4) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
4) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
பாஸ்வொர்த் ஸ்மித் என்ற அறிஞசர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
சிறப்புக்கான பாசாங்குகளும், சீரான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் சிறப்பாகவும் இருந்தவர்முஹம்மது. தெய்வீக கட்டளைக் கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
நூல் :- Muhammad and Muhammadanism 92
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்ற அறிஞசர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கமுடியும்.
The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936
மகாத்மா காந்தி என்ற அறிஞசர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும்போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். முஹம்மது நபி நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டுவந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன.அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது! மேலும் கூறினார் ஆட்சி புரியும் அமைச்சர்கள் (முஹம்மது) நபி பெருமானின் வகுத்த சீர்திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்
Young India என்ற பத்திரிக்கை
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்