4) சிறுவர்களும் இளைஞர்களும்

165

சிறுவர்களும் இளைஞர்களும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

சிறுவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், பெரியவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்

 

َعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا ويَعْرِفْ حَقَ كَبِيرِنَا فَليْسَ مِنَّا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நம்மில் சிறுவருக்கு இரக்கம் காட்டாதவரும் நம்மில் பெரியவரின் உரிமையை அறியாதவரும் நம்மை சார்ந்தவரில்லை.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 4943 அஹ்மது 7073 ஹாகிம் 195

 

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்பியுங்கள்

 

عَنْ أَيُّوبُ بْنُ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு தந்தை பிள்ளைக்கு அழகிய ஒழுக்கத்தை விட சிறந்த ஒரு வெகுமதியை தந்திட இயலாது.

 

அறிவிப்பவர் :- அய்யூப் இப்னு மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1952, 16717

 

சிறுபிள்ளைகளை அரவணைத்துக் கொள்ளுங்கள்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ نَاسٌ مِنَ الْأَعْرَابِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا أَتُقَبِّلُونَ صِبْيَانَكُمْ فَقَالُوا نَعَمْ فَقَالُوا لَكِنَّا وَاللَّهِ مَا نُقَبِّلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمْلِكُ إِنْ كَانَ اللَّهُ نَزَعَ مِنْكُمُ الرَّحْمَةَ

 

கிராமவாசிகள் சிலர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையைப் பறித்து விட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2317 இப்னு மாஜா 3665 அஹ்மது 24291

 

சிறுபிள்ளைகளுடன் இனிமையாக பலகுங்கள்

 

عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?’ என்று கூடக் கேட்பார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6129, திர்மிதி 1989

 

சூரியன் மறைந்த பின் சிறுபிள்ளைகளை வெளியில் அனுப்பாதீர்கள்

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَجْنَحَ اللَّيْلُ أَوْ قَالَ جُنْحُ اللَّيْلِ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ العِشَاءِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சூரியன் மறைந்த பின்னர் இருள் பரவம் வேளைகளில் அதிகளவில் ஷைத்தான்கள் வெளியேறுகின்றன. அதனால் இவ்வாறான நேரங்களில் உங்கள் சிறு பிள்ளைகளை வெளியில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3280, 3304 3316

 

நல்ல முறையில் ஒழுக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்து கொடுங்கள்

 

عَنْ أَيُّوبُ بْنُ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “ஒரு தந்தை பிள்ளைக்கு அழகிய ஒழுக்கத்தை விட சிறந்த ஒரு வெகுமதியை தந்திட இயலாது.

 

அறிவிப்பவர் :- அய்யூப் இப்னு மூஸா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் திர்மிதி 1952 அஹ்மது 16717

 

இளைஞர்களே! மாய உலகில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنْكَبِي فَقَالَ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ الْقُبُورِ ‏فَقَالَ لِي ابْنُ عُمَرَ إِذَا أَصْبَحْتَ فَلاَ تُحَدِّثْ نَفْسَكَ بِالْمَسَاءِ وَإِذَا أَمْسَيْتَ فَلاَ تُحَدِّثْ نَفْسَكَ بِالصَّبَاحِ وَخُذْ مِنْ صِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ وَمِنْ حَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ فَإِنَّكَ لاَ تَدْرِي يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ غَدًا ‏

 

என்னை வளைத்துப் பிடித்(து அணைத்)தவர்களாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இவ்வுலகில் ஒரு நாடோடியைப் போல அல்லது வழிப்போக்கனைப் போல வாழப் பழகிக் கொள். மண்ணறைக்குச் சென்று விட்டவர்களின் நினைவை மனதில் வைத்துக் கொள். காலையில் எழும்போது மாலை வரை (உயிரோடு) இருப்போம் என்று உறுதி கொள்ளாதே! மாலையை அடைந்தால் (மறுநாள்) காலை வரை இருப்போம் என்றும் உறுதி கொள்ளாதே! நோய்வர முன் உன் உடல் நலத்தைப் பயன் படுத்திக் கொள்; மரணம் வருமுன் உன் வாழ்வைப் பயன் படுத்திக் கொள். அப்துல்லாஹ்! நாளைக்கு உனது பெயர் என்னவாயிருக்கும் என்று உனக்குத் தெரியாது (அப்துல்லாஹ்வா அல்லது மய்யித் சடலமா என்று)

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2333 அஹ்மது 4764

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.