40) வஸீலா மூலம் உதவி தேடுதல் பற்றிய ஆய்வுத் தொகுப்பு

366

40) வஸீலா மூலம் உதவி தேடுதல் பற்றிய ஆய்வுத் தொகுப்பு

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

நபிமார்கள் நல்லடியார்களை வஸீலாவாக முன்நிறுத்தி தம் தேவைகளை பெற்றுக் கொள்ளலாமா?

 

வஸீலா என்பது எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் “வஸீலா” என்ற வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழிகள் பல கோணங்களில் உள்ளது. அதில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உண்மையார்களான நபிமார்கள் நல்லடியார்களை வஸீலாவாக முன்நின்று அல்லாஹ் அளவில் தன் தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வஸீலா என்று பொருள் கொள்ளப்படும்.

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற) உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள்.

 

சூரா தவ்பா ஆயத் 119

 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ

 

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியை (வஸீலாவை கொண்டு) தேடிக்கொள்ளுங்கள்.

 

சூரா மாயிதா ஆயதா 35

 

மேற்கூறிய இரு வசனங்களையும் கூர்ந்து கவனியுங்கள் (يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا) யா அய்யுஹல்லதீன ஆமனு என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் நம்பிக்கையாளர்கள் முஸ்லீம்களை குறித்து பேசுகிறது. மேலும் (اتَّقُوا اللّٰهَ) த்தக்குல்லாஹ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது இதன் பொருள் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கும் முஃமின்களை குறித்து பேசுகிறது. மேலும் (وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏) வகூனு மஅஸ் ஸாதிகீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உண்மையார்கள் அவ்லியாக்களுடன் சேர்ந்திருப்பதை குறித்து பேசுகிறது. மேலும் இரண்டாம் வசனத்தில் (وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ) வப்தவு இலைஹில் வஸீலத என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழியை (வஸீலாவை கொண்டு) தேடிக்கொள்ளுங்கள் என்ற கருத்தை குறித்து பேசுகிறது.

 

குறிப்பு :- ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உண்மையார்களான நபிமார்கள் நல்லடியார்களுடன் சேர்ந்திருப்பது மட்டுமின்றி அல்லாஹ்வின்பால் நெருங்கக்கூடிய வழியை வஸீலாவாக முன்னிருத்தி அவர்களை கொண்டே தேடிக் கொள்ளுங்கள் என்ற கருத்தை வெளிப்படையில மேற்கூறிய இரு வசனங்களும் சர்வ சாதாரணமாக தெளிவு படுத்துவதை நம்மால் காண முடிகிறது.

 

நபிமார்கள் நல்லடியார்களை வணங்கி வழிபட்ட நிலையில் வஸீலா தேடலாமா?

 

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ قُلْ اَتُـنَـبِّــــٴُـوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது (இணை வைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவை (உள்ளனவா? அவை)களை (இவைகள் மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவைகளைவிட மிக உயர்ந்தவன் என்று கூறுங்கள்.

 

சூரா யூனுஸ் ஆயத் 18

 

اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَاۤ اِلَى اللّٰهِ زُلْفٰى اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ‏

 

குர்ஆன் கூறுகிறது பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை, தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், “அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.

 

சூரா ஜுமர் ஆயத் 3

 

ஆரம்ப வசனத்தில் அல்லாஹ்வின் அடியார்களை காஃபிர்கள் வணங்கி வழிபட்டதன் நோக்கம் அல்லாஹ்விடத்தில் அவர்கள் சிபாரிசு செய்வார்கள் என்றும் மற்ற வசனத்தில் அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்ற நோக்கில் தான் அல்லாஹ் அல்லாதவர்களை நாங்கள் வணங்கி வழிபட்டோம் என்ற கருத்தையும் மேற்கூறிய இரு வசனங்களும் தெளிவு படுத்துகிறது.

 

இவைகளை தெளிவான முறையில் கூறுவதென்றால் உயிருள்ள மனிதர்களிடம் உதவி தேடுவது ஷிர்க் அல்ல. இருப்பினும் உயிருள்ள மனிதர்களை வணங்கி வழிபட்ட நிலையில் அவர்களிடம் உதவி தேடுவது ஷிர்க் இணைவைப்பாகும். அதேபோல் நபிமார்கள் நல்லடியார்களை முன்நிறுத்தி வஸீலா தேடுவது ஷிர்க் அல்ல. இருப்பினும் நபிமார்கள் நல்லடியார்களை வணங்கி வழிபட்டு அவர்களை கொண்டு வஸீலா தேடுவது ஷிர்க் இணைவைப்பாகும். இவ்விண்டுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொண்டால் மேற்கூறிய இரு இறைவசனங்களையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ளலாம்.

