42) கொடி ஏற்றுவதும் சந்தனக்கூடு இழுப்பதும்

191

42) கொடி ஏற்றுவதும் சந்தனக்கூடு இழுப்பதும்

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

بَابُ مَا قِيلَ فِي لِوَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொடி பற்றிய தலைப்பில் புஹாரி ஷரீபில் தனி பாடமே இருக்கும் போது. கொடிகளுக்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கும் வஹ்ஹாபிஷ ஆலிம்களை நாம் என்னவென்று வர்ணிப்பது.

 

عَن ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ الْقُرَظِيُّ أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ صَاحِبَ لِوَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ الْحَجَّ فَرَجَّلَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொடியை எடுத்துச் செல்பவராயிருந்த கைஸ் இப்னு ஸஅத் அல் அன்சாரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ் செய்ய விரும்பியபோது தலைவாரினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸஅலபா இப்னு அபீ மாலிக் அல்குரழீ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 2974

 

عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ قَالَ سَمِعْتُ الْعَبَّاسَ يَقُولُ لِلزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا هَاهُنَا أَمَرَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَرْكُزَ الرَّايَةَ

 

ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஹஜூன் என்னுமிடத்தைச் சுட்டிக் காட்டி) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்கு தான் கொடியை நடச் சொன்னார்கள்’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- நாஃபிஃ இப்னு ஜுபைர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 2976

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ وَلِوَاؤُهُ أَبْيَضُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். அச்சமயம் அவர்களின் கொடி வெண்மையாக இருந்தது.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 2817, அபூ தாவூத் 2592 நஸாயி 2866

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ رَايَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَاءَ وَلِوَاؤُهُ أَبْيَضَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (பெரிய) கொடி கருப்பாகவும் (சிறிய) கொடி வெண்மையாகவும் இருந்தது.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1681 இப்னு மாஜா 2818

 

عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ وَمَا نَرْجُوهُ فَقَالُوا هَذَا عَلِيٌّ فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ

 

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், ‘இதோ, அலீ அவர்கள்!’ என்று கூறினர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

 

அறிவிப்பவர் :- ஸலமா இப்னு அக்வஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2975. 4209 முஸ்லிம் 1807, 2407

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلاَ أَنَا حَبِيبُ اللَّهِ وَلاَ فَخْرَ وَأَنَا حَامِلُ لِوَاءِ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ فَخْرََ وَأَنَا أَكْرَمُ الأَوَّلِينَ وَالآخِرِينَ وَلاَ فَخْرَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் அல்லாஹ்வின் ஹபீப் அதில் எனக்கு பெருமை கிடையாது, இன்னும் மறுமையில் லிவாவுல் ஹம்த் புகழுக்குறிய கொடியை சுமப்பவனும் நானே அதில் எனக்கு பெருமை கிடையாது, இன்னும் ஆரம்பத்திலும் இறுதியிலும் நானே சந்கையானவன் அதில் எனக்கு பெருமை கிடையாது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3976, 3148, 3610, 3615, 3616, அஹ்மது 2546

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடி இருந்தது மட்டுமின்றி அந்த கொடியினை சுமப்பதற்கு ஓர் ஸஹாபி தோழர் இருந்தார்கள் என்றும் போருக்கு சொல்லும் போது கொடிகளை சுமந்து செல்லும் படியும் அதனை நட்டும் படியும் கூறுவார்கள் என்றும் மறுமையில் அவர்களிடம் புகழுக்குரிய கொடி கைகளில் கொடுக்கப்படும் என்ற கருத்துக்களை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

கொடி ஏற்றுவதும் அதனை சுமப்பதும் சந்தனக்கூடு இழுப்பதும் ஓர் அடையாதற்காகவே அன்றி வணக்கத்திற்காக அல்ல.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَحَدُهُمَا يُنْصَبُ وَقَالَ الْآخَرُ يُرَى يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘நடப்படுகிற கொடி ஒன்று உண்டு’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார். மற்றொருவர், ‘அது மறுமை நாளில் (கொடியை) காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அதாவது புஹாரி 3186, 3187 முஸ்லிம் 1736,1677 இப்னு மாஜா 2872

 

கொடி ஓர் அடையாளமாகும். அதனை கொண்டு ஓர் நிகழ்வை அடையாளப் படுத்த முடியும். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! கொடி ஏற்றுவதும் அதனை சுமப்பதும் அடையாளப்படுத்தவே அன்றி வணக்கத்திற்காக அல்ல என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

கேள்வி :- கொடி ஏற்றினால் நன்மை கிடைக்கும் என்று கூறலாமா?

