ஹலரா திக்ரு மஜ்லிஸ். சத்தமிட்டு ஆடி அசைந்து திக்ரு செய்வது நபிவழியாகும்
ஹலரா திக்ரு மஜ்லிஸ். சத்தமிட்டு ஆடி அசைந்து திக்ரு செய்வது நபிவழியாகும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
1) திக்ரு மஜ்லிஸில் ஒன்று கூடுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ، يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ. قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهْوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ، وَيُكَبِّرُونَكَ، وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ. قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْكَ. قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً، وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا، وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا. قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا، وَأَشَدَّ لَهَا طَلَبًا، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً. قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنَ النَّارِ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا، وَأَشَدَّ لَهَا مَخَافَةً. قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ. قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ. قَالَ هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்’ என்று கூறுவான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6408
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ ؛ فَارْتَعُوا ” قَالُوا : وَمَا رِيَاضُ الْجَنَّةِ ؟ قَالَ : حِلَقُ الذِّكْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுவனத்துப் பூங்காவின் பக்கம் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதனுடைய “பழங்களை சாப்பிடுங்கள்”. சஹாபாக்கள் கேட்டார்கள் “சுவனத்து பூங்கா என்றால் என்ன? என்று. அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் செய்ய ஒன்று கூடும் இடம் திக்ர் மஜ்லிஸ் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3510 அஹ்மது 12523
قلنا يا رسول الله وما رياض الجنة؟ قال : مجالس الذكر
நாங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யா ரஸுலல்லாஹ்! சுவனத்து பூங்கா என்றால் என்ன? என்று கேட்க. அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் செய்ய ஒன்று கூடும் இடம் திக்ர் மஜ்லிஸ் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 954
2) சத்தமிட்டு திக்ரு செய்யுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ، فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ، قَالَ لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ
ஒரு மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து, யா ரஸூலல்லாஹ் ! இஸ்லாத்தில் நிறைய கட்டளைகள் இருக்கின்றன. நான் உறுதியாக பற்றிப் பிடித்து கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை சொல்லித் தாருங்கள் என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எப்பொழுதும் அல்லாஹ்வுடைய திக்ரிலேயே உன்னுடைய நாவை ஈரமாக இருக்கவை என பதில் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் புஷ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3375 இப்னு மாஜா 3793 அஹ்மது 17680
மௌனமாக திக்ரு செய்தால் நாவு ஈரமாக மாட்டாது சத்தமிட்டு திக்ரு செய்யும் போது உங்களுடைய நாவு ஈரமாகிக் கொண்டே இருக்கும் என்ற கருத்தை நாம் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ள முடிகிறது.
عَنْ خَلَّادِ بْنِ السَّائِبِ بْنِ خَلَّادٍ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَتَانِي جِبْرِيلُ، فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالْإِهْلَالِ، وَالتَّلْبِيَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து (அல்லாஹ்வை நினைவு கூறும் போது) தல்பியா சொல்லும் போது என் தோழர்களான ஸஹாபாக்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஹல்லாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 829 நஸாயி 2922
أَخْبَرَنِي عَمْرٌو أَنَّ أَبَا مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ ابْنُ عَبَّاسٍ : كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ
மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும் போது சப்தமாகத் திக்ரு செய்யும் நடைமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்ரின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 841 முஸ்லிம் 583
3) நின்ற நிலையில் அமர்ந்த நிலையில் திக்ரு செய்யுங்கள்
فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ
நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
(அல்குர்ஆன் : 4:103)
اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ
திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் : 3:190)
الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும் போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; (திக்ரு செய்கிறார்கள்) மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 3:191)
4) ஆடி அசைந்த வண்ணம் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்
عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَتِ الْحَبَشَةُ يَزْفِنُونَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَرْقُصُونَ، وَيَقُولُونَ : مُحَمَّدٌ عَبْدٌ صَالِحٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَقُولُونَ؟ قَالُوا : يَقُولُونَ : مُحَمَّدٌ عَبْدٌ صَالِحٌ
ஹபஷிகளான தோழர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடையே ஆடி அசைந்து கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸாலிஹான நல்லடியாராகும் என அவர்களுடைய பாஷையில் பேசி கொள்வார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள். அதற்கு “முகம்மதுன் அப்துன் ஸாலிகூன் என கூறுகின்றனர் என அவர்கள் விடையளித்தனர்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 12540 இப்னு ஹிப்பான் 5870
روي فى الحديث أنّ جعفربن أبي طالب رضي الله عنه رقص بين يدي النّبيّ صلّى الله عليه وسلّم لمّا قال له أشبهتَ خلقي وخلُقي. وذلك من لذّة هذا الخطاب، ولم ينكر عليه صلّى الله عليه وسلّم
ஜஃபர் இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் உருவத்திலும், பண்பிலும் என் போன்று உள்ளீர் என்று சொன்ன போது அவர்களுக்கு முன்னிலையில் ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (மகிழ்ச்சியால்) ஆடி அசைந்தார்கள். இச்செயலை கண்டும் கூட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மறுப்பும் கூறவில்லை.
அறிவிப்பவர் :- ஜஃபர் இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அல்பதாவல் ஹதீதிய்யாஹ் 217
عن علي رضي الله عنه كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا ذكروا الله مادوا كما تميد الشجرة في يوم ريح
நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் காற்று அதிகளவில் வீசும் போது மரங்கள் எப்படி ஆடி அசையுமோ அதுபோல் அவர்களும் ஆடி அசைந்து திக்ரு செய்வார்கள்.
அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹில்யத் அல் அவ்லியா 1/76 அல் பிதாயா வன் நிஹாயா 8/6
5) உங்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் அளவிற்கு நீங்கள் அதிகம் அதிகமாக திக்ரு செய்யுங்கள்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” أَكْثِرُوا ذِكْرَ اللَّهِ حَتَّى يَقُولُوا : مَجْنُونٌ
(اكثروا ذكر الله حتى يقولوا)
أي المنافقون (مجنون)
العزيزي، السراج المنير شرح الجامع الصغير في حديث البشير النذير، ٢٨١/١
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (முனாஃபிக், நயவஞ்சகர்கள்) உங்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அதிகம் அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.
அறிவிப்பவர் :- ஸயீத் அல்குதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 11653, 11674 இப்னு ஹிப்பான் 2562
குறிப்பு :- ஹலரா திக்ரு மஜ்லிஸ் அதாவது முஸ்லிம்கள் முஃமின்கள் ஒன்றிணைந்து நின்ற நிலையில் அமர்ந்த நிலையில் சத்தமிட்டு ஆடி அசைந்த வண்ணம் அல்லாஹ்வை திக்ரு செய்வது நபிவழியாகும். மேலும் இது போன்ற செயல்கள் நடைபெறும் போது காஃபிர்கள், வஹாபிகள், ஷீஆக்கள், முனாஃபிக் நயவஞ்சகர்களான இஸ்லாத்தின் எதிரிகள் உங்களைப் பார்த்து பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அதிகம் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள், ஒன்றினைந்து ஆடி அசைந்த வண்ணம் சத்தமிட்டு திக்ரு செய்யுங்கள் என்ற கருத்தையும். மேலும் மகிழ்ச்சி வெளிப்படும் போது சந்தோசத்தில் ஆடி அசைவது திருக்குர்ஆன் ஹதீஸ்களை மனனம் செய்யும் மாணவர்கள் ஆடி அசைந்த வண்ணம் திருக்குர்ஆன் ஹதீஸ்களை மனனம் செய்வது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இதுபோன்ற செயல்கள் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் இல்லை என்ற கருத்துக்களை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்