 

நல்லமல்களை முன்நிறுத்தி வஸீலா தேடலாமா?

 

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏

 

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

 

சூரா பகரா ஆயத் 153

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةٌ يَمْشُونَ فَأَصَابَهُمُ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2215, 2333, 3465, 5974 முஸ்லிம் 2743 அபூ தாவூத் 3387

 

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்களை முன்நிறுத்தி வஸீலா தேடுவது போல் நற்காரியங்கள் நல்லமல்களை முன்நிறுத்தியும் வஸீலா தேட முடியும் என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

நபிமார்கள் நல்லடியார்களிடம் வஸீலாவாக தம் தேவையைக்கூறி அதனை இறைவனிடம் முறையிட்டு பெற்றுக் தரும்படி கூறலாமா?

 

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏

 

அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.

 

சூரா நிஷா ஆயத் 64

 

قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ‏

 

(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம் என்று (அவர்களே) கூறினார்கள். மேலும்

 

قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَـكُمْ رَبِّىْ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏

 

அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான் என்று கூறினார்.

 

சூரா யூசுப் ஆயத் 97, 98

 

عَن ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَفِي نَجْدِنَا فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةِ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!’ துஆ கேட்டார்கள். ஸஹாபக்களில் (சிலர்) எங்கள் ‘நஜ்த்’ (ரியாத்) பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்கள்)’ என்று கேட்க, (மீண்டும்) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக!’ என்றே துஆ கேட்டார்கள். மக்கள், ‘யா ரஸூலல்லாஹ்! எங்கள் ‘நஜ்த்’ (ரியாத்) பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்களேன்)’ என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன் அங்கு தான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 7094

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ يُغِيثُنَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا

 

ஜும்ஆ நாளில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ‘ யா ரஸூலல்லாஹ்! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்’ என்று கேட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி ‘இறைவா! எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! என்று துஆ கேட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1013 முஸ்லிம் 897

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالْجِبَالِ وَالْآجَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

 

அடுத்த ஜும்ஆவில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ‘யா ரஸூலல்லாஹ்! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்’ என்றார். உடனே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கையை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’ என்று துஆ கேட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1013 முஸ்லிம் 897

 

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ خَيْرَ التَّابِعِينَ رَجُلٌ يُقَالُ لَهُ أُوَيْسٌ وَلَهُ وَالِدَةٌ وَكَانَ بِهِ بَيَاضٌ فَمُرُوهُ فَلْيَسْتَغْفِرْ لَكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் தாபியீன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று
உங்களுக்காக பிழை பொறுக்கத்
தேடிக் கொள்ளுங்கள் என்று
தோழர்களுக்குக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2542 அஹ்மது 266 மிஷ்காத் 582

 

அல்லாஹ்விடம் நேரடியாக பாவமன்னிப்புத் தேடவேண்டும் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் பல இடங்களில் கூறிய போதிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்களை வஸீலாவாக முன்நிறுத்தி எங்கள் பாவங்களை மன்னிக்கும் படி எங்களுக்காக நீங்கள் இறைவனிடம் துஆ கேட்டு அதனை பெற்றுத் தாருங்கள் என்ற கருத்துக்களை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் பல இடங்களில் வழியுறுத்திக் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

பிறப்பதற்கு முன்பே இருதித்தூதரை முன்நிறுத்தி வஸீலா தேடியுள்ளார்களா?

