சோதனை காலங்களில் ஒவ்வொரு பர்ளு தொழுகையிலும் குனூத்துன் நாஸிலா ஓதுவது நபிவழியாகும்

33

சோதனை காலங்களில் ஒவ்வொரு பர்ளு தொழுகையிலும் குனூத்துன் நாஸிலா ஓதுவது நபிவழியாகும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا حِينَ قُتِلَ الْقُرَّاءُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَزِنَ حُزْنًا قَطُّ أَشَدَّ مِنْهُ

 

(குர்ஆனை மனனம் செய்து) அதை முறைப்படி ஓதத் தெரிந்ததிருந்த (எழுபது) நபர்கள் கொல்லப்பட்டபோது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து) குனூத் ஓதினார்கள். இந்தத் தருணத்தை விட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அவர்களை நான் பார்த்ததில்லை.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1300

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَنَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக ஒரு மாதகாலம் குனூத் ஓதினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1003

 

عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

 

அறிவிப்பவர் :- பராஉ இப்னு ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1207, 1208

 

عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي رَكْعَةِ الْأُخْرَى مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَمَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ

 

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் லுஹ்ர், இஷா, சுபஹ் ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறிய பிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 797

 

குறிப்பு :- குனூத்துன் நாஸிலா என்பது பிரச்சினை காலங்களில் அதாவது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், தீயசக்திகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ளு தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூக்கு பின்னால் குனூத் ஓதியுள்ளார்கள். இதனை காரணமாக வைத்து முஸ்லிம்களுக்கு பிரச்சினை தொல்லைகள் ஏற்படும் காலகட்டங்களில் நாமும் ஒவ்வொரு பர்ளு தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூக்கு பின்னால் குனூத்துன் நாஸிலா எனும் தோதனைக் கால பிரார்த்தனை ஓதுவது ஸுன்னத்தாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.