளவிற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதவி செய்தவர்கள் முற்றிய சமூகத்தில் வாழ்ந்த மரணித்த தீர்க்கதரிசி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عُتْبَةَ بْنِ غَزْوَانَ عَنْ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَضَلَّ أَحَدُكُمْ شَيْئًا أَوْ أَرَادَ أَحَدُكُمْ عَوْنًا وَهُوَ بِأَرْضٍ لَيْسَ بِهَا أَنِيسٌ فَلْيَقُلْ يَا عِبَادَ اللهِ أَغِيثُونِي يَا عِبَادَ اللهِ أَغِيثُونِي فَإِنَّ لِلَّهِ عِبَادًا لَا نَرَاهُمْ وَقَدْ جُرِّبَ ذَلِكَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஏதாவது ஒன்றை தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம் இல்லாத பகுதிகளில் இருக்கும் நிலையில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அச்சமயம் அல்லாஹ்வின் அடியார்களே!. என்னை காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னை காப்பாற்றுங்கள். என்று கூறட்டும். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் :- உத்பா இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி 14146
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَلْيُنَادِ أَعِينُوا عِبَادَ اللَّهِ” رَوَاهُ الْبَزَّارُ وَرِجَالُهُ ثِقَاتٌ
فلاة فليناد :- أعينوا عباد الله وهو حديث صحيح لا غبار عليه فرجالة ثقات قال الهيثمي في مجمع الزوائد رواه البزار ورجاله ثقات قال الحافظ في تخريج الأذكار شرح ابن علان حسن الإسناد غريب جداً ورواه ايضا بسند صحيح البيهقي في الشعب وابن عساكر من طريق عبد الله بسند صحيح
அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள் என்பதாகக் கூறுங்கள் என்ற கருத்தை தரும் மேற்கூறிய ஹதீஸ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியாக பஸ்ஸார் என்ற கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள மேற்கூறிய இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
♦️மனித இனம் இல்லாத பகுதிகளில் இருக்கும் நிலையில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அச்சமயம் அல்லாஹ்வின் அடியார்களே! என்று அழையுங்கள் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பிரகாரம். அல்லாஹ்வின் அடியார்களே என்ற வார்த்தை குறிப்பாக மலக்குகளை குறிக்கும் மேலும் மறைந்து வாழும் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களையும் ஜின்களையும் குறிக்கும்.
عَنْ مَالِكِ الدَّارِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَصَابَ النَّاسَ قَحَطٌ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اسْتَسْقِ اللَّهَ لأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ فَقَالَ ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلامَ وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْقَوْنَ وَقُلْ لَهُ عَلَيْكَ الْكَيْسَ الْكَيْسَ فَأَتَى الرَّجُلُ عُمَرَ فَأَخْبَرَهُ فَبَكَى عُمَرُ ثُمَّ قَالَ يَا رَبُّ مَا آلُو إِلا مَا عَجَزْتُ عَنْهُ
وهو حديث صحيح صححه الحافظ ابن حجر العسقلاني حيث قال ما نصه وروى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الدار وقد روى سيف في الفتوح أن الذي رأى المنام المذكور هو بلال بن الحارث المزني أحد الصحابة فتح الباري، الحافظ ابن كثير وقال هذا إسناد صحيح البداية والنهاية والحديث قد صححه كبار الحفاظ فيصلح أن يكون دليلًا على جواز الطلب من النبي صلي الله عليه وسلم بالاستسقاء والدعاء بعد انتقاله الشريف صلي الله عليه وسلم وحسن السقاف الإغاثة بإسناد صحيح من رواية أبي صالح السمان
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் மக்கள் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (பிலால் இப்னு ஹாரிஸ் அல் முஸ்னி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு வருகை தந்து” யா ரஸூலுல்லாஹ்! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அழிந்து விட்டார்கள் ” என்று கூறினார்கள். பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்த மனிதரின்) கனவில் வந்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று (எனது) ஸலாத்தை கூறுங்கள் மேலும் நீங்கள் (மக்களுக்கு) மழை பொழிவிக்கப்படும் (எனவும்) நீங்கள் (உமர் ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் விவேகமாக நடந்து கொள்ளுங்கள், நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுங்கள்” எனக் கூறினார்கள். (பின்) அந்த மனிதர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இந்த செய்தியை கூறினார்கள். (இதனை கேட்ட) உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். பிறகு “என்னுடைய இரட்சகனே! எனது சக்திக்கு அப்பாற்பட்டதை தவிர நான் எதையும் முயற்சி செய்யாமலில்லை” என கூறினார்கள்.