 

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ‏

 

குர்ஆன் கூறுகிறது எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) பிள்ளைகளை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

 

சூரா பகரா ஆயத் 146

 

أن اليهود من قبل مبعث محمد عليه السلام ونزول القرآن وكانوا يقولون : اللهم افتح علينا وانصرنا بالنبي الأمي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே யூதர்கள் (வேதக்காரர்கள் அனைவரும் தன் சொந்த பிள்ளைகளை அறிந்து வைத்திருப்பது போல்) இறுதிநபி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றியும் இறுதிவேதம் திருக்குர்ஆனை பற்றியும் அறிந்து வைத்திருந்தனர். மேலும் யுத்தங்களில் வெற்றிபெற இறைவனிடம் உம்மி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டை கொண்டு எங்களுக்கு உதவி செய்வாயாக! (போர்களத்தில்) வெற்றியை தருவாயாக என்று பிராத்தனை (செய்து வந்தார்கள். பின்னர் இறுதிநபியை இறைவன் அனுப்பி வைத்தபோது யூதர்கள் அவர்களை மறுத்து விட்டனர்). இது சம்பந்தமாக

 

சூரா பகரா ஆயத் 89 இறங்கியது. விளக்கவுரை” தப்ஸீர் ராஸீ 3/180

 

وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْۙ وَكَانُوْا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُوْنَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْا فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا کَفَرُوْا بِهٖ فَلَعْنَةُ اللّٰهِ عَلَى الْكٰفِرِيْنَ‏

 

அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!

 

சூரா பகரா ஆயத் 89

 

أن اليهود كانوا يقولون :- اللهم انصرنا عليهم بالنبي المبعوث في آخر الزمان

 

(திருக்குர்ஆன் வேதத்தை இறுதிநபி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலாமாக இறைவன் இறக்கி வைப்பான் என்பதை யூதர்கள் வேலைக்கார்களை கொண்டு அறிந்து வைத்திருந்தார்கள். மேலும் யுத்தகளங்களில் வெற்றிபெறும் நோக்கில்) இறைவனிடம் நீ கடைசி காலத்தில் தூதராக இறக்கிவைக்க இருக்கும் நபி அவர்களின் பொருட்டை கொண்டு எங்களுக்கு உதவி செய்வாயாக! என்று பிராத்தனை (செய்து வந்தார்கள். பின்னர் இறுதிநபியை இறைவன் அனுப்பி வைத்தபோது யூதர்கள் அவர்களை மறுத்து விட்டனர்). இது சம்பந்தமாக 

 

சூரா பகரா ஆயத் 89 இறங்கியது. விளக்கவுரை” தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ராஸீ, தப்ஸீர் தபரி 2/123

 

யூதர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களை வஸீலாவாக முன்நிறுத்தி இறைவனின் தன் தேவைகளை பெற்றுக் கொண்டனர். இறைவன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதித்தூதராக அனுப்பி வைத்தபோது அவர்களையும் அவர்களுக்கு இறக்கி வைத்த இறைவேதத்தையும் அத்தகைய யூதர்கள் மறுத்து விட்டனர் என்ற கருத்தை மேற்கூறிய வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قَالَ يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي فَقَالَ اللَّهُ يَا آدَمُ وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ قَالَ يَا رَبِّ لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَىَ قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ فَقَالَ اللَّهُ صَدَقْتَ يَا آدَمُ إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ

 

أخرجه الحاكم في المستدرك هذا حديث صحيح الإسناد وصححه أيضاً القسطلاني والزرقاني في المواهب اللدنية ورواه الحافظ السيوطي في الخصائص النبوية وصححه

 

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் செய்த (தவறை) ஏற்றுக்கொண்ட பின் யா அல்லாஹ்! முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் என்னை மன்னித்திடுவாயாக! எனப் துஆ கேட்டார்கள். அல்லாஹ் கேட்டான் ஆதமே! நீ எப்படி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிந்தாய்? இன்னும் நான் அவர்களை படைக்கவும் இல்லை எனக் கூற, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், எனது இறைவா! நீ உனது கரத்தால் என்னைப் படைத்து எனக்குள் ரூஹை அனுப்பிய சமயத்தில் நான் என் தலையை உயர்த்தி அர்ஷைப் பார்த்தேன். அங்கே லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ் என உன் பெயருடன் மற்றுமோர் பெயரையும் இணைத்திருந்தாயல்லவா? இதனால் நான், நீயே உன் பெயருடன் மற்றொருவரின் பெயரைச் சேர்த்திருக்கிறாய் என்றால், நிச்சயமாக அவர் உன்னிடத்தில் சகல சிருஷ்டிகளையும் விட மிகப் பிரியத்திற்குரியவராக இருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ் ஆதமே! நீர் கூறியது உண்மைதான். அவர் சகல படைப்புகளை விடவும் என்னிடத்தில் மிக மிக நெருக்கமானவரே! எனவே அவரின் பொருட்டால் நீர் என்னிடம் பிழை பொறுக்கக் கேட்டதால் நான் உம்மை மன்னித்து விட்டேன் எனக் கூறிய அல்லாஹ் அவாரை நான் படைத்திடாவிட்டால் உம்மையும் படைத்திருக்க மாட்டேன் என்றான்.

