37) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை முஃமின்கள் வணக்கஸ்தங்களாக எடுத்துக் கொண்டார்களா?

352

37) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை முஃமின்கள் வணக்கஸ்தங்களாக எடுத்துக் கொண்டார்களா?

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا

 

حكم الحديث :- إسناده قوي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவா! எனது கப்ருஸ்தானத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று பிரார்த்தனை செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 7358

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் அமைந்துள்ளது. வீடு ஆரம்பத்தில் மண்ணால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அதன் பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில் கற்களை கொண்டு கட்டப்பட்டது மட்டுமின்றி அவர்களின் கப்ரு ஒட்கத்திமில் போன்று உயரமாகவும் சிவப்பு கற்கள் நட்டப்பட்ட நிலையிலும் அவர்களை முன்நிறுத்தி அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபை முன்நிறுத்தி நேரடியாகவும் வஸீலா மூலமும் உதவி தேடுவது ஸஹாபாக்கள் காலத்தில் இருந்து வந்தது. இது பற்றிய தெளிவுகள் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் ஆதாரங்களுடன் முன்னர் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

 

♦️இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் என்னுடைய கப்ருஸ்தானத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட துஆவை இறைவன் அங்கிகரித்த காரணத்தினால் அன்று தொற்றும் இன்று வரைக்கும் அவர்களுடைய கப்ரு ரவ்ளா ஷரீபை யாரும் வணக்கத்தலாமாக எடுக்கவில்லை என்ற கருத்தை அனைவரும் அறிவார்கள். இருப்பினும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் அடையாளமாக கட்டப்பட்ட நிலையிலும் அதனை சுற்றி கட்டிடங்கள் குப்பாக்கள் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட நிலையிலும் ஹஜ் உம்ரா மற்றும் ஸியாரத் செய்யும் நோக்கில் செல்லும் அஹ்லுஸ் ஸுன்னா முஃமின்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்நிருந்தி அவர்களின் கப்ரை முன்நிறுத்தி நேரடியாகவும் வஸீலா மூலமும் அன்று தொற்றும் இன்று வரை உதவி தேடி வருகின்றனர். இங்கு இவைகளை சுற்றிக் காட்டியதன் நோக்கம் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை அடையாளமாக வைத்திருப்பதும். அந்த இடங்களில் கட்டிடங்கள் அமைந்திருப்பதும். அவர்களை முன்நிறுத்தி வஸீலா மூலமும் நேரடியாகவும் உதவி தேடுவதும் ஷிர்க் இணைவைப்பு என்றிருந்தால் மதீனா நகரிலுள்ள நபவி பள்ளிவாசலில் அமைந்திருக்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபில் மாபெரும் ஷிர்க் இணைவைப்பு நடைபெறுகிறது என்றல்லவா அர்த்தமாகும். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்கவில்லை என்றல்லவா அர்த்தமாகும்.

 

குறிப்பு :- அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை அடையாளமாக வைத்திருப்பதும். அந்த இடங்களில் கட்டிடங்கள் அமைந்திருப்பதும் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை கொண்டு உதவி தேடுவதும் ஷிர்க் இணைவைப்பாக கருதப்பட மாட்டாது. மேலும் நபிமார்கள் நல்லடியார்களுக்கு சுய சக்தி உண்டு என்ற நோக்கில் வணங்கி வழிபடும் நோக்கில் கட்டிடங்கள் அமைப்பது அவர்களை கொண்டு உதவி தேடுவது ஷிர்க் இணைவைப்பாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னாஏஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.