அறிவிப்பவர் :- மலிக்குத்தார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஆதாரம் இப்னு அபீ ஷைபா 6/356 பைஹகி” தலாயிலுன் நுபுவ்வா 7/47 இப்னு அஸாகிர்” தாரீஹ் தமஸ்க் 489
♦️இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபிற்கு சென்று மறைந்து வாழும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாக அழைத்து உதவி தேடுவது ஸஹாபாக்களின் காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது என்ற கருத்தை மேற்கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻳَﻘُﻮﻝُ ﻭَﺍﻟَّﺬِﻱ ﻧَﻔْﺲُ ﺃَﺑِﻲ ﺍﻟْﻘَﺎﺳِﻢِ ﺑِﻴَﺪِﻩِ ﻟَﻴَﻨْﺰِﻟَﻦَّ ﻋِﻴﺴَﻰ ﺍﺑْﻦُ ﻣَﺮْﻳَﻢَ ﺇِﻣَﺎﻣًﺎ ﻣُﻘْﺴِﻄًﺎ ﻭَﺣَﻜَﻤًﺎ ﻋَﺪْﻻ ﻓَﻠَﻴَﻜْﺴِﺮَﻥَّ ﺍﻟﺼَّﻠِﻴﺐَ ﻭَﻟَﻴَﻘْﺘُﻠَﻦَّ ﺍﻟْﺨِﻨْﺰِﻳﺮَ ﻭَﻟَﻴُﺼْﻠِﺤَﻦَّ ﺫَﺍﺕَ ﺍﻟْﺒَﻴْﻦِ ﻭَﻟَﻴُﺬْﻫِﺒَﻦَّ ﺍﻟﺸَّﺤْﻨَﺎﺀَ ﻭَﻟَﻴُﻌْﺮَﺿَﻦَّ ﻋَﻠَﻴْﻪِ ﺍﻟْﻤَﺎﻝُ ﻓَﻼ ﻳَﻘْﺒَﻠُﻪُ ﺛُﻢَّ ﻟَﺌِﻦْ ﻗَﺎﻡَ ﻋَﻠَﻰ ﻗَﺒْﺮِﻱ ﻓَﻘَﺎﻝَ ﻳَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﻷُﺟِﻴﺒَﻨَّﻪُ
أخرجه أبو يعلى في مسنده أخبره أنه سمع أبا هريرة يقول سمعت رسول الله صلى الله عليه وسلم فذكره قلت و هذا إسناد جيد رجاله كلهم ثقات رجال و صحح له ابن حبان و الحاكم والبوصيري و مشاه المنذري فانظر الحديث من كتابي صحيح الترغيب والترهيب والحديث قال الهيثمي ورجاله رجال الصحيح
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அபுல் காஸிமின் உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவனின் மீதாணையாக, ‘ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வானத்திலிருந்து) நீதமான நேர்மையான இமாமாக இறங்கி வந்து, சிலுவைகளை உடைப்பார்கள், மேலும் பன்றிகளை கொல்லுவார்கள், மேலும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வார்கள், மேலும் விரோதம் குரோதம் போன்ற கசடுகளை போக்குவார்கள் மற்றும் பொருட்களை புறக்கணிப்பார்கள். அதை வாங்க ஒருவரும் (அந்நேரத்தில் ஏழைகள்) இருக்கமாட்டார்கள். இறுதியாக என்னுடைய கப்ரு ரவ்ளாவிற்கு வந்து, முஹம்மதே! என்று என்னை அழைத்தால் அவர்களுடைய அழைப்பிற்கு நான் பதில் கூறுவேன் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மவுஸ் ஸவாயித் 13813, அபூ யஃலா 6584
♦️என்னுடைய மரணத்திற்கு பின்னர் நான் மறைந்து வாழும் என்னுடைய கப்ரு ரவ்ளா ஷரீபிற்கு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து என்னை அழைத்தாள்! அதற்கு நான் நேரடியாக பதில் கொடுப்பேன் என்ற கருத்தை மேற்கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَدِمَ عَلَيْنَا أَعْرَابِيٌّ بَعْدَ مَا دَفَنَّا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثَةِ أَيَّامٍ فَرَمَى بِنَفْسِهِ عَلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَثَا مِنْ تُرَابِهِ عَلَى رَأْسِهِ وَقَالَ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ فَسَمِعْنَا قَوْلَكَ وَوَعَيْتَ عَنِ اللَّهِ فَأَوْعَيْنَا عَنْكَ وَكَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ عَلَيْكَ {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا} [النساء: ٦٤] وَقَدْ ظَلَمْتُ نَفْسِي وَجِئْتُكَ تَسْتَغْفِرَ لِي، فَنُودِيَ مِنَ الْقَبْرِ أَنَّهُ قَدْ غُفِرَ لَكَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடக்கம் செய்து மூன்று நாட்கள் கழிந்தபிறகு ஒரு கிராம அரபி வந்து, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது விழுந்தார். தலையில் மண் படிந்திருந்தது. அச்சமயம் யா