 

அறிவிப்பவர் :- உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 2/615 கிதாபுத் தாரீக் 2/615

 

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பி வைப்பதற்கு முன்பே அவர்களை வஸீலாவாக முன்நிறுத்தி இறைவனின் தன் தேவைகளை கேட்டு அதனை பெற்றுக் கொண்டார்கள் என்ற கருத்து நம்மால் காண முடிகிறது.

 

மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை வஸீலாவாக முன்நிறுத்தி தம் தேவைகளை பெற்றுக் கொள்ளலாமா?

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيٍّ دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… اللَّهُمَّ اغْفِرْ لأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا بِحَقِّ نَبِيِّكَ وَالأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي

 

هذا الحديث رواه الطبراني في الكبير والأوسط وصححه الحاكم وابن حبان وذكره الهيثمي في مجمع الزوائد ورجاله رجال الصحيح ومحمود سعيد ممدوح رفع المنارة وهو حديث حسن

 

பாத்திமா பின்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு சென்றிருந்தார்கள் (அச்சமயம்) இறைவா ! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னும் உள்ள நபிமார்களின் பொருட்டாலும், என் தாயா் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 3/1377 தப்ராணி” கபீர் 20324

 

عَنْ الْعُتْبِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ اللَّهَ يَقُولُ {وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا} [النساء: 64] وَقَدْ جِئْتُكَ مُسْتَغْفِرًا مِنْ ذُنُوبِي مُسْتَشْفِعًا بِكَ إلَى رَبِّي ثُمَّ أَنْشَأَ يَقُولُ يَا خَيْرَ مَنْ دُفِنَتْ بِالْقَاعِ أَعْظُمُهُ … فَطَابَ مِنْ طِيبِهِنَّ الْقَاعُ وَالْأَكَمُ نَفْسِي الْفِدَاءُ لِقَبْرٍ أَنْتَ سَاكِنُهُ … فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ ثُمَّ انْصَرَفَ الْأَعْرَابِيُّ فَحَمَلَتْنِي عَيْنَيَّ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ فَقَالَ يَا عُتْبِيُّ الْحَقْ الْأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللَّهَ تَعَالَى قَدْ غَفَرَ لَهُ

 

நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறைக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராம அரபி வந்தார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு இந்த வசனத்தை (4:64) ஓதினார். மேலும், ‘இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு பின்வரும் கவிதைகளையும் பாடினார். மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே! உங்கள் எலும்புகளின் நறுமணத்தால் மண்ணும் மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன. நீங்கள் துயிலுறும் இந்த மண்ணரைக்கு என் உயிர் அர்ப்பணம்! தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது
தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன. பின்பு அந்த கிராமப்புற அரபி சென்றுவிட்டார். நான் அயர்ந்து உறங்கினேன். அச்சமயம் கனவில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டபோது, அவர்கள் என்னிடம், ‘அல் உத்பீ! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நற்செய்தி கூறும்!’ என்று சொன்னார்கள்.

 

அறிவிப்பவர் :- அல் உத்பீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ஸீர் இப்னு கஸீர், அல் மஜ்மூஉ” ஷரஹ் அல் முஹத்தப் 8/256, 257

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تحيَّرتُم فِي الْأُمُورِ فَاسْتَعِينُوا بِ‏أَهْلِ الْقُبُورِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடிக் கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். மிர்காத் 408 தப்ஸீர் ரூஹுல் பயான் 5/380

 

மரணித்த ஏனைய நபிமார்கள் நல்லடியார்களின் பொருட்டை கொண்டு வஸீலா எனும் ஏகத்துவ பிரார்த்தனை செய்தது மட்டுமின்றி அதன் பலன்களையும் அதிகளவில் பெற்றுக் கொண்டார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

நபிமார்கள் நல்லடியார்களையும் நல்லடியார்கள் நபிமார்களையும் முன்நிறுத்த வஸீலா தேடினார்களா?

