4) கப்ரு ஸியாரத் செய்வதற்கு பூரண அனுமதி இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது

526

4) கப்ரு ஸியாரத் செய்வதற்கு பூரண அனுமதி இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அன்றி, அவர்களில் எவர் மரணித்து விட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (ஸியாரத்து செய்யும் நோக்கில்) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே மரணித்தும் இருக்கின்றனர்.

சூரா தவ்பா ஆயத் 84

 

இறைவசனத்தின் பிரகாரம் காஃபிர்களாக மரணித்து விட்டால்! அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும் அவர்களின் கப்ருகளை ஸியாரத்து செய்ய நிற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களாக மரணித்து விட்டால்! அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும் அவர்களின் கப்ருகளை ஸியாரத் செய்ய முன் நிற்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

عَنِ ابْنِ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களை கப்ருகளை சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றை ஸியாரத்து செய்யுங்கள்.

 

அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 977, 1977 அபூதாவூத் 3235, 3698 திர்மிதி 1054

 

عَنِ ابْنِ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கப்ருகளை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதாகிய எனக்கு, எனது தாயாருடைய கப்ரை ஸியாரத் செய்ய அனுமதி தரப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். அவை உங்களுக்கு மறுமை (வாழ்க்கையை) நினைவூட்டும்.

 

அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1054

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَقْبَلَتْ ذَاتَ يَوْمٍ مِنَ الْمَقَابِرِ فَقُلْتُ لَهَا‏ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مِنْ أَيْنَ أَقْبَلْتِ‏ قَالَتْ‏‏ مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ فَقُلْتُ لَهَا‏‏ أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ‏ قَالَتْ‏‏ نَعَمْ‏ كَانَ قَدْ نَهَى ثُمَّ أَمَرَ بِزِيَارَتِهَا

 

ஒரு நாள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரிலிருந்து வருகிறேன் என்று கூறினார்கள். கப்ருகளுக்கு ஸியாரத் செய்யக்கூடாது என இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றை சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அபீ முலைகா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 1432

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ، فَتَسْتَغْفِرَ لَهُمْ قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ قُولِي السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம் இறைவன் பகீஉ என்ற மையவாடிக்கு சென்று (கப்ருவாசி)களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான்’ அச்சமயம் (ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “யா ரஸுலல்லாஹ்! நான் (கப்ருகளில் இருப்ப)வர்களுக்காக என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியார் என்று தொடங்கி லாஹிகூன் என்று முடியும் மேற்கூறிய துஆக்களை கற்றுத் தந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 974, அஹ்மது 25855

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي زِيَارَةِ الْقُبُورِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத்து செய்வதற்கு (பெண்களுக்கு) சழுகை வழங்கினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1570

 

عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ فَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، كَانَتْ‏ تَزُورُ قَبْرَ عَمِّهَا حَمْزَةَ كُلَّ جُمُعَةٍ

 

நிச்சயமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா நாயகி ரலியல்லாஹுஅன்ஹா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரை ஸியாரத் செய்து வந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அலி இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 1436 ரஸ்ஸாக் 6715

 

عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ‏ كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي قُبُورَ الشُّهَدَاءِ عِنْدَ رَأْسِ الْحَوْلِ فَيَقُولُ‏ السَّلاَمُ عَلَيْكُمْ قَالَ‏ وَكَانَ أَبُو بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ يَفْعَلُونَ ذَلِكَ‏

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்யும் போது அவர்களை நோக்கி ஸலாம் கூறுவார்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரும் அப்படியே செய்து வந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- முஹம்மது இப்னு இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் :- தபரானி 3/241, ரஸ்ஸாக் 6716

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 2/407

 

குறிப்பு :- ஆரம்பத்தில் கப்ருகளை ஸியாரத் செய்வதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்த தடையானது முற்காக நீக்கப்பட்டு அவைகளுக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டது. ஆக கப்ரு தர்ஹாக்களை ஸியாரத் செய்வது இஸ்லாத்தின் பார்வையில் முக்கியமான ஓர் ஸுன்னத்தாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.