 

பதில் :- கொடி ஏற்றுவது அடையாளத்திற்காகவே அன்றி வேறில்லை. அதை ஏற்றுவதால் நன்மை கிடைக்கும் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.

 

கேள்வி :- நபிமார்கள் நல்லடியார்களின் நினைவு தினமாக ஏற்றப்படும் கொடியை ஏன் சுமந்து செல்கிறார்கள்? அதை ஏன் கன்னியப்படுத்துகிறார்கள்?

 

பதில் :- நபிமார்கள் நல்லடியார்கள் உயிருடன் இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்னரும் அந்த இடங்களில் ரஹ்மத்து இறங்குகின்றன. இது பற்றி முன்னர் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற இடங்களில் உள்ள கொடிகளிலும் அந்த ரஹ்மத்து சூழ்ந்து கொள்ளும். அடுத்து அந்த கொடிகள் ஏனைய கொடிகள் போன்று அல்லாமல் திருக்குர்ஆன் வசனங்கள் அல்லது அல்லாஹ்வின் இறைதூதரின் பெயர்கள் எழுதப்பட்ட நிலையில் அது தோற்றம் அளிக்கும் காரணத்தால் அதனை அவர்கள் சுமந்து செல்கிறார்கள். இதில் எவ்வித குற்றமும் இல்லை. கஹ்பா என்பது கடவுள் அல்ல அது ஒரு கற்களால் கட்டப்பட்ட ஓர் கட்டிடம் அதற்கு போற்றப்படும் போர்வை அதற்கு ஷவூதி வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் அதற்கு கொடுக்கும் கன்னியங்களை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். இதை காரணமாக வைத்து கஃபாவிற்கு போற்றப்படும் போர்வை வணக்கம் என்று கூறலாமா? நடுநிலையாக யோசிங்கள்.

 

கேள்வி :- தமிழர்கள் தேர் இழுக்கிறார்கள். அதுபோல இந்தியா போன்ற இடங்களில் சந்தனக்கூடு இழுக்கிறார்கள். இது கூடுமா?

 

பதில் :- பொதுவாகவே மாற்று மதத்தவர்கள் கொடி ஏற்றுகிறார்கள். நாமும் கொடி ஏற்றுகிறோம் இரண்டுக்கும் மத்தியில் வித்தியாசம் இருப்பது போல தேருக்கும் சந்தனக்கூடுக்கும் மத்தியில் நிறைய வித்தியாசம் உள்ளது. தேர் வணங்கும் நோக்கில் இழுக்கப்படுகிறது அதாவது குமரன் என்ற வேலன் கடவுளை குன்டம் எனும் தேரில் வைத்து வணங்கும் நோக்கில் தமிழர்கள் இழுத்து செல்கிறார்கள். அதுபோல வணங்கும் நோக்கில் நன்மை கிடைக்கும் நோக்கில் சந்தனக்கூடு இழுப்பது கூடாது. அது அல்லாமல் அடையாளம் என்ற நோக்கில் கொடி சந்தனக்கூடு இழுப்பதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

குறிப்பு :- கொடி ஏற்றுவது ஓர் அடையாளமே அன்றி வணக்கம் கிடையாது. கொடி ஏற்றுவதுற்கும் அதனை சுமந்து செல்வதற்கும் இஸ்லாத்தில் பூரண அனுமதி உள்ளது. நபிமார்கள் நல்லடியார்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்றப்படும் கொடி வேறு அது அல்லாத மற்றுமத நாட்டுப்பற்று மத இயக்க கொல்கை கொடிகள் வேறு என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.