4) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து திருமண தினங்களில் மௌலிது கவி பாடல்கள்
4) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து திருமண தினங்களில் மௌலிது கவி பாடல்கள்
ﻋَﻦِ ﺍﻟﺮَّﺑِﻴْﻊِ ﺑِﻨْﺖِ ﻣَﻌُﻮْﺫِ رَضِيَ اللَّهُ عَنْهَا ﻗَﺎﻟَﺖْ ﺩَﺧَﻞَ ﻋَﻠﻰَ ﺍﻟﻨَّﺒِﻲُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻏَﺪَﺍﺓَ ﺑُﻨِﻲَ ﻋَﻠَﻲّ ﻭَﺟُﻮَﻳْﺮِﻳَّﺎﺕٌ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺎﻟﺪَّﻑ ﻳَﻨْﺪُﺑْﻦَ ﻣَﻦْ ﻗُﺘِﻞَ ﻣِﻦْ ﺁﺑَﺎﺋِﻬِﻦَّ
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தப் ரபான் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் :- ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3700, திர்மிதி 1010, 4276
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திருமணத்தை (மக்களுக்கு) விளம்பரப்படுத்துங்கள். அதை பள்ளியில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் தப் ரபான் அடியுங்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 1089
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاضْرِبُوا عَلَيْهِ بِالْغِرْبَالِ (أي بالدف)
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திருமணத்தை (மக்களுக்கு) விளம்பரப்படுத்துங்கள். மேலும் தப் ரபான் அடியுங்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1895
திருமண நிகழ்வின் போது தப் ரபான் கருவிகளை கொண்டு இசைப்பதும் மௌலிது கவி பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்