 

اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهٗ وَيَخَافُوْنَ عَذَابَهٗ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا‏

 

குர்ஆன் கூறுகிறது இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர் பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஏனென்றால், நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே!

 

சூரா இஸ்ரா ஆயத் 57

 

وَقَوْلُهُ ﴿ أَيُّهُمْ أَقْرَبُ ﴾ مَعْنَاهُ يَنْظُرُونَ أَيُّهُمْ أَقْرَبُ إِلَى اللَّهِ فَيَتَوَسَّلُونَ بِهِ

 

அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்
தம்மில் இறை நெருக்கம்
பெற்றவர்கள் யார் என்பதைக்
கவனித்து அவரைக் கொண்டு
வஸீலாவாக்கிய நிலையில்
இறைவனை வணங்குவார்களே
அப்படியாப்பட்டவர்கள்.

 

சூரா இஸ்ரா ஆயத் 57 விளக்கவுரை ருஹூல் மஆனி 8/94

 

நபிமார்கள் நல்லடியார்களை வணங்கி வழிபட்ட நிலையில் அழைக்கின்றனர். அவர்களை வணங்கி அல்லாஹ்வை நெருங்க முற்படுகின்றனர். ஆனால் நபிமார்கள் நல்லடியார்கள் நல்ல முறையில் தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர் என்ற கருத்தை மேற்கூறிய வசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ رَجُلٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى الصَّلاةِ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ وَبِحَقِّ مَمْشَايَ هَذَا لَمْ أَخْرُجْ أَشَرًا وَلا بَطَرًا، وَلا رِيَاءً وَلا سُمْعَةً خَرَجْتُ اتِّقَاءَ سَخَطِكَ وَابْتِغَاءَ مَرْضَاتِكَ ، وَأَسْأَلُكَ أَنْ تُعِيذَنِي مِنَ النَّارِ وَتَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ إِلا وُكِّلَ بِهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَسْتَغْفِرُونَ لَهُ

 

هذا الحديث صححه وحسنه جملة من كبار الحفاظ كابن خزيمة والمنذري وشيخه ابو الحسن والعراقي وابن حجر والشرف الدمياطي وعبد الغني المقدسي وابن ابي حاتم وغيرهم

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் ஒருவர் தனது வீட்டை விட்டு தொழுகைக்காக (பள்ளிவாயலுக்குச்) செல்ல வெளியாகிய பின்னர். யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் யாசிப்போரின் பொருட்டினால் கேட்கிறேன். இப்பாதை வழியே தொழுகைக்காக நடந்து செல்வோரின் பொருட்டினால் கேட்கிறேன். நிச்சயமாக நான் தீங்கிழைப்பவனாகவோ, பெருமை மிக்கவனாகவோ, பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகவோ அல்லது புகழுக்காகவோ, வெளியாகவில்லை. மாறாக, உனது கோபத்தை தவிர்ந்து கொள்வதற்கும் உனது திருப்பொருத்தத்தை நாடியுமே வெளியாகினேன். ஆகவே நரகிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் எனது பாவங்களை மன்னிக்குமாறும் உன்னிடம் கேட்கின்றேன். நிச்சயமாக பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை, என்று கூறுகிறாரோ, அல்லாஹ் அவருக்காக (அவரது துஆவை) ஏற்றுக்கொள்வான். மேலும் அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புக் கோருவார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 778 அஹ்மது 11156

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்கும் போது வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஸாலிஹான மனிதர்களின் கொண்டு வஸீலா தேடியது மட்டுமின்றி இவ்வாறு பிரார்த்தனை செய்யும்படி கற்றும் கொடுத்துள்ளார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ خَيْرَ التَّابِعِينَ رَجُلٌ يُقَالُ لَهُ أُوَيْسٌ وَلَهُ وَالِدَةٌ وَكَانَ بِهِ بَيَاضٌ فَمُرُوهُ فَلْيَسْتَغْفِرْ لَكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் தாபியீன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று
உங்களுக்காக பிழை பொறுக்கத்
தேடிக் கொள்ளுங்கள் என்று
தோழர்களுக்குக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2542 அஹ்மது 266 மிஷ்காத் 582

