43) அவ்லியாக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்று கூறும் ஆதாரமும் தெளிவும்
43) அவ்லியாக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்று கூறும் ஆதாரமும் தெளிவும்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ فَأَكَلَ مِنْهَا فَجِيءَ بِهَا فَقِيلَ أَلَا نَقْتُلُهَا قَالَ لَا فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
யூதப் பெண் ஒருத்தி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். அச்சமயம் அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2617 முஸ்லிம் 2190
யூதப் பெண் நல்லவளா? கெட்டவளா? என்றுகூட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு இருக்க அவ்லியாக்களை எந்த விதத்திலும் கண்டறிய முடியாது என்ற தவறான கருத்துக்களை வாதமாக முன் வைப்பவர்களே! கீழ் கானும் திருக்குர்ஆன் ஹதீஸ்களை கூர்ந்து கவனியுங்கள்.
وَمِمَّنْ حَوْلَــكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۛ وَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ ؔۛمَرَدُوْا عَلَى النِّفَاقِلَا تَعْلَمُهُمْ
குர்ஆன் கூறுகிறது உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் (முனாஃபிக்) நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலை பெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்.
சூரா தவ்பா ஆயத் 101
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 34, 2459, 3178 முஸ்லிம் 58
ஆரம்ப இறைவசனத்தில் நபியே முனாஃபிக் நயவஞ்சகர்களை நீர் அறிய மாட்டீர் என்று கூறப்படுகிறது. அதற்கடுத்த ஹதீஸ்களில் முனாஃபிக் நயவஞ்சகர்களை அறிந்து கொள்ளும் அடையாளங்களை பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு கூறுகின்றார்கள். இதிலிருந்து என்ன விளங்குகின்றது? அல்லாஹ்வின் படைப்புக்கள் சுயமாக எதனையும் அறிந்து கொள்ள முடியாது. அது நபிமார்கள் நல்லடியார்களாக இருந்தாலும் சரியே!. அது அல்லாமல் நபிமார்கள் நல்லடியார்களுக்கு ஏதோ ஒரு வகையில் அல்லாஹ் அறிவித்து கொடுத்தால் அல்லது அதன் அடையாளங்களை பற்றி அறிவித்து கொடுத்தால். அதனை கொண்டு அவைகளை அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்துக்களை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ تُوُفِّيَ صَبِيٌّ، فَقُلْتُ طُوبَى لَهُ عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَلَا تَدْرِينَ أَنَّ اللَّهَ خَلَقَ الْجَنَّةَ وَخَلَقَ النَّارَ فَخَلَقَ لِهَذِهِ أَهْلًا وَلِهَذِهِ أَهْلًا
அன்சாரிகளில் ஒரு குழந்தை மரணித்த போது, அதன் நல்லடக்கத்திற்காக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், யா ரஸூலல்லாஹ்! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன். அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2662 அபூ தாவூத் 4713
ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த குழந்தை சுவனவாதி என்று கூறியதற்குறிய காரணத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த காரணத்தை மறுக்கவில்லை. அதற்கு மாற்றமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்திற்கு செல்பவர்களையும் நரகத்திற்கு செல்பவர்களையும் அல்லாஹ் முன்கூட்டியே நியமனம் செய்து விட்டான் என்ற கருத்தை முற்படுத்தியுள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ مِرَارًا ثُمَّ قَالَ مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لاَ مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا وَاللَّهُ حَسِيبُهُ وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ
ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்ன்னிலையில் புகழ்ந்து பேசினார். அதைக் கேட்ட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, “உங்களில் எவருக்காவது தன் சகோதரரைப் புகழ்ந்து ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் “இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை செய்பவன் ஆவான். அல்லாஹ் இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :- அபூபக்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2662
ஒரு மனிதரை அறியாத நிலையில் அவர்கள் பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசக்கூடாது. அது அல்லாமல் ஒரு மனிதரை பற்றி நன்கு அறிந்திருந்தால் அவரை பற்றி அறிந்த விடயங்களை கொண்டு பேச முடியும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது. இருப்பினும் மேற்கூறிய இரு ஹதீஸ்களையும் காரணமாக வைத்து அல்லாஹ்வின் அவ்லியாக்கள் நல்ல மனிதர்களை கண்டறிய முடியாது அவர்களை புகழ்ந்து பேசக்கூடாது என்ற முடிவுக்கு வஹாபிஷ அமைப்புக்கள் வருவது முற்றிலும் தவறு என்பதை கீழ் கானும் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ اَنَسِ بْنِ مَالِكِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ مَرُّوْا بِحَنَازَةَ فَاَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُبْنُ الْخَطَّابِ مَا وَجَبَتْ قَالَ هَدَا اَثْنَيْتُمْ عَلَيْه خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள் அந்த ஜனாஸாவை பற்றி) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1278, முஸ்லிம் 1578
عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ وَجَبَتْ فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا وَجَبَتْ قَالَ هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ لَهُ الجَنَّةُ وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ
ஒருமுறை மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, மரணித்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உறுதியாகி விட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் மரணித்தவரின் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1367
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் நல்ல மனிதர்களை பற்றி நன்கு அறிந்திருந்தால் அவர்களுடைய வரலாறுகள் பற்றி தெரிந்திருந்தால் அவர்களுடைய சிறப்புக்களை பற்றி புகழ்ந்து பேச முடியும். அவர்கள் சுவன வாதிகள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- அல்லாஹ்வின் அவ்லியா நல்ல மனிதர் என்று ஒரு கூட்டம் ஒருவரை பார்த்து கூறினாள். கூறிய அந்த கூட்டம் அந்த மனிதரை பற்றி நன்கு அறிந்திருந்தால். அவருடைய தன்மைகளை பற்றி அறிந்திருந்தால் குறிப்பாக அந்த கூட்டம் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்கள் முஃமின்களாக இருந்தால் அவர்கள் கூறும் அந்த கருத்துக்களை தாராளமாக ஏற்றுக் கொள்ள முடியும். அது அல்லாமல் மாற்று மதத்தவர்கள் முஸ்லிம் என்ற போர்வையிலுள்ள வஹ்ஹாபிஷ ஷீஆக்கள் கூறினால் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள கூடாது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்