ரஸூலல்லாஹ்! உமது சொல்லுக்கு கட்டுப்பட்டுள்ளேன். அல்லாஹ் இறக்கி அருளிய (4:64) வசனத்தை உங்கள் மூலம் கேட்டுள்ளேன். எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டுவிட்டேன். இறைவனிடத்தில் எனக்காக தாங்கள் மண்ணிப்பு கோரவேண்டும் என்று (இதோ!) இப்போது உங்களிடம் வந்துள்ளேன். எனக்காக மண்ணிப்பு கோருவீராக! என்றார். அப்போது, உமது பாவம் மண்ணிக்கப்பட்டது என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா (கப்ருஸ்தானங்க)லிருந்தே சப்தம் வந்தது.
அறிவிப்பவர் :- அலி இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ஸீர் குர்துபி 5/265
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدِرَتْ رِجْلُ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ لَهُ رَجُلٌ اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ فَقَالَ يَا مُحَمَّدُ فَبَسَطَهَا
روى الإمام البخاري في كتابه الأدب المفرد حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن أبي إسحاق عن عبد الرحمن بن سعد رضي الله عنه قال خدرت رجل ابن عمر فقال له رجل اذكر أحب الناس إليك فقال يا محمد وإسناد البخاري هذا صحيح لا علة فيه فأبو نعيم هو الفضل بن دكين ثقة إمام ثبت في الحديث وأما سفيان فهو سفيان الثوري شيخ الإسلام إمام الحفاظ، سيد العلماء العاملين في زمانه الإمام المجتهد وأما أبو إسحاق فهو السبيعي ثقة من العلماء العاملين ومن جلة التابعين ولما كبر تغير حفظه تغير السن ولكن رواية الثوري عنه كانت قبل ذلك وأما عبد الرحمن بن سعد فقد وثقه النسائي وذكره ابن حبان في كتاب الثقات
ஒரு தினம் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கால் மரத்து சோர்வடைந்த போது, அச்சமயம் “உங்களிக்கு மிகவும் விருப்பமான ஒருவரின் பெயர் கூறி அழையுங்கள்” எனக்கூறப்பட்டது. உடனே “யா முஹம்மதா! (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே எனக்கு உதவுங்கள்) என்று உரத்த குரலில் கூவினார். (கால் மறுப்பு) உடன் நீங்கி விட்டது.
அரிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸயித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அதபுல் முப்ரத் 959
♦️ஆரம்ப ஹதீஸில் கிராம அரபி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபிற்கு வந்து நேரடியாக உதவி தேடியது மட்டுமின்றி அந்த உதவியை வெகுவிரைவில் பெற்றுக் கொண்டார்கள் என்றும் மற்ற ஹதீஸில் தனக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கூறியவாறு அழைத்தார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- உதவி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது. அவன் நாடியவர்களை கொண்டு உதவி செய்வான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் உயிருள்ள மனிதர்களை கொண்டு எவ்வாறு இறைவன் உதவி செய்வானோ அதேபோல் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களும் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள். அத்தகைய நபிமார்கள் நல்லடியார்களை கொண்டும் இறைவன் நாடினால் நிச்சயம் உதவி செய்வான் என்ற இறைநம்பிக்கையை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் உயிருள்ள மனிதர்களுக்கு அல்லது மரணித்த நபிமார்கள் நல்லடியார்களுக்கு சுய சக்தி உண்டு என்ற அவநம்பிக்கையில் வணங்கும் நோக்கில் அழைத்து உதவி தேடுவதன் மூலம் உதவி கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி இது போன்ற அழைப்புக்கள் அனைத்தும் ஷிர்க் இணைவைப்பாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்