 

ஸஹாபாக்களை விடவும் அந்தஸ்த்தில் குறைந்தவர்கள் தாபியீன்களாகும். அந்த தாபியீன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற ஸாலிஹான மனிதர் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த மனிதரிடம் பிழைப்பு தேடும் படி அந்தஸ்தில் உயர்ந்த ஸஹாபா பெருமக்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

குறிப்பு :- ஸாலிஹான மனிதர்கள் நபிமார்களை கொண்டும் நபிமார்கள் ரஸூமார்களை கொண்டும் வஸீலா உதவி தேட முடியும், அதுபோல ரஸூல்மார்கள் அவர்களுடைய அந்தஸ்தை விடவும் குறைந்த அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற ஸாலிஹான மனிதர்களை கொண்டும் அது அல்லாத நல்லமல்களை கொண்டும் வஸீலா தேட முடியும் என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வஸீலாவாக முன்நிறுத்தி தம் தேவைகளை பெற்றுக் கொள்ளலாமா?

 

عَنْ أَبُو الْجَوْزَاءِ أَوْسُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ قُحِطَ أَهْلُ الْمَدِينَةِ قَحْطًا شَدِيدًا فَشَكَوْا إِلَى عَائِشَةَ فَقَالَتْ انْظُرُوا قَبْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْعَلُوا مِنْهُ كِوًى إِلَى السَّمَاءِ حَتَّى لَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ سَقْفٌ قَالَ فَفَعَلُوا فَمُطِرْنَا مَطَرًا حَتَّى نَبَتَ الْعُشْبُ وَسَمِنَتِ الْإِبِلُ حَتَّى تَفَتَّقَتْ مِنَ الشَّحْمِ فَسُمِّيَ عَامَ الْفَتْقِ

 

رواه الدارمي في صحيحه حسين سليم أسد الداراني رجاله ثقات وهو موقوف على عائشة وابن حجر العسقلاني تخريج مشكاة المصابيح حسن كما قال في المقدمة ومحمود سعيد ممدوح رفع المنارة وقلت هذا إسناد حسن إن شاء الله تعالى وحسن بن علي السقاف الإغاثة وهذا صريح أيضاً بإسناد صحيح والطبراني في الأوسط ورجاله رجال الصحيح غير عمرو بن مالك البكري وهو ثقة ومسند احمد اسناده صحيح

 

மதீனா மக்கள் கடும் பஞ்சம் வரட்சியால் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் (தங்களின் நிலையை) முறையிட்டார்கள். அதற்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்குச் சென்று கப்ருக்கும் வானத்திற்கும் இடையில் எந்தவொரு திரையும் இல்லாதவாறு வானத்தை நோக்கி ஒரு வழியை (துளையை) ஏற்படுத்துங்கள் என்று சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் பெரும் மழை பொழிந்தது (எந்தளவுக்கென்றால்) புற்கள் (எங்கும்) வளர்ந்ததுடன் ஒட்டகங்கள் அதிக கொழுத்ததினால் வெடித்து விடும் அளவிற்கு இருந்தன. எனவே அந்த ஆண்டு “ஆமுல் ஃபத்க்” என பெயரிடப்பட்டது.

 

அறிவிப்பவர் :- அபூ அல் ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 92

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபை கொண்டு ஸஹாபா பெருமக்கள் உதவி தேடியது மட்டுமின்றி அதன் பலன்களையும் அடைந்துள்ளார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

குறிப்பு :- வஸீலா என்னும் ஏகத்துவ பிராத்தனை என்பது இறைவனை நெருங்கிக் கூடிய ஓர் வழியாகும். வஸீலா என்பது நபிமார்கள் நல்லடியார்கள் அல்லது அல்லது அவர்களுடன் சம்மந்தப்பட்ட பொருட்களையோ, இன்னும் நாம் செய்த நல்லமல்களையோ இறைவனிடம் முன்னிலைப்படுத்தி அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தமது தேவைகளை இறைவனிடம் கேற்பதாகும். மேலும் ஷபாஅத் என்னும் மாபெரும் பரிந்துரைக்கும் வஸீலா என்று கூறப்படும். குறிப்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னிலைப் படுத்தி வஸீலா தேடுங்கள் என்ற கருத்துக்களை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.