44) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை யூத கிறிஸ்தவர்கள் கூட அடையாளம் கண்டுள்ளார்கள்
44) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை யூத கிறிஸ்தவர்கள் கூட அடையாளம் கண்டுள்ளார்கள்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தங்கள் நபிமார்களின் கப்ருஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்’ எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 436
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكِ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ أَوِ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ، أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ
உம்முஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அபீ ஸீனியாவில் தாம் கண்ட கோவிலைப் பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அது ‘மாரியா’ என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரின் கப்ருஸ்தானத்தை (மஸ்ஜித்) வணக்கத்தலாமாக அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 434. 427, 1341, 3873, முஸ்லிம் 528, நஸாயி 704, அஹ்மது 24252
நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலமாக எடுத்துக் கொண்ட யூத கிறிஸ்தவர்கள் பற்றிய செய்திகள் இன்னும் பல ஹதீஸ் கிரந்தங்களில் புஹாரி 435, 1330, 1390, 3453, 4441, 4443, 5815 முஸ்லிம் 529, 531, 532 நஸாயி 703, 2046, 1443 அஹ்மது 1691, 1884, 21604, 21625, 21774, 24060, 24513, 24895, 25129, 25916, 26149, 26178, 26350, 26353 இடம் பெற்றுள்ளது.
நபிமார்கள் நல்லடியார்கள் என்று யூத கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது? அவர்களுடைய கப்ருஸ்தானங்களை எவ்வாறு அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். முஸ்லிம்கள் முஃமின்களால் அவ்லியாக்களை கண்டறிய முடியாது என்று வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் கூறுகின்றனர். இருப்பினும் மேற்கூறிய ஹதீஸ்களில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை அடையாளம் கண்டு அவைகளை யூத கிறிஸ்தவர்கள் வணக்கஸ்தங்களாக எடுத்துக் கொண்டனர் என்ற கருத்தை தரும் பல ஹதீஸ்கள் வஹ்ஹாபிஷ அமைப்புக்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது.
குறிப்பு :- யூத கிறிஸ்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டார்கள் என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். நபிமார்கள் நல்லடியார்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களை பற்றி அறிந்திருந்தவர்கள் அவர்களுடைய பண்புகளை பற்றி புரிந்திருந்தவர்கள் முஸ்லிம்கள் முஃமின்களே அன்றி வேறில்லை. அத்தகைய முஸ்லிம்கள் முஃமின்கள் அந்த நபிமார்கள் நல்லடியார்கள் மரணித்த போது அவர்களை குறிப்பிட்ட சில இடங்களில் நல்லடக்கம் செய்துவிட்டு அவர்களுடைய கப்ருஸ்தானங்களை அடையாளப்படுத்தி அதனைக் கொண்டு வஸீலா உதவி தேடும் நோக்கில் முஸ்லிம்கள் முஃமின்கள் ஸியாரத் செய்யும் வழக்கம் அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தது. இதனை தவறாக புரிந்து கொண்ட யூத கிறிஸ்தவர்கள் அந்த கப்ருஸ்தானங்களை கைபற்றி அதனை மஸ்ஜித் வணக்கஸ்தலமாக எடுத்துக் கொண்டார்கள்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்