4) கேள்வி :- இறைதூதர் ﷺ அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அனுமதியின்றி அவர்களை திருமணம் செய்தார்களா? 

83

  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ إِذَا رَجُلٌ يَحْمِلُكِ فِي سَرَقَةِ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி’ என்றார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். என்று (ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூற) அப்போது நான் (மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்’ என்று சொல்லிக் கொண்டேன்.

நூல் ஆதாரம் :- புஹாரி  7011 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை திருமணம் செய்து கொள்வதாக இரு முறை கண்ட கணவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் அந்த கணவு நனவாக வேண்டும். அது நிறைவேற வேண்டும் என்று மனதால் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விரும்பியுள்ளார்கள் என்ற செய்திகளை நம்மால் காண முடிகிறது.

குறிப்பு :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பூரன அனுமதியுடனும் அவர்களின் பெற்றோர்களின் பூரண அனுமதியுடனும் தான் அன்னை அவர்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்தார்கள் என்ற நற்செய்தியை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

WORLD ISLAM YSYR ✍️       அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.