39) முஃமின்கள் (மறுமை) மஃஸர் மைதானத்தில் தேடும் வஸீலா
39) முஃமின்கள் (மறுமை) மஃஸர் மைதானத்தில் தேடும் வஸீலா
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا. فَيَأْتُونَ آدَمَ…. فَيَقُولُونَ فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا…. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، فَيَسْتَحِي ائْتُوا نُوحًا…. فَيَأْتُونَهُ، فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ…. فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ. فَيَأْتُونَهُ، فَيَقُولُ : لَسْتُ هُنَاكُمُ، ائْتُوا مُوسَى ؛ عَبْدًا كَلَّمَهُ اللَّهُ، وَأَعْطَاهُ التَّوْرَاةَ. فَيَأْتُونَهُ، فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ… فَيَقُولُ ائْتُوا عِيسَى ؛ عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ، وَرُوحَهُ. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمُ…. ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَا تَأَخَّرَ. فَيَأْتُونِي، فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மறுமை நாளில் (முஃமின்கள்) இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடலாம் என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறுவார்கள். நீங்கள் (நபி) நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள், உடனே, இறைநம்பிக்கையாளர்கள் அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை, அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸா (அலை) அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறுவார்கள். பிறகு, ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈஸாவிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறுவார்கள். பிறகு நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும்.
ஆதாரம் :- புகாரி 3361, 6565, 7410, 7439, 7510, 7516 முஸ்லிம் 193, 193 இப்னு மாஜா 4312 தாரமீ 53 அஹ்மது 2692, 12153, 12824, 13562, 13590
மேற்கூறிய ஹதீஸ் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. புரோக்கர் என்ற வார்த்தை வஹாபிஷ அமைப்புக்களின் தவறான கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இந்த வார்த்தையை நாம் பயன் படுத்துகிறோம். இந்த மாய உலகத்தில் நேரடியாக மட்டுமே அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். இன்னொன்றை வைத்து உதவி தேடுவது கூடாது. குறிப்பாக நபிமார்கள் அவ்லியாக்களை புரோக்கராக வைத்து உதவி தேடுவது ஷிர்க் என்று இஸ்லாம் கூறுகிறது என்பதாக வஹாபிஷ அமைப்புக்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும் இவ்வுலகிலும் சரி (மறுமை) மஃஸர் மைதானத்திலும் சரி முஸ்லிம்களை விடவும் அந்தஸ்தில் உயர்ந்த முஃமின்கள் கூட அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் எனும் (புரோக்கர்களை) நோக்கியே ஓடுவார்கள். அந்த இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்காமல் அவனுடைய நெருக்கத்திற்குறிய நபிமார்களிடம் சென்று எங்களுக்காக இறைவனிடம் மண்றாடுங்கள் என்று அவர்களிடம் சென்று உதவி தேடுவார்கள் என்பதாக மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
இது எப்படி சாத்தியமாகும். இந்த உலகத்தில் வணக்கங்களை கொண்டு தான் வஸீலா தேட வேண்டும். அது அல்லாமல் நபிமார்கள் நல்லடியார்களை (புரோக்கராக) வைத்து வஸீலா தேடுபவர்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்றால்! அதே ஷிர்கை தானே முஃமின்களும் (மறுமை) மஃஸர் மைதானத்திலும் செய்கிறார்களே?
இதை தடுக்க வேண்டிய நபிமார்கள், இந்த செயல் ஷிர்க் நீங்கள் இறைவனிடம் கேளுங்கள் என்று கூறாமல், அதை தடுக்காமல், முஃமின்களே! நீங்கள் மற்ற நபியிடம் சென்று மண்றாடுங்கள் என்று கூறுவது பெரும் ஷிர்க் இல்லையா? இதை தடுக்க வேண்டிய இறைவன் முஃமின்களுக்காக பிழை பொருப்பு தேடுவதற்காக முன்வந்த இறைதூதர் ﷺ அவர்களுடைய பிரார்த்தனையை அங்கிகரித்தது வஹாபிஷ தவ்ஹீத் ஜமாஅத்தின் சட்டப் பிரகாரம் மாபெரும் ஷிர்க் இல்லையா? நடுநிலையாக சிந்தியுங்கள்.
முக்கிய குறிப்பு :- (மறுமை) மஃஸர் மைதானத்தில் ஒன்றுபட்ட முஸ்லிம் முஃமின்கள் செய்யும் அழகிய ஆலோசனையை பற்றி மேற்கூறிய ஹதீஸ் தெளிவு படுத்தியுள்ளது. மீண்டும் அவை பின்வருமாறு.
يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا
மறுமை நாளில் (முஃமின்களான) இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடலாம் என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள்.
ஒட்டுமொத்த முஃமின்களும் (மறுமை) மஃஸர் மைதானத்தில் இவ்வாறு ஆலோசனை செய்வதற்குரிய முக்கியக் காரணம் என்ன? இந்த பழக்கம் அவர்களுக்கு எப்போதிலிருந்து உண்டானது என்பதை வஹாபிஷ அமைப்புக்கள் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த மாட்டார்களா?
நாம் வெளிப்படையாகவே கூறுகிறோம் ஒவ்வொரு இறைதூதர்களையும் பின்பற்றிய சமூகத்தினர் குறிப்பாக முஃமின்கள் தனக்கும் தன்னுடைய சமூகத்திற்கும் அதிக கஷ்டங்கள் வரும் போதும், அந்த சமுதாயத்தில் வாழ்ந்து வந்த நபிமார்கள் அவ்லியாக்களிடம் சென்று தம் தேவையை இறைவனிடம் சொல்லி பெற்று தாருங்கள் என்று கேட்பார்கள். சில சமயங்களில் அவர்கள் மரணித்து விட்டால்! இந்த முஃமின்கள் அவர்களை வஸீலாவாக முன் வைத்து தம் தேவைகளை இறைவனிடம் கேட்டு அதனை பெற்றுக் கொள்வார்கள். இது நடைமுறையில் இருந்தது. (இதை யூத நஸாராக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். இன்ஷா அல்லாஹ் இது பற்றி பின்னர் தெளிவு படுத்தப்படும்.)
ஆக இந்த நடைமுறை அன்று முதல் இன்று வரை முஃமின்களிடம் இருந்து வந்த காரணத்தால் தான் (முஃமின்கள்) மறுமை மஃஸர் மைதானத்தில் வஸீலா எனும் ஏகத்துவ பிரார்த்தனை நாடினார்கள். இந்த பிரார்த்தனை இஸ்லாத்தில் மூல பிரார்த்தனையாக இருந்த காரணத்தால் எந்த நபிமார்களும் இதை மறுக்க வில்லை. ஷிர்க் என்று கூறவில்லை. இந்த பரிந்துரையை இப்போது எம்மால் செய்ய முடியாது என்று ஏனைய நபிமார்கள் கூறியது மட்டுமின்றி, இந்த (வஸீலா) பரிந்துரையை மற்ற நபியிடம் சென்று கேட்டால் நன்றாக இருக்கும் என்று அனோசனை கூறியதை மேற்கூறிய ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் காண முடிகிறது.
குறிப்பு :- இந்த உலகத்தில் முஸ்லிம்கள், முஃமின்கள் இறைவனுடைய நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் அவ்லியாக்களிடத்தில் நேரடியாக சென்று நீங்கள் அல்லாஹ்விடம் தம் தேவைகளை கேட்டு பெற்றுத் தாருங்கள் என்று கேட்பார்கள். மேலும் நபிமார்கள் அவ்லியாக்கள் மறைந்த பின்னர் அவர்களை மூலமாக வைத்து அல்லாஹ்விடம் எங்கள் தேவையை கேட்டு பெற்றுக் கொண்டார்கள். இது சம்பந்தமான முழு ஆதாரங்களையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் விரிவாக பதிவிடப்படும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்