45) அனாதைகளும் ஏழை எளியவர்களும்

86

அனாதைகளும் ஏழை எளியவர்களும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

அனாதைகளின் செல்வத்தை அபகரிக்காதீர்கள், அவதூறு கூறாதீர்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

 

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்கள், யா ரஸூலல்லாஹ்! அவை எவை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2766 முஸ்லிம் 89 அபூதாவூத் 2874

 

அனாதை பிள்ளைகளை தன் பிள்ளைகள் போன்று பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களை வெறுக்காதீர்கள், அரவணைத்து கொள்ளுங்கள்

 

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَعَدَ يَتِيْمٌ مَعَ قَوْمٍ عَلَي قَصْعَتِهِمْ فَيَقْرُبَ قَصْعَتَهُمْ شَيْطَانٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்தக் கூட்டத்தினருடன் ஓர் அனாதை பிள்ளையும் அவர்களுடைய பாத்திரத்தில் சேர்ந்து சாப்பிடுமோ அப்பாத்திரத்தின் அருகில் ஷைத்தான் நெருங்கமாட்டான்.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு ஹிப்பான் 414

 

அனாதைகளை அரவணைத்து கொள்ளுங்கள், ஏழைகளுக்கு உணவளியுங்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ اَنَّ رَجُلاً شَكَا اِلَي رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ فَقَالَ اِمْسَحْ رَاْسَ الْيَتِيْمِ وَاَطْعِمِ الْمِسْكِيْنَ

 

ஒரு மனிதர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தனது உள்ளம் கடினமாக இருப்பதாக முறையிட்டார்”, அனாதையின் தலையைத் தடவிக்கொடுத்து வருவீராக! மேலும் ஏழைக்கு உணவளிப்பீராக.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 9018

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.