5) ஜலாலுதீன் ரூமி (ரஹ்) அவர்களின் தத்துவக் கவிதைகள்
நேற்று நான் புத்திசாலியாக இருந்தேன் அதனால் உலகை மாற்றி விட விரும்பினேன். இன்று நான் மதி நுட்பமுள்ளவனாக இருக்கிறேன். எனவே விரைவில் என்னை நான் மாற்றிக் கொள்வேன்.
தற்பெருமையை பொதியாய் சுமந்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களை விட்டுவிடு!
உன் மிஹ்ராப்தொழுமிடத்தை உன் உள்ளத்தில் அமைத்துக் கொள்!
அறிவுக்கலை என்பது எதை நீ அறியக்கூடாதென அறியும் கலை!
நூலகத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது: “நூலொன்று எடுத்து அதில் உன்னைக் கண்டுபிடி”
சொல்லப்பட வேண்டிய அறிவுரை இதற்கு நேர் மாற்றமானது ‘உன்னில் நூலைக் கண்டுபிடி” என்றார் சூஃபி
உன்னிரு கண்களை ஒளியின் மீதே நிலைத்திருக்கச் செய்… இந்த எல்லா இருள்களையும் விளங்கிக் கொள்வதற்காக!
மற்றவர்களுக்கு ஒப்பாகுவதில் என் ஆயுளைக் கழித்தேன் ஆனால் என் உள்ளமையை நான் கண்டு கொள்ளவில்லை.
பிறகு என் ஆழங்களுக்குள் பார்வையிட்டேன் என் பெயரைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. அதன்பின் என்னை விட்டு வெளியே அடியெடுத்து வைத்தேன் என்னைச் சந்தித்தேன்
இந்த எல்லா வேதனைக்கும் உன் உள்ளத்தில் எப்படி இடமளிக்க முடியும்? என்று கேட்டேன், “உன் கண்களுக்கு அவை எவ்வளவு சிறியவை என்று பார், ஆனால் இந்த படைப்புலகமோ.” என்று பதிலளித்தார்கள்.
வாசிப்பின் மூலம் கற்றுக் கொள்வாய் ஆனால் அன்பின் மூலம் தான். புரிந்து கொள்வாய்.!
உன் உள்ளத்தில் ஏதோவொரு மலரை அவர்கள் மரிக்கச் செய்தாலென்ன.. உன் தோட்டம் உயிரோடே இருக்கிறது
அன்பில்லாமல் இருந்து விடாதீர்கள் நீங்கள் ஒரு சடலம் என்று உணராதிருப்பதற்காக.. அன்பில் மரணித்து விடுங்கள் எப்போதும் உயிருடன் எஞ்சியிருங்கள்
நான் அநேக மனிதர்களைப் பார்த்துள்ளேன், அவர்களின் உடலில்
ஆடையிருப்பதில்லை நான் அநேக ஆடைகளைப் பார்த்துள்ளேன்; அவற்றினுள் மனிதனிருப்பதில்லை
உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும் தான் இந்த வாழ்க்கை. அதில் அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்!
மாதுளை முத்துக்களை ஒவ்வொன்றாக அதன் தொலிக்குள் வைத்த சக்தி எந்த உள்ளத்தினுள் உன்னை வைக்க வேண்டுமென்பதை அறிந்து வைத்துள்ளது. எனவே கலக்கமடையாதே!
ஒரு நிலவு போல என் கிணற்றினுள் விழுந்தார் யூசுஃப்
கவிதைகளின்
உள்ளிருக்கும் துடிப்புகளைக் கேள் அவை விரும்பும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லட்டும். உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு அதன் அருகாமையை நழுவவிடாதே ஒரு போதும்
ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்
தொடர்…..
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்