4) நபி முஹம்மத் ﷺ அவர்கள் எனக்கு விழா எடுக்காதீர்கள் என்று கூறினார்களா?

268

நபி முஹம்மத் ﷺ அவர்கள் எனக்கு விழா எடுக்காதீர்கள் என்று கூறினார்களா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்கள் வீடுகளை கப்ருஸ்தானங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது கப்ரை (ரவ்ளா ஷரீபை) பெருநாளாக எடுக்காதீர்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 2042 அஹ்மது 8804

 

மேற்கூறிய ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருவிதமான விடயங்கள் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். அந்த இருவிதமான விடயத்தின் அடிப்படை அர்த்தம் என்ன என்பதை வேறுவிதமான ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்துப் பார்க்கலாம்.

 

1) உங்கள் வீடுகளை கப்ருஸ்தானங்களாக ஆக்காதீர்கள்! என்று ஏன் நபி முஹம்மத் ﷺ அவர்கள் கூறினார்கள்?. இதன் அர்த்தம் தான் என்ன என்பது பற்றி பார்க்கலாம்

 

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ إِنَّ مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூறுகின்ற வீட்டுக்கும், அல்லாஹ்வை நினைவு கூறாமலிருக்கும் வீட்டுக்கும் இடையிலான வித்தியாசம் உயிருள்ளவருக்கும் உயிரற்றவருக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றதாகும்.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6407

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்கள் வீடுகளை (தொழுகை ஓதல் நடைபெறாத) கப்ருஷ்தானமாக ஆக்கிவிடாதீர்கள் சூரத்துல் பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் வீடுகளிலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 780, திர்மிதி 2877 அஹமது 7821, 8443, 8915, 9042

 

ஆரம்ப ஹதீஸில் அல்லாஹ்வை ஞாபகம் செய்யப்படும் வீடுகளுக்கும் அது அல்லாத வீடுகளுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் உயிருள்ளவருக்கும் உயிரற்றவருக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றதாகும். அதாவது உயிருள்ள மனிதர்கள் வாழும் வீட்டிற்கும் மரணித்தவர்கள் வாழும் கப்ருக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றது. அடுத்த ஹதீஸில் உங்கள் வீடுகளை கப்ருஷ்தானமாக ஆக்கிவிடாதீர்கள் திருக்குர்ஆனை ஓதி வாருங்கள் என்று ஆர்வம் ஊட்டியுள்ளார்கள்.

 

பதில் :- உங்கள் வீடுகளை கப்ருஷ்தானங்களாக ஆக்கிவிடாதீர்கள் என்பதன் அர்த்தம் :- உங்கள் வீடுகளில் தொழுகை, திருக்குர்ஆன், திக்ருகள், ஸலவாத்து, மௌலிது போன்ற நல் அமல்களை செய்து வாருங்கள். கப்ருஷ்தானங்கள் போன்று அமைதிப் பூங்காவாக உங்கள் வீடுகளை வைத்திருக்காதீர்கள் என்று பொருள்படும்.

 

2) எனது கப்ரு ரவ்ளா ஷரீபை பெருநாளாக எடுக்காதீர்கள்! என்று ஏன் கூறினார்கள்? இதன் அர்த்தம் தான் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய கப்ரை ஸியாரத் செய்தாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் பரிந்துரை கட்டாயம் ஆகிவிட்டது.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 2695

 

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ‏ مَنْ زَارَ قَبْرِي، أَوْ قَالَ‏ مَنْ زَارَنِي كُنْتُ لَهُ شَهِيدًا، أَوْ شَفِيعًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். யார் என் கப்ரை ஸியாரத் செய்தாரோ (அல்லது) என்னை ஸியாரத் செய்தாரோ அவருக்கு நான் பரிந்துரைப்பவராகவும் சாட்சியாளராகவும் நான் ஆகிவிட்டேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 3453

 

ஆரம்ப ஹதீஸில் என் கப்ரை ஸியாரத் செய்ய வருபவர்களுக்கு என் ஷபாஅத் கிடைத்து விட்டது என்றும். மற்ற ஹதீஸில் என் கப்ரை ஸியாரத் செய்ய வருபவர்களுக்கு நான் சாட்சியாளராக இருப்பேன் அவர்களுக்காக பரிந்து பேசுவேன் அதாவது என் கப்ரு ரவ்ளா ஷரீபை ஸியாரத் செய்ய வாருங்கள் என்று ஆர்வம் ஊட்டியுள்ளார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

பதில் :- எனது கப்ரை ரவ்ளா ஷரீபை பெருநாளாக எடுக்காதீர்கள் என்பதன் அர்த்தம் :- பெருநாள் ஓர் வருடத்தில் இருமுறை வருகிறது, அதுபோல என்னுடைய கப்ரு ரவ்ளா ஷரீபுக்கு இருமுறை ஸியாரத்து செய்ய வராமல் தினம் தோறும் ஸியாரத்து செய்ய வாருங்கள். தெளிவான முறையில் கூறப்போனால் வருடத்தில் இருமுறை வரும் பெருநாள் போன்று என் ரவ்ளா ஷரீபை ஸியாரத்து செய்ய நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். தினம் தோறும் ஸியாரத்து செய்ய வாருங்கள் என்று பொருள்படும்.

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு விழா எடுக்காதீர்கள் என்றோ என் கப்ரு ரவ்ளா ஷரீபில் கந்தூரி விழா எடுக்காதீர்கள் என்றோ எந்த ஒரு ஹதீஸும் கிடையாது. போலி வஹாபிஷ வாதிகள் ஹதீஸ்களை தவறாக புரிந்தது மட்டுமின்றி வழிகேட்டின் பக்கம் மக்களை அழைத்து செல்ல முற்படுக்கிறார்கள். அவர்களை விட்டும் முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.