இமாம் சத்தமிட்டு ஓதும் துஆக்களை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறுவது ஸுன்னத்தாகும்

327

இமாம் சத்தமிட்டு ஓதும் துஆக்களை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறுவது ஸுன்னத்தாகும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ { غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ } فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘இமாம் ‘கைருல் மக்லூபி அலை ஹிம் வலழ்ழாலீன்’ என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமின் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 782

 

மேற்கூறிய ஹதீஸில் தொழுகை நடத்தும் இமாம் ‘கைருல் மக்லூபி அலைஹிம் வலழ்ழாலீன்’ என்ற வசனத்தை (துஆவை) ஓதும் போது பின்தொடர்ந்தது தொழுதவர்கள் ஆமீன் கூறவேண்டும் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது. மேலும் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தமிட்டு ஓதிய துஆக்களை ஸஹாபாக்கள் செவிமடுத்து உள்ளார்கள் என்ற செய்திகளை முன்னைய பதிவுகளில் ஆதார எண்களுடன் காணமுடிந்தது.

 

இருப்பினும் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தமிட்டு ஓதிய துஆக்களுக்கு ஸஹாபாக்கள் ஆமீன் கூறினார்களா? இல்லையா? என்ற செய்திகள் ஹதீஸ்களில் இடம் பெறவில்லை. தெளிவான முறையில் கூறப்போனால் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுபவர்களுக்கு ஸஹாபாக்கள் ஆதாரமும் கிடையாது. ஆக இமாம் ஒருவர் துஆ ஓதினால், அந்த துஆவை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறுவது ஸுன்னத் என்ற கருத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியுத்திக் கூறியுள்ள ஹதீஸ் பின்வருமாறு.

 

عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَجْتَمِعُ مَلَأٌ فَيَدْعُو بَعْضُهُمْ وَيُؤَمِّنُ بَعْضُهُمْ إِلَّا أَجَابَهُمُ اللَّهِ تَعَالَى

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் (ஒருவர் துஆ ஓத) பிரார்த்தனை செய்ய, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் (துஆவை) பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை.

 

அறிவிப்பவர் :- ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 5478

 

மேற்கூறிய ஹதீஸ் ஸஹீஹானது, அதனை அறிவித்த அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் உருதி செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு

 

(أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة قال حدثني أبو هبيرة عن حبيب بن مسملة الفهري)

 

مجمع الزوائد 10/266 رواه الطبراني ورجاله رجال الصحيح وهو حسن الحديث قلت بل هو ثقة في رواية العبادلة عنه ومنهم أبو عبد الرحمن المقرئ وهو عبد الله بن يزيد المصري وكذلك سائر رجاله كلهم ثقات من رجال التهذيب غير بشر بن موسى وهو ثقة وثقه الدّارقطني والخطيب في التاريخ والذهبي في سير أعلام النبلاء

 

وقال نعيم بن حماد سمعت بن مهدي يقول لا أعتد بشيء سمعته من حديث بن لهيعة إلا سماع بن المبارك ونحوه تهذيب التهذيب ابن حجر 5 /328 وقال عبد الغني بن سعيد الأزدي إذا روى العبادلة عن بن لهيعة فهو صحيح بن المبارك وابن وهب والمقري وذكر الساجي وغيره مثله تهذيب التهذيب ابن حجر 5 /330

 

மேற்கூறிய ஹதீஸை இமாம்கள் அறிஞர்கள் ஸஹீஹ் என்று கூறிய பின்னர் ஹதீஸ்களை அரைகுறையாக படித்த வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் பலஹீனமான செய்தி என்று கூறும் வாதமும் அதன் தெளிவும்.

 

மேற்கூறிய ஹதீஸை ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அபூ ஹுபைரா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். இதில் இடம் பெறும் ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 42ல் மரணம் அடைந்துள்ளார்கள் என்றும். அபூ ஹுபைரா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 41ல் தான் பிறந்துள்ளார்கள் என்றும் ஓர் கருத்து கிதாபுகளில் உள்ளது.

 

இந்த ஒரு கருத்தை அளவுகோலாக வைத்து 1 வயது இடைவெளி இருக்கும் அபூ ஹுபைரா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் எப்படி மேற்கூறிய ஹதீஸை ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அறிவிக்க முடியும் என்ற கருத்தை வாதமாக முன் வைத்து மேற்கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல என்பதே இவர்களின் வாதமாகும். இதுபோன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை. காரணம்

 

قال‏ :-‏ توفي حبيب بن مسلمة سنة ٤٥ هـ

 

ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி (42ல் மரணிக்க வில்லை) அதற்கு மாற்றமாக 45ல் தான் மரணம் அடைந்துள்ளார்கள்.

 

நூல் ஆதாரம் :- இப்னு அஸாகிர்” தாரீஹ் திமஸ்க் 10390, தாரீஹ் மதீனா திமஸ்க் 7/37 மேலும்

 

قال :- عبد الله بن هبيرة ولد سنة ٤٠ وتوفي سنة ١٢٦ هـ

 

அபூ ஹுபைரா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி (41ல் பிறக்க வில்லை) அதற்கு மாற்றமாக 40ல் பிறந்து 126ல் மரணம் அடைந்துள்ளார்கள்.

 

நூல் ஆதாரம் :- தஹ்தீபுத் தஹ்தீப் 6/56

 

இவைகளை கூர்ந்து கவனியுங்கள். ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அபூ ஹுபைரா ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கும் மத்தியில் ஒரு வயது இடையெளி கிடையாது. அதற்கு மாற்றமாக சுமார் 5 வயது இடவெளி உள்ளது. எனவே இன்றைய காலகட்டத்தில் 5 அல்லது 6 வயதில் திருக்குர்ஆனை கூட மனனம் செய்கிறார்கள் என்றால். ஒரு ஹதீஸை 5 வயதிற்கு முன்னர் ஹபீப் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அபூ ஹுபைரா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே மேற்கூறிய நபிமொழி ஸஹீஹானது, ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

குறிப்பு :- துஆ ஓதும் இமாம் ஆமீன் கூறினாலும் சரி கூறாவிட்டாலும் சரி குறிப்பாக துஆக்களை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறினால் இதற்கு கூட்டு துஆ எனப்படும். எனவே பர்ளு தொழுகைக்கு பின்னர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய துஆக்களை செவிமடுத்த ஸஹாபாக்கள். அந்த துஆக்களுக்கு நிச்சயம் ஆமீன் கூறித்தான் இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வஹாபிஷ தவ்ஹீத் சகோதர சகோதரிகளே! ஸஹாபக்கள் ஆமீன் கூறினாலும் சரி அல்லது கூறாமல் விட்டுவிட்டாலும் சரி அது உங்களுக்கு ஆதாரம் கிடையாது. உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் மட்டும் தானே ஆதாரம். ஆக இமாம் ஒருவர் சத்தமிட்டு துஆ ஓதுவது மார்க்கத்தில் உள்ளது. அந்த துஆக்களை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறுவதும் மார்க்கத்தில் உள்ளது. இவ்விரண்டும் நபிவழி ஸுன்னத் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்து தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே பர்ளு தொழுகைக்கு பின்னர் இமாம் சத்தமிட்டு துஆ ஓதுவது ஸுன்னத்தாகும். அந்த துஆவை செவிமடுப்பவர்கள் ஆமீன் கூறுவதும் ஸுன்னத்தாகும். ஆக கூட்டு துஆ சுன்னத்தாகும். இதனை மறுக்க முற்படுவது வழிகெட்ட பித்அத்தாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.