4) அல்லாஹ்விற்கு இரு கால் பாதம் உள்ளதா?

166

அல்லாஹ்விற்கு (இரு) கால் பாதம் உள்ளதா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏

 

குர்ஆன் கூறுகிறது கெண்டைக் கால் அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.

சூரா கலம் ஆயத் 42

 

அல்லாஹ்வின் கொண்டைக் கால் அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் என்பதாகக் குறிப்பட்டு கூறப்பட்டுள்ளது. அலலாஹ் கொண்டைக் காலை அகற்றுவதற்கும் மக்கள் ஸுஜூது செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது அல்லாஹ் ஏன் இவ்வாறு கூறவேண்டும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு கொண்டைக் கால் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று நாமும் உருவம் கற்பிக்கக்கூடாது. ஆகவே மேற்கூறப்பட்ட ஆயத்திற்கு நேரடி அர்த்தம் வைப்பது முற்றிலும் தவறாகும். அதற்கு மாற்றமாக கொண்டக்கால் என்பதற்கு திரை என்று மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அதாவது அல்லாஹ்விற்கும் மக்களுக்கும் மத்தியிலுள்ள திரை அகற்றப்படும் நாள் என்று வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.

 

♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- (அல்லாஹ்விற்கும் மக்களுக்கும் மத்தியிலுள்ள) திரை (மறுமையில்) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும். அச்சமயம் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يُلْقَى فِي النَّارِ وَتَقُولُ : هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘போதும்! போதும்!’ என்று கூறும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4585

 

அல்லாஹ் தன்னுடைய கால் பாதத்தை நரகில் வைப்பான் அச்சமயம் அது போதும் போதும் எனக்கூறும் என்பதாக குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் தன்னுடைய கால் பாதத்தை ஏன் நரகில் வைக்க வேண்டும்? கால் பாதத்தை நரகில் வைப்பது என்பது அல்லாஹ் நரகிற்கு செல்வதற்கு சமமாகும் அல்லவா? இவ்வாறு அல்லாஹ்விற்கு கால் பாதம் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று நாமும் உருவம் கற்பிக்கக்கூடாது. ஆகவே மேற்கூறிய ஹதீஸிக்கு நேரடி அர்த்தம் கொடுப்பது முற்றிலும் தவறாகும். அதற்கு மாற்றாக கால் பாதம் என்பதற்கு சக்தி என்று மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அதாவது அல்லாஹ் தன்னுடைய சக்தியை கொண்டு நரகத்தை வழுப்படுத்துவான் அச்சமயம் அது போதும் போதும் எனக்கூறும் என்று வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.

 

♦️எனவே மேற்கூறிய ஹதீஸிக்கு சரியான அர்த்தம் :- (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய தன்னுடைய சக்தியை கொண்டு நரகத்தை வழுப்படுத்துவான் அப்போது அது, ‘போதும்! போதும்! எனக்கூறும் என்று மற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.