38) வஸீலா தேடுங்கள் என்ற 5:35 இறைவசனம் யாரைக் குறித்து பேசுகிறது

321

38) வஸீலா தேடுங்கள் என்ற 5:35 இறைவசனம் யாரைக் குறித்து பேசுகிறது

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ 

 

குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழியை (வஸீலாவை கொண்டு) தேடிக் கொள்ளுங்கள்.

சூரா மாயிதா ஆயத் 35

 

இந்த வசனத்தில் (يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا) யா அய்யுஹல்லதீன ஆமனு என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் நம்பிக்கையாளர்களை குறிக்கும். மேலும் (اتَّقُوا اللّٰهَ) த்தக்குல்லாஹ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் அல்லாஹ்வுக்கு பயந்து நடப்பவர்கள், தக்வாதாரிகளை குறித்து பேசுகிறது.

 

இந்த இரு வார்த்தைகளிலும் நபிமார்கள், அவ்லியாக்கள், முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரையும் முழுமையாக குறிப்பிட்டு  இறைவன் கூறி விட்டான். அதன் பின்னர் தான் (وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ) வப்தவு இலைஹில் வஸீலத என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழியை (வஸீலாவை கொண்டு) தேடிக்கொள்ளுங்கள்.

 

ஆக இந்த வசனத்தின் பிரகாரம் நபிமார்கள், அவ்லியாக்கள், முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரும் வணக்க வழிபாடுகளை கொண்டு தான் வஸீலா தேட வேண்டும் என்ற கருத்தை வஹாபிஷ அமைப்புக்கள் முன் வைத்துள்ளார்கள்.

 

இது போன்ற கருத்துக்கள் முற்றிலும் தவறாகும். காரணம் மேற்கூறிய வசனத்திலுள்ள (يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ) அய்யுஹல்லதீன ஆமனு த்தக்குல்லாஹ் என்ற இரு வார்த்தைகளும் இந்த இடத்தில் முஸ்லிம்கள் முஃமின்களை மட்டுமே குறித்து பேசுகிறதே! தவிர அவ்லியாக்கள், நபிமார்கள் அனைவரையும் குறித்துப் பேசவில்லை. இது போன்ற இன்னும் ஒரு வசனத்தை பாருங்கள்.

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள்.

 

சூரா தவ்பா ஆயத் 119

 

மேற்கூறிய வசனத்தை தெளிவான முறையில் பாருங்கள் :-

 

(يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا)

 

(யா அய்யுஹல்லதீன ஆமனு) நம்பிக்கையாளர்களே! இதன் கருத்து முஸ்லிம்களை குறித்து பேசுகிறது.

 

(اتَّقُوا اللّٰهَ)

 

(த்தக்குல்லாஹ்) அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். இந்த இடத்தில் இதன் கருத்து முஃமின்களை குறித்து பேசுகிறது.

 

(وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏)

 

(வகூனு மஅஸ் ஸாதிகீன்) இன்னும் உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள். இதன் கருத்து அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உண்மையார்களான நபிமார்கள் அவ்லியாக்களுடன் சேர்ந்திருப்பதை குறித்து பேசுகிறது.

 

மேற்கூறிய வசனத்தை உற்று நோக்கி பாருங்கள் (يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ) யா அய்யுஹல்லதீன ஆமனு த்தக்குல்லாஹ் என்ற இரு வார்த்தைகளும் முஸ்லிம்கள், முஃமின்கள், அவ்லியாக்கள், நபிமார்கள் அனைவரையும் குறித்து பேசுகிறது என்றால்! அதற்கு பின்னுள்ள வாசகம் (وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏) (வகூனு மஅஸ் ஸாதிகீன்) இன்னும் நீங்கள் உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள் என்ற வார்த்தையை இறைவன் யாரை குறித்து சொல்கிறான்? உங்களால் விளக்க முடியுமா?

 

தவ்ஹீத் ஜமாஅத்தின் பார்வையில் மேற்கூறிய வசனத்தின் அர்த்தமாகிறது. நம்பிக்கையாளர்களே! (அதாவது) முஸ்லிம்கள், முஃமின்கள், அவ்லியாக்கள், நபிமார்களே! அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். இன்னும் (நீங்கள்) உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள்.

 

இந்த அர்த்தத்தின் அடிப்படையில் பார்க்கும் போது முஸ்லிம்கள், முஃமின்கள், அவ்லியாக்கள், நபிமார்கள் வேறு உண்மையாளர்கள் வேறு என்றல்லவா! அர்த்தமாகும். மேலும் முஸ்லிம்கள், முஃமின்கள், அவ்லியாக்கள், நபிமார்கள் அனைவரும் உண்மையாளர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்றல்லவா! அர்த்தமாகும். இது போன்ற வஹாபிஷ அர்த்தங்கள் குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

குறிப்பு :- மேற்கூறிய இரு வசனத்தையும் இணைத்துக் கூறுகிறோம் தெளிவு பெறுங்கள் :- நம்பிக்கையாளர்களே! (ஈமான் கொண்ட முஸ்லிம்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், (முஃமின்களாக மாறிக் கொள்ளுங்கள்)  மேலும் (அத்தகைய நீங்கள்) அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உண்மையார்களான (நபிமார்கள் அவ்லியாக்களுடன்) சேர்ந்திருங்கள். மேலும் (சேர்ந்திருப்பது மட்டுமின்றி) அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழியை வஸீலாவாக முன்னிருத்தி (அவர்களை கொண்டும், ஏனைய வணக்கங்களை) கொண்டும் தேடிக் கொள்ளுங்கள் என்ற கருத்தையே வெளிப்படையில் மேற்கூறிய இரு வசனங்களும் சர்வ சாதாரணமாக நமக